பக்கங்கள்

HCL - சிவ் நாடார்

HCL - சிவ் நாடார் க்கான பட முடிவுHCL - சிவ் நாடார் க்கான பட முடிவு

HCL - சிவ் நாடார்.
ஐந்து நிமிட எனர்ஜி கதை !...

ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலக பணக்காரர்கள் வரிசையில் தவறாமல் இடம் பெறும் ஒரு தமிழ் பெயர் சிவ் நாடார்.

இந்த ஆண்டும் உலகின் முதல் நூறு பில்லினியர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிறது இந்தத் தமிழரின் பெயர். ஒரு தமிழர் இவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதில் அவரின் பெருமை இல்லை. அந்தப் பணத்தைக் கொண்டு அவர் செய்யும் நல்ல விஷயங்களில்தான் அவரது பெருமையே இருக்கிறது.

ஆம். தூத்துக்குடியில் மூலை பொழில் கிராமத்தில் பிறந்து தமிழ் வழி கல்வி பெற்று மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், கோவை கல்லூரியிலும்
PSG college of Technology BE-EEE 1962-67
ஆண்டு பட்டப்படிப்பை முடித்த சிவ் நாடார் உலகின் டாப் பில்லினியர்களில் ஒருவர்.
சிவ் நாடார் அவர்களை வீட்டில் கண்ணன் என்றே அழைப்பார்கள். எனது அப்பாவின் சகோதரி மகன் என்பதால் கண்ணத்தான் என்றுதான் நாங்கள் அழைப்போம்.

சிவ் நாடாரின் தந்தை சிவ சுப்பிரமணிய நாடார் நீதிபதியாகப் பணியாற்றியவர். நாடார் சமுதாயத்தின் முதல் வழக்குரைஞரான சிவந்தி ஆதித்தன்-கனகம் அம்மாள் அவர்களின் பேரன் இவர்.

இவரது தந்தை சிவ சுப்ரமணிய நாடார் மிடுக்கான ஒரு அதி நேர்மையான நீதிபதி. பிரதமர் நேரு ஒரு முறை சென்னை வந்திருக்கும் போது தன்னை வந்து பார்க்க வருமாறு சொல்லி அனுப்பினார்.

உடனே சிவ சுப்ரமணிய ஆதித்தன் அவர்கள் நேரு எதற்கு என்னை அழைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.
வர முடியாது என்று சொல்லி விடுங்கள் என்று சொல்லி தேசத்தின் நீதியை பிரதமரிடமே நிரூபித்துக் காட்டியவர்.
என்னதான் செல்வ வளமுள்ள குடும்பத்தில் பிறந்தாலும், அப்போதைய செல்வந்தர்களின் பிள்ளைகள் போல இவர் ஊட்டியிலோ கொடைக்கானலிலோ கான்வென்டில் படித்தவர் அல்ல. தனது ஊரின் அருகில் எங்கள் ஊர் காயாமொழி அரசு பள்ளியில் படித்தவர்.
HCL - சிவ் நாடார் க்கான பட முடிவு
இவரது தந்தை நீதிபதி சிவ சுப்ரமணிய ஆதித்தன் நீதிமானாக இருந்ததாலும்,

ஒன்பது பிள்ளைகளுக்கு தந்தை என்பதாலும் பிள்ளைகளுக்கு பணம் சேமித்து வைக்காமல் காலமாகி விட்டார்..

கல்விக்கு இவரது தாய் மாமா தினத்தந்தி சி.பா.ஆதித்தனாரிடம் அவருக்கு மிகவும் பிடித்த ஒரு நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தார். சி.பா.ஆதித்தனார் உடன் பிறந்த தன் சகோதரியின் மகன் என்றும் பாராமல் பணம் சும்மா கொடுப்பது நான்.

நான் சொல்லும் இடத்தில் படி. அங்கெல்லாம் என்னால் படிக்க வைக்க என்னால் முடிலாது என்று தன் வழக்கமான கெத்தை குடும்பத்தில் பயன் படுத்தி விட்டார்.

உடனே சிவ் நாடார் அவர்கள் தனது மாமா சி.பா.ஆதித்தனார் அவர்களிடம் சொன்ன பதில்...

"பணம் உங்களிடம் உயர்வாகவும் எங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் உங்களை விட உங்கள் காலத்தில் நான் பெரிய பணக்காரனாகி காட்டுகிறேன் என்று சவால் விட்டு விட்டு டெல்லி சென்றவர் இப்போது அம்பானிக் குடும்பத்தை அடுத்து எட்டும் தூரத்தில் உள்ளார்.

