பக்கங்கள்

தம்பிக்குருவிகள் பற்றிய தகவல்கள்

தம்பிக்குருவிகள் பற்றிய தகவல்கள்:-

தமிழில் தம்பிக்குருவி என அழைக்கப்படும் இப்பறவை மூளைக்காய்ச்சல் பறவை எனவும், பாப்பிஹா எனவும் அழைக்கப்படுகிறது.
      இவை மனித குடியிருப்பிற்கு அருகிலுள்ள முந்திரி, மா, பலா, புளி முதலிய மரங்களில் வாழ்கின்றன. குயில் போன்று இதுவும் மரங்களின் அடர்த்தி குறைந்த காடுகளிலும் வாழ்கின்றன. குயில் போன்று இதுவும் மரங்களில் மறைந்து வாழும், வெட்கப்படும் பறவையே. ஆனால், குயிலை விட அதிகம் மறைந்து வாழும் பறவை. ஒப்பிட்டுப் பார்க்கும்போது குயிலை பார்ப்பதும் படமெடுப்பதும் எளிது. தம்பிக்குருவியைப் பார்ப்பதே கடினம். காலை, பகல் முழுவதும், மாலை மற்றும் இரவில் குயில்கள் அமர்ந்திருக்கும் அதே மரத்தில் தங்கி, குயிலோடு இணைந்து பாடும். ஆனால், இப்பறவையின் பாடல் கேட்க சகிக்காது. பகலில் ஆகாயத்தில் அலைந்து பாடித்திரியும்.

      பறவையியலார் குறிப்பிடும் இதன் இயல்புகள் முதுகுபுறம் அடர்ந்த சாம்பல் நிறமும், வயிறு பிரவுண் பட்டைகளுடைய வெள்ளை நிறமும் கொண்டது. இதன் வாலும் பட்டைகளுடையது.

      உரோமங்களுடைய கம்பளி புளுக்கள், பெரிய வகைப் பழங்கள், கிளை நுனிகள் போன்றவை இதன் உணவுகளாகும். குயிலைப்போன்று இதுவும் பிற பறவைகள் கூட்டில் முட்டையிட்டு அப்பறவைகளைக் கொண்டே அடைக்காத்து குஞ்சு பொரிக்கும் ப்ரூட் பாரசைட்டாகும்.

Via FB Karthikeyan Mathan

பாரத பண்பாடு....!

மற்ற எந்த தேசத்திலும் இல்லாத அளவு தனிமனித ஒழுக்கமும், கட்டுப்பாடும் நம் பாரத பண்பாட்டிலே வற்புறுத்தி சொல்லப்பட்டுள்ளன. காலப் போக்கில் பல காரணங்களினால் அவைகள் எல்லாம் முறை தவறிப் போய் விட்டன. எங்கோ ஒரு மூலையில் ஓரிருவர் கடைபிடிக்கிறார்களே அன்றி மற்றவர்கள் அதைக் குறித்து எண்ணுவது கூட இல்லை. கலாச்சாரம் பண்பாடு எல்லாம் மாறி விட்டன. 

நான் யோசித்துப் பார்க்கிறேன். எதற்காக இது போன்ற பண்பாடு, கலாச்சாரம் போன்ற கட்டுப்பாடுகளை, விதி முறைகளை முன்னோர்கள் வகுத்து கடைபிடித்து வாழ்ந்தார்கள் ? என்று. அதாவது மிருகம் அல்லது மற்ற உயிரினங்களில் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுவது பகுத்தறிவு மட்டுமே. அதனால்தான் தன்னை விட வலிமையான மிருகங்களையும் சக்திகளையும் மனிதன் அடக்கி ஆளமுடிகிறது. பரிணாமத்தில் ஏன் இந்த மாற்றம் ஏற்பட்டது ? என்றால், தன்னிடமிருந்து கிளம்பிய ஜீவன்கள் தான் யார் என்பதை உணர்ந்து, தன்னிடம் மீண்டு வர வேண்டும் என்பதற்காக இயற்கையாகிய இறையாற்றலே தானே உருவாக்கிக் கொண்ட பரிணாம வளர்ச்ச்சியே மனிதன். சுருங்கச் சொன்னால் பரிணாமத்தின் எல்லை மனிதன். 

