பக்கங்கள்

வெட்டுப்பட்டால் பெட்டிக்குள்…

Related image


வெட்டுப்பட்டால் பெட்டிக்குள்
பெட்டிக்கு வந்த பிறகு
எல்லோருமே சமம்-
சதுரங்கக் காய்கள்” –
சதுரங்கக் காய்களில்
ராணிகளுக்குத் தான் மதிப்பு
அவற்றால் தான் யாரையும்
எப்படியும் வெட்ட முடியும்-
கவிழ்க்க முடியும்-
அழிக்க முடியும்.
மேலோட்டமாகப் பார்த்தால்......
ராஜாக்களுக்குத்தான் சக்தி அதிகம்.
ஆனால் அந்த சக்தியைக்
கூட்டுபவர்களாகவும்
குறைப்பவர்களாகவும்,
குலைப்பவர்களாகவும்
இருப்பவர்கள் எப்போதும்
ராணிகளாய் இருக்கிறார்கள்.
சாம்ராஜ்யங்கள் பல சரிந்ததற்கு
ராஜாக்களைக்காட்டிலும்
ராணிகள் தான் காரணம்.

Related image
எவ்வளவு வலிமை பெற்ற சதுரங்கக்
காயாக இருந்தால் என்ன?
அது இருக்கும் இடத்தில் தான்
அதன் சக்தி
தீர்மானிக்கப்படுகிறது.
மூலையில் முடங்கினால்
ராணியைச் சின்ன கூனி கூட
வீழ்த்தலாம்
என்பதற்கு ராமாயணம்
மட்டுமல்ல
சதுரங்கமும் சான்று.
பக்கவாட்டிலேயே நகர்ந்தால்
நேரே வரும் பிரச்சனைகளை
எதிர்கொள்ளும் திராணி
இருக்காது என்பது
பிஷப் மூலமும்
நேரடியான எதிரிகள் மீது
மட்டுமே
கவனமிருந்தால்
மறைமுக ஆபத்துகள்
விழிகளுக்குத் தெரியாது
என்பது ரூக் மூலம்
வெளிப்படும்
வாழ்க்கைத் தத்துவம்
சதுரங்கத்தில் புலப்படும்.
சின்னச் சின்ன வெற்றிகளுக்கு
ஆசைபடாமல்
திடமான இலட்சியத்துடன்
இறுதிவரை
பயணிப்பவன்
சிப்பாயின் நிலையிலிருந்து
மிக உயர்ந்த நிலைக்கு மாற
முடியும்
என்பதற்குக் கடைசிக்
கட்டத்தில் சிப்பாய் நிலை உயரும்
காட்சியே சாட்சி.
சதுரங்கம் விளையாட்டு
மட்டுமல்ல வாழ்க்கையைக் கற்றுத் தரும்
போதனை.
இதுவரை போனவை போகட்டும்
இனிமேலாவது
விழிப்புணர்விருந்தால் போதும்.
எத்தனை காய்கள் என்பதிலும்
எப்படி அவற்றை
உபயோகப்படுத்துகிறோம்
என்பதே சூக்குமம்.
ஆனால் விளையாடி முடிந்த
பிறகும்
சதுரங்கம் கற்றுத்தருகிறது-
பெட்டிக்குள் போன பிறகு
காய்கள் எல்லாம் சமம்தான்
என்கிற உண்மையை.
மரணம்
எல்லோரையும் சமமாக்குகிறது.
அமைதியாக்குகிறது.
ஆனால்
அதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள்
தான்
முக்கியமானவை.
பெட்டிக்குள் போனால்
ஒன்று தானே
என்பதால் சதுரங்கக்காய்கள்
சும்மா இருப்பதில்லை.
இன்னும் சொல்லப்போனால்
சதுரங்கக் காய்களுக்கு ஏது
மரியாதை?
அது நம்மிடம் இருந்துதான்
ஆரம்பமாகிறது.
எதற்கு அதிக அதிகாரம்
என்பதை நாம் தான்
தருகிறோம்-
நம்மிடமிருந்து அதிகாரத்தை
அவை எடுத்துக் கொள்கின்றன.
நமது ராஜாக்களுக்கும்
ராணிகளுக்கும்
நம்மிடம் இருந்தே அதிகாரம்
அளிக்கப்பட்டிருக்கின்றன.
பல திறமைகள்
பெட்டிக்குள் முடங்கிக்
கிடக்கின்றன
உரிய களம் இல்லாமல்
நல்ல தளம் இல்லாமல்
பெட்டி என்பது
சதுரங்கப்பெட்டி மட்டுமல்ல-
சவப்பெட்டி மட்டுமல்ல
ஆற்றலை சிறைப்படுத்தும்
அனைத்துக்குமே
அவை பொருந்தும்.