இவரது உடன் பிறந்த மூத்தவரில் ஒருவர்தான் காலம் சென்ற நீதிபதி பிரதாப்சிங் அவர்கள். இவரது கல்விக்கு துணை புரிந்து உதவியவர் இவரது சகோதரியின் கணவர் நரசிம்மன் IAS.
டெல்லி சென்றார்.

அங்கு மல்ஹோத்ரா,ஆதித்யா போன்ற குடும்ப பெயர்கள் இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு மரியாதை இருந்தது. அப்படி தன்னிடம் குடும்ப பெயர் இல்லாததால் நாடார் என்பதையே தன் குடும்ப பெயராக மாற்றிக் கொண்டார்.

வணிகத்துக்குப் பேர் போன சமூகத்தில் பிறந்திருந்தாலும் வழக்கமான வணிகத்தை அவர் தேர்வு செய்யவில்லை.
இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே அப்பொழுது வெகு சிலர் மட்டுமே செய்து கொண்டிருந்த தொழிலைத் தேர்ந்தெடுத்து அதில் இறங்கி வென்றவர்.இந்த விஷயங்கள்தான் சிவ் நாடாரை பலரிடமிருந்து வேறு படுத்துகின்றன.

சிவ் நாடார் தன் கல்லூரிப் படிப்பை முடித்த பின் டி.சி.எம். (DCM) நிறுவனத்தில் சுமார் எட்டு ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.
போதுமான அனுபவங்களைப் பெற்ற பிறகு சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக 'மைக்ரோகாம்ப்' என்ற பெயரில் டெலி டிஜிட்டல் கால்குலேட்டர்கள் விற்கும் சிறு நிறுவனத்தைத் தொடங்கினார்.

அது ஓரளவு வெற்றி பெற, 1976ஆம் ஆண்டு எச்.சி.எல். (HCL) கணினி நிறுவனத்தை நிறுவினார். முதலில் எலக்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார். வெளிநாடுகளிலிருந்து கணினி உதிரி பாகங்கள் இறக்குமதி, சிங்கப்பூரில் கணினி வன்பொருள் விற்பகம், புதிய வடிவமைப்பிலான மடிக்கணினிகள் என கணினி விற்பனையில் பல பரிமாணங்களிலும் இயங்கினார்.

கணினித் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் கணினித் துறைக்குச் சாதகமாக அமைந்தன. இந்த மாற்றங்களை எல்லாம் தனது ஏற்றத்திற்கு நன்கு பயன் படுத்திக் கொண்டார் சிவ் நாடார்.

அப்போது அமைந்த ஜனதா கட்சி ஆட்சியில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தொழில்துறை அமைச்சராக வந்து எடுத்த நடவடிக்கைகள் இந்திய தொழில் முனைவோருக்கு மிகுந்த உத்வேகமாக அமைந்தது. அந்நிய தொழில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் குறைக்கப்பட்டு இந்தியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். அந்த வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் சிவ் நாடார்.

இப்படி, ஹெச்.சி.எல் நிறுவனம் லாபம் தரும் ஒரு பெரும் நிறுவனமாக உயர்ந்து வந்த நிலையில் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தன் அம்மாவிடம் ''அம்மா இந்த பணத்தையெல்லாம் வைத்து நான் என்ன செய்யட்டும்'' என்று கேட்ட அவரிடம் ''இல்லாதவர்க்கு நல்லது செய்யப்பா'' என்ற கூறிய தனது அன்பு அம்மாவிடம் இருந்துதான் தன் ஈகைப் பண்பை வளர்த்துக் கொண்டேன் என்று மெய் சிலிர்க்கிறார் சிவ் நாடார்.

2016க்குப் பின் மட்டுமே 650 கோடியை ஏழை மாணவர்களின் கல்விக்காக செல்வழித்துள்ளார் என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு சர்வதேச நிறுவனமும் தனக்கென வரும் லாபத்தில் சமுதாய பணிக்கென ஒரு பங்களிப்பை கொடுக்க வேண்டும். சிஎஸ்ஆர் CSR Funding என்ற பெயரில் இதைக் கட்டாயமாக்கி இருக்கிறது அரசு.