என்னதான் பரிணாமத்தின் எல்லையாக மனிதன் இருந்தாலும், அவன் கொண்டுள்ள முந்தைய பரிணாமத்தின் இயல்புகள் அவன் இறையாற்றலை சென்று அடைவதற்குத் தடையாகவே உள்ளன. போதாக் குறைக்கு வினைப் பதிவுகள் வேறு. தனக்குள்ளே பல தெய்வீக உணர்வுகளை, சக்திகளை மனிதன் பெற்றிருந்தாலும்
 அந்த சக்திகளை முறையாக வெளிப்படுத்த ஏற்றவாறான உடல் மற்றும் மனக் கருவிகளை அவன் பெற்றிருக்கவில்லை. அறிவை சரியாக உபயோகப்படுத்தாத மனிதன் முதலில் காட்டுமிராண்டியாக வாழ்ந்தான். அதன் பிறகு அவன் அந்த உடலையும், மனதையும் கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தி, மன ஓட்டங்களைச் சீர் செய்து, நல்வழிப்படுத்தி மிருகம் என்ற காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதன் என்ற நிலைக்கும், நல்ல மனிதன் என்ற நிலைக்கும், தெய்வமனிதன் என்ற நிலைக்கும், தெய்வம் என்ற நிலைக்கும் தன்னை உயர்த்திக் கொள்ள தலைப்பட்டான். அந்த முயற்சிகளின் ஒழுங்கு படுத்தப்பட்ட தொகுப்பே நம் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம். இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிற மனிதன் மட்டுமே பிறவியின் முழுமையைக் காண முடியும். 

நம் பாரத பண்பாடு இரு பாலினருக்கும் கற்பு, தியாகம், புலனடக்கம், சகிப்புத் தன்மை, வாய்மை, திருடாமை, தூய்மை, திருப்தி, தவம், சரணாகதி, நன்னூல் ஓதுதல் போன்ற பல நல்ல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும் கள்ளுண்ணாமை, கொல்லாமை போன்ற கொள்கைகளையும் வலியுறுத்துகிறது. சுருங்கச் சொன்னால் ஒழுக்கம், தருமம் இரண்டையும் ஒன்றாக விதிப்பது நம் பாரதப் பண்பாடு. மனிதனுக்குள் மாபெரும் சக்தி புதைந்து கிடக்கிறது. அதை அறிந்து கொள்ளாமல் ஐம்புலன்கள் மூலம் அடையும் சாதாரண இன்பங்களை அடைவதற்காகவே அதிக உயிர் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறான் மனிதன். தன்னைத் தானே நோக்காமல், வெளி உலகத்தையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் தான் உள்ளே பேரின்பம் இருப்பது அவனுக்குத் தெரிவதில்லை.இதை சரி செய்வதற்காகவே கண்களால் சாத்வீகமான பொருள்களை தரிசிப்பது, காதுகளால் தெய்வீக இராகங்களை, கதைகளைக் கேட்பது, மூக்கினால் சாத்வீகமான வாசனைகளை முகர்வது என்று பல சடங்கு சம்பிரதாயங்கள் தரப்படுகின்றன. இவற்றில் எல்லாம் ஈடுபட்டு மனதை ஒருமுகப்படுத்தி வலிமையாக்கி தன் பார்வையை தனக்குள்ளே செலுத்துகிறான் மனிதன். பாரத தேசத்தில் உள்ள எந்த மூலையில் உள்ள மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் ஆகட்டும், அவற்றின் முடிவு என்பது பரமாத்மாவிடம் கொண்டு போய் ஜீவனை சேர்ப்பதே ஆகும். 
அனுபவமும் மதி நுட்பமும் பெற்ற மனிதன் ஒருவன் இத்தனை சடங்குகளும், விழாவும், மரியாதைகளும், அன்பும் தன்னுடைய வெறும் உடலுக்கு அல்ல, உள்ளே ஆத்மாவாக விளங்கும் இறையாற்றலுக்கே என்பதை உணர்ந்து கொள்வான். பரம்பொருளைத் தேடி அடைவதற்கு இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தூண்டு கோல்களாக  அமைகின்றன என்பதையும் தெரிந்து கொள்வான்.

