பக்கங்கள்

சனி பகவான் தரும் யோகங்கள்


சனி பகவான் லக்கினத்திற்கு யோகக்கரராக இருந்து 3,6,9,11 இருந்தாலு மிகப்பெரிய ராஜ யோகத்தை கொடுப்பார் என பண்டைய ஜோதிட நூல்கள் கூறுகிறது.உதாரணமாக ரிசப லக்கினத்திற்கு சனிபகவான் முழு யோகாதிபதி அவன் 6ல் உச்சம் பெற்று,அந்த திசா ஜாதகருக்கு வந்தால் மிகப்பெரிய ராஜ யோகத்தை கொடுப்பார்.



சனி பகவான் 3,6,9,11 அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு ஆய்ள் தீர்க்கமாகவும் மேலும் பணம்,புகழ் கிடைக்கும்.ஆனால் 9-ல் இடத்தில் இருக்கும் சனி பகவான் பிதூர் தோசத்தையும் கொடுப்பார் இருந்தாலும் பூமியில் அவன் புகழ் விளங்கும்.
9 க்குடைய சனிபகவான் 10- ல் நிற்க அந்த ஜாதகன் நன்மையான பலன்களையே அடைவான்.வாகன யோகம் உடைவராகவும்,புகழ்,கீர்த்தி கொண்டவராகவும் இருப்பார் என புலிப்பாணி சித்தர் தன் வெண்பாவில் தெளிவாக கூறியிருக்கிறார்.

நன்றி - பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.