அதற்காக, ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அங்கு பேருந்து நிலையம், நிழற்குடை, சாலை தடுப்புகள், தண்ணீர் தொட்டிகள் என வாங்கி வைத்து அனைத்திலும் தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பதித்து அதையும் விளம்பரமாக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில், "தான் படிக்க பணம் இல்லாமல் போன அந்த கல்விதான் ஒரு மனிதனுக்கு உண்மையான வளர்ச்சியாக இருக்கும்" என்று கூறி தமிழகத்தில் SSN பொறியியல் கல்லூரியையும் உத்திர பிரதேசத்தில் வித்யாஞான் பள்ளியையும் தொடங்கி லாப நோக்கமில்லாது, எளிய மாணவர்களின் வாழ்க்கையை மாற்றி வருகிறார். உத்திர பிரதேசத்தில் சிவ் நாடார் யுனிவர்சிட்டி என்று ஒரு பல்கலைகழகமும் உள்ளது.

உத்திர பிரதேசத்தில் இவர் நடத்தும் வித்யாஞான் பள்ளியை கண்டு அகில உலகமே வியக்கிறது.காரணம் அவர் குழந்தைகளை தேர்வு செய்யும் பாணி.

* உத்திர பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டத்திற்கும் ஒரு வித்யாஞான் பள்ளி.

* இந்த பள்ளியில் படிக்க எந்த ஒரு கட்டணமும் இல்லை.

* வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இங்கு படிக்க அனுமதி.பணம் படைத்தவர்களுக்கு இங்கு அனுமதி இல்லை.

* இவர்கள் வைக்கும் தேர்வில் 93% மதிப்பெண் பெற்றால்தான் இடம் கிடைக்கும்.முதல் மந்திரி சிபாரிசுக்காக கூட இங்கே மதிப்பெண் குறைந்தவர்களுக்கு இடம் கிடையாது.

* எல்லோரும் இங்கேயே தங்கிதான் படிக்க வேண்டும்.அதற்கும் 10 பைசா கட்டணம் கிடையாது.தரமான உணவுக்கும் பணம் இல்லை.

*படித்து முடித்த அத்தனை பேருக்கும் தனது நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களை வேலை வாங்கும் அதிகார வேலை.

* கஷ்டமான குடும்பத்தில் பிறப்பவர்கள் தன் குடும்ப சுமையால் தன்னை போல மேலே போக இயலாமல் சிரம்ப் பட கூடாது என்பதே சிவ் நாடார் அவர்களின் நோக்கம்.
இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் சாதாரணமானவை அல்ல. SSN கல்லூரி அண்ணா பல்கலைக்கழக தர வரிசையில் எப்பொழுதுமே முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது. வித்யாஞான் பள்ளி உலகத் தரத்தில் செயல்படுவது. அரசு பள்ளியில் நன்றாகப் படித்த, படிக்கும் ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயரிய கல்வியைக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை மாற்றி வருகின்றன இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அரசு பள்ளி மாணவர்கள் SSN கல்லூரியில் இலவசமாகப் பயின்று பெருநிறுவனங்களில் பணிக்குச் செல்கின்றனர்.
இந்தியா மென்பொருள் துறையில் மிகப் பெரிய இடத்தைப் பெற்றிருக்கும் நாடு. உலகப் பெரு நிறுவனங்களில் இந்தியர்கள் உயர் பதவிகளில் இருக்கின்றனர். ஆனால், கணினி வன்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட முதன்மை இந்திய நிறுவனங்களில் ஒன்று சிவ் நாடாரின் HCL நிறுவனம். தன்னைச் சுற்றி ஏற்படும் மாற்றங்களையெல்லாம் உணர்ந்து, அதை தொழிலுக்குப் பயன் படுத்தி அதில் முன்னணி இடத்தைப் பெற்றார். தொடர்ந்து வெற்றியின் ஓட்டத்திலேயே இருந்த பொழுதும் தன்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் யோசித்து அதற்கான உண்மையை கண்டறிந்து உதவிகளையும் செய்கிறார். வரும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது, வந்த வருவாயை தேவையுள்ளோருக்கு சரியான முறையில் கொடுத்தது என இரண்டு வழிகளிலுமே தாய் மொழி வழி படித்த இந்தத் தமிழர் நமக்கெல்லாம் நல்ல மோட்டிவேஷன் மட்டும் அல்ல. உலகமே இவரிடம் கற்க வேண்டியது ஏராளம்.
இவரது கொள்கையில் உறுதியான கொள்கைகள் சில எனக்கு மிகவும் பிடிக்கும்.
* பணத்திற்காக இயற்கை அழிவுத் தொழிலை செய்ய மாட்டார்.
*
அரசை ஏமாற்றி உதவி பெற மாட்டார்.
* 100%
வரியை ஏமாற்றாமல் கட்டுபவர். இரண்டாம் தர வர்த்தகமே செய்ய மாட்டார்.