நன்றி இணையம்

*சிலர் செய்யும் அவமானப் படுத்துதல் எனும் மாயை*

Image result for செய்யும் அவமானப் படுத்துதல் எனும் மாயை

மகாத்மா காந்தி முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டபோது அவர் கணக்கைத் தொடங்கினார். மண்டேலா கால்சட்டையோடு காவல்நிலையத்தில்நிறுத்தி வைக்கப்பட்டபோது, வைராக்கியத்தை வளர்த்துக்கொண்டார்.
Image result for அண்ணல் அம்பேத்கரை
அண்ணல் அம்பேத்கரை மாட்டுவண்டியிலிருந்து உருட்டிவிட்டபோது, போராட்டக் குணத்தைவளர்த்துக் கொண்டார். இப்படி எண்ணற்றோர் உலகச் சரித்திரத்தில் இடம்பெற்றதற்கு அவர்கள் சந்தித்த அவமானங்களே உந்துசக்தியாக இருந்தது.

நம்மை உற்சாகக் குறைவாக ஆக்க வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நோக்கமே நம்மைச் சோர்வடையச் செய்வதும்,நம்முடைய நம்பிக்கையைச் சீர்குலைப்பதும். நாம் உடனே மனம் உடைந்தால் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதைக் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட அவமான நிகழ்வுகளை மூளையில் வைத்துக் கொண்டு முயற்சியைத் தீவிரமாக்க வேண்டுமே தவிர, இதயத்திற்கு எடுத்துச் சென்று பதைபதைக்கக் கூடாது.
எல்லாத் துறைகளிலும் தொடக்கத்தில் தூக்கியெறியப்பட்டவர்களும், நிராகரிக்கப்பட்டவர்களுமே நிலையான சாதனைகளை நிகழ்த்தினார்கள்
அவர்களோடுநம்மை ஒப்பிட வேண்டியதில்லை, ஆனால் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.
Image result for பெர்னாட்ஷாவின்
பெர்னாட்ஷாவின் படைப்புகள் பலமுறை நிராகரிக்கப்பட்டவை. திரையில் ஜொலிக்கும் நடிகர்கள் பல அரங்கங்களின் கதவைத் தட்டி
அவமானப்படுத்தப்பட்டவர்கள். எடுத்த உடன் உலகம் யாரையும் தூக்கி வாரி உச்சி முகர்ந்து விடுவதில்லை. எனவே நமக்கு நிகழ்வது ஒன்றும் புதிதல்ல என்பதை உணர்ந்து அவமானத்திற்குப் பரிகாரம் தற்கொலை மூலம் உயிரைத் தருவதில் இல்லை, உயர்ந்து காட்டுவதில் உள்ளது என்பதை உணர வேண்டும்.
நன்றி இணையம்

கழுகு!

Image result for கழுகு!Image result for கழுகு!