Via FB மௌனத்தின் நாதம்

விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ் !

நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள். சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம்.

இவற்றில் பல டூல்ஸ்களை, அவற்றின் பெயர் தெரிந்தாலே, அவற்றைக் கொண்டு இயக்கலாம். டூல்ஸ் புரோகிராமின் பெயரைத் தேடி அறிந்து, அதனை டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் அந்த டூல்ஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து நிற்கும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், சர்ச் ஸ்கிரீனில், முதலில் Settings வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இவற்றில் சில பயனுள்ள டூல்ஸ்களைப் பார்க்கலாம்.

1. விண்டோஸ் மெமரி டயக்னாஸ்டிக் (Windows Memory Diagnostic): இதனை இயக்கினால், அது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து, கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனையிட்டு, அதில் பிழைகள் இருந்தால், எடுத்துக் காட்டும். எனவே, கம்ப்யூட்டரில் உள்ள மெமரி குறித்துச் சோதனையிட, வேறு ஒரு புரோகிராம் தேவையில்லை. விண்டோஸ் தரும் இந்த டூலையே பயன்படுத்தலாம்.

2. ரிசோர்ஸ் மானிட்டர் (Resource Monitor): கம்ப்யூட்டரின் பல்வேறு பகுதிகளின் செயல் திறனை அறிந்து கொள்ள இந்த டூலைப் பயன்படுத்தலாம். சிபியு, டிஸ்க், நெட்வொர்க் மற்றும் மெமரி கிராபிக்ஸ் என அனைத்து பிரிவுகளின் திறனை அளக்கிறது. ஒவ்வொரு திறனுக்குமான செயல்பாட்டு புள்ளி விபரங்களை எடுத்துத் தருகிறது. எனவே, இதன் மூலம், எந்த புரோகிராம், நம் கம்ப்யூட்டரின் டிஸ்க்கினை அல்லது நெட்வொர்க்கினை மிகவும் அதிகமாகப் பயன்படுத்துகிறது என அறியலாம். எந்த செயல்பாடு, இன்டர்நெட் இணைப்புடன், அல்லது வேறு இணைக்கப்பட்டுள்ள சாதனங்களுடன் இணைந்து செயலாற்றுகிறது என்பதனை அறியலாம். டாஸ்க் மானேஜர் புரோகிராம் தன் செயல்பாட்டில் அதிகமான தகவல்களைத் தருவதனைக் காட்டிலும், இந்த புரோகிராம் தருகிறது. டாஸ்க் மானேஜர் புரோகிராமினை இயக்கி, அதில் உள்ள Performance டேப்பினை கிளிக் செய்து, பின்னர் இதில் கிடைக்கும் Resource Monitor ஐ இயக்க வேண்டும். ஸ்டார்ட் மெனுவில் அல்லது ஸ்டார்ட் ஸ்கிரீனில், தேடல் கட்டத்தில் Resource Monitor என்று டைப் செய்தும் இதனைப் பெறலாம்.

3. பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor): பெர்பார்மன்ஸ் மானிட்டர் டூல், பல்வேறு செயல்பாடுகள் குறித்த விபரங்களைத் தேடித் தரும். குறிப்பிட்ட கால நேரத்தில் கம்ப்யூட்டர் புரோகிராம்களின் செயல்பாட்டில் உள்ள வேறுபாட்டினை இதன் மூலம் அறியலாம். மேலே சொல்லப்பட்ட பெர்பார்மன்ஸ் மானிட்டர் என்பது, மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல் டூல்ஸ் (Microsoft Management Console (MMC) என்ற தொகுப்பின் ஒரு பகுதி தான். பெரும்பாலான இது போன்ற டூல்ஸ்களை, Administrative Tools போல்டரில் பெறலாம். அல்லது, Computer Management என்ற அப்ளிகேஷனைத் திறந்தும் பெறலாம். இவை போன்ற டூல்ஸ்களுடன், கீழ்க்கண்டவையும் இதில் இடம் பெற்றுள்ளன.

1. Task Scheduler: காலத்தில் செய்யப்பட வேண்டியவை என்று அடையாளம் தரப்பட்ட பணிகளைக் காண்பதற்கும், அவற்