* ஷேர் மார்கெட் மோசடி செய்ய மாட்டார்.

* பிரதமர்களை பார்க்க வரிசையில் போய் நிற்காமல் பிரதமரை தன் நேர்மையை மெச்ச வைத்து அவரேயே அழைக்கவும் வைப்பார்.

சில ஆண்டுக்கு முன் மூலைப்பொழில் கிராமத்திற்கு எங்களை அழைத்தார்.என் வயதான தாயார் மற்றும் குடும்பத்தோடு சென்றேன். அப்போது மதிய உணவுக்குப் பின், முந்தைய நாள் இரவு நிகழ்ச்சியின் காரணத்தால் ஒரு ஓய்வு என் அம்மாவுக்கு தேவைப்பட்டது.

அங்கு அதிக அறை இல்லை. அதனால் நான் அருகில் உள்ள காயாமொழிக்கு என் அம்மாவை அழைத்து செல்ல தயார் ஆனேன். மாலை 5 மணிக்கு திரும்ப இங்குதான் வர வேண்டும்.
அம்மாவை அழைத.துச் செல்வதை கண்ட அவர் அத்தை எங்கேயப்பா சிரமப்பட்டு அழைத்துச் செல்கிறாய் என்றார் அத்தான் சிவ் நாடார். காயாமொழி அழைத்து போய் விட்டு சாயுங்காலம் வருகிறோம் என்றேன்.
அத்தை என் அறையில் இருக்கட்டும் என்றார். அறையில் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்.நீங்கள் ஓய்வு எடுங்கள் என்றேன்.

உனக்கு இது அம்மாடா.
நீ பிறப்பதற்கு முன்பே என் அத்தை இது.
அத்தை மடியில் நான் படுத்து உறங்கியதை நான் மறக்கவில்லை என்று ஊஞ்சலில் என் வயதான அம்மாவை தூக்கி வைத்துக் கொண்டார்.

நீ போய் விட்டு மாலை வா.நான் என் அத்தையை பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

உழைக்காமலும்,நற்செயல் புரியாதவர்களையும்,யாசகம் கேட்பவர்களையும் இவருக்கு அறவே பிடிக்காது.

திருப்பதி பெருமாளின் அதி தீவிர பக்தர்.

இவருக்கு காஞ்சி காமாட்சி கோவில் பிடித்த கோவில்.இவர் இங்கு அம்பாளைக் காண போய் இருக்கும் போது கும்பாபிஷேகம் நடக்காமல் இக் கோவிலின் நிலை கண்டு மன வேதனை பட்டார். அப்போது அங்கு உள்ளவர்களிடம் இது பற்றி கேட்க கும்பாபிஷேகம் செய்ய 30 கோடி வேண்டும். பலர் உதவி செய்வதாக சொல்லி உள்ளனர்.ஆனால் நடக்கவில்லை என்றனர். உடனே கும்பாபிஷேகம் செய்து என் வாழ்நாள் காலம் வரையில் பராமரிக்க எனது ஆட்களையும் இங்கே வர வைக்கிறேன் என்று 40 கோடி ஒதுக்கி சொன்னதை அப்படியே நடைமுறையில் செய்து வருகிறார். அம்பாள் கரை படியாமல் சேர்த்த பணத்தில் தனக்கு கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்று விரும்பி எண்ணி இருக்கிறாள் போலும்.
எனக்கு தெரிந்த வரை இந்திய அரசு மனித வள மேம்பாட்டுத் துறையில் உள்ள கல்வி மேம்பாட்டுக்கு இவருடைய ஆலோசனையை பெற்று அதை செயல் படுத்துவது மிக அவசியம்.

தடம் மாறும் நாடார் சமுதாய மக்களுக்கு எனது அன்பான சிந்தனை வேண்டுகோள்...

படைத்த சாதிக்கு பெயர் வேண்டுமானால் பிறர் போற்ற வாழ்ந்து காட்டுங்கள்.