கழுகாரைப் பற்றி நமக்கு என்ன தெரியும் அதிகபட்சம்? பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்ததெல்லாம், “கழுகைப் போன்ற பார்வை வேண்டும்”, பிறகுஉயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாதுஅப்படிங்கிற பழமொழிகள்தான்.
பறவை இனங்களிலே அதிக வருடங்கள் வாழக்கூடியது கழுகு மட்டுமே..அதாவது சுமார் 60 -70 வருடங்கள் வாழக்கூடிய திறன் கொண்டது கழுகு!
ஏன் திறன் கொண்டது எனச் சொல்கிறேன் தெரியுமா? அதுதான் இந்தப் பதிவின் சாராம்சமே! தொடர்ந்து படித்தால் உங்களுக்கே புரியும்.
என்னதான் கழுகுக்கு 60-70 வருட கால வாழ்க்கை சாத்தியமென்றபோதும் அது ஒன்றும் அத்துனை எளிதானதல்ல! அதாவது 60 வருட வாழ்க்கை என்பது ஒவ்வொறு கழுகும் எடுக்கும் ஒரு அதி முக்கியமான முடிவைப் பொருத்தது!
என்ன புரியவில்லையா? அதாவது வாழ்வா சாவா எனும் ஒரு இக்கட்டான சூழ் நிலையின்போது நாம் எடுப்போமல்லவா ஒரு தீர்க்கமான முடிவு, அத்தகைய ஒரு முடிவை ஒவ்வொறு கழுகும் தன் 30-வது வயதில் எடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம்!
தன்னுடைய 30 வது வயதில் இரையை கொத்தி தின்னும் அலகுகள் கூர்மை மழுங்கி போய் மிகவும் வளைந்து விடுகின்றன.
வயதாகி போன நீண்ட எடை கூடிய தடிமனான இறகுகள் நெஞ்சில் குத்திக்கொண்டு பறப்பதற்கு இடையூறாகின்றன.
இந்நிலையில் தான் கழுகிற்கு மடிவதா..இல்லை மிகவும் துன்பம் தரக்கூடிய நீண்டகால(சுமார் (5 மாதங்கள்) 150 நாட்கள்) மாற்றம் ஒன்றை ஏற்றுக்கொண்டு..
பின் அடுத்த 30 வருடகால மீதி வாழ்க்கையை ஏற்றுவாழ்வதா? எனும் முடிவை எடுக்க தயாராகின்றன..
அந்த வாழ்வா? சாவா? மாற்றத்தின் பகுதிகளான....
மலை உச்சிக்கு சென்று தன் அலகினை(வாய்,மூக்கு) பாறையில் இடித்து இடித்து பிடிங்கி எறிவது..
பின் அலகுகள் வளரும் வரை பொறுத்திருந்து அவை புத்தம் புதிதாய் வளர்ந்த பின்னர் தனது கால் நகங்களையும் அலகினை போலவே பிடுங்கி எறிவது
பின் நகங்கள் வளரும் வரை காத்திருந்து தன் சிறகின் வலுவற்ற இறகுகளை பிடுங்கி எறிவது
இவையெல்லாம் நடந்தேற 5 மாதங்கள்(150 நாட்கள்) ஆகின்றன.
பின் தன் பிரம்மாண்டமான சிறகுகளை விரித்து புத்துணர்ச்சியுடன் பறந்து மீதமுள்ள 30 ஆண்டு கால வாழ்க்கையை கழிக்கிறது கழுகு.
வாழ்வில் சில சமயங்களில், துன்பம் தரக்கூடிய, மிகவும் வலிகளுடன் கூடிய சில மாற்றங்களை நாம் மேற்கொண்டே ஆக வேண்டும்!
நாம் சில சமயங்களில் நமது பழைய நியாபகங்கள், பழக்க வழக்கங்கள், பாரம்பரிய செயல்பாடுகள் போன்றவற்றை துறக்க வேண்டும்!
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன கால வகையினானேஎனும் வள்ளுவரின் கூற்றுக்கிணங்க வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது!!
👤 *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
Image may contain: Senthil Kumar
நன்றி 👤*பெ.சுகுமார்*