பொய்யான பழி செய்யும் அரசியலுக்கும்,தூண்டி விடும் சாதி கூட்டத்திற்கும்,அடியாள் வேலைக்கு அழைக்கும் சமுதாய துரோகிகளுக்கும்,அற்ப சந்தோஷம் தருவதாக ஏமாற்றுபவர்களிடமும் தலை வணங்காதீர்கள்.

ஆங்கிலேய சூழ்ச்சி வழியில் அடுத்தவனிடம் பணத்திற்காக பல்லிழித்து ஏங்கி நின்று கொண்டு,
அடுத்தவர்களிடம் பொய் சொல்லி தான் பிறந்த மதத்தையே சீரழித்து, பிறரை ஏமாற்றிக் கெஞ்சி பிழைக்கும் மோசமான தொழிலை விட்டு விட்டு, அடிமையாக யாசகத்தை பெற்று காணும் இடங்களில் எல்லாம் மதக் கூடங்கள் அமைத்து,
நோய் தீரும் என ஆசை காட்டி, அபயம் கேட்டு வந்தவரை தவறாக வழி காட்டி,அவர்கள் குடும்பத்தை சிதைத்து,
அந்நிய நாட்டுப் பணத்தை வரவழைத்து அதையும் மோசடி செய்து நாட்டுக்கும்,வீட்டுக்கும்,நம் முன்னோர்களின் பாரம்பரியத்திற்கும் பயன் படாமல் போலியாக உழல்வது ஒரு பெருமையானதொரு நல் வாழ்க்கையா?.

அல்லது

ஒரு நாடார் என்று வெட்டி கெத்து காட்டாமல் எவரையும் நாடாது, எவரையும் ஏமாற்றால்,இயற்கையை மாசு படுத்தாமல்,எந்த அதிகாரத்தையும் எதிர் பார்க்காமல் பாமரனின் கல்விக்கும், நேர்மையான தொழிலுக்கும் தன்னை நாட வைத்து இப்படிதான் வாழ்வேன் என்று கொண்ட கொள்கையில் உறுதியாக நேர் வழியாக வாழ்ந்த சிவ் நாடார் போன்றவர்கள் வாழ்வது பெருமையான வாழ்க்கையா?.
உங்களை மனக் கஷ்டம் ஏற்படுவதற்காக இதை நான் நிச்சயம் சொல்லவில்லை.

சற்று பொருமையாய் சிந்தித்து உயரவே.

ஒரு சமுதாயத்திற்கு தற்போதெல்லாம் அதிக ரோல் மாடல் தலைவர்கள் உருவாவதே இல்லை. அந்த நிலை கட்டாயமாக மாறி பல நல்லவர்கள் இனி உருவாக வேண்டும்.

இறைவன் எந்த சாதியில் ஒருவனை படைக்கிறானோ அந்த சாதி பெருமை பட அவன் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுவே நம் முன்னோர்கள் நமக்கு சொல்லித் தந்த விதி.

நாலு பேர் உயர்வதற்கு நம் பராக்கிரமத்தை காட்டணுமே தவிர நம்மை முடக்குவதற்கு தரும் பிச்சை பிரியாணிக்கும், குவாட்டருக்கும்,

பண நோட்டுக்கும்,பெண்ணுக்கும் மதி மயங்கி இழிவாக மதி கெட்டு வாழ்வது ஒரு நல் வாழ்க்கையா?!.

திரு.கலைமோகன் அவர்கள் நக்கீரனில் எழுதி இருந்ததில் எனக்கு தெரிந்த உண்மைகளையும் இதில் இணைத்து உள்ளேன்.

தமிழகத்திலும் இப்படி தொடங்குங்களேன் என்றேன்.
என்னை வாழ வைத்தது உத்திரபிரதேசம்.
அதனால் அங்கு மனதாற செய்தேன். தமிழக அரசியல் வேறு மாதிரி உள்ளது என்றார்.

திரு. சிவ் நாடார் முறைகேடாக பணம் சேர்க்காத என் அத்தான் என்பதில் வாழ்வில் இமாலயப் பெருமை அடைகிறேன்.
இவரது சுய சரிதை புத்தகத்தில் தனது மாமாவான என் அப்பா தியாகி S.T.ஆதித்தனார் அவர்களை மிக உயர்வாக எழுதி உள்ளார்.

எல்லோருக்கும் விழிப்புணர்வான மன நிலை வர தயவுடன் பகிருங்கள்.

அன்புடன்
T.
பாலசுப்ரமணிய ஆதித்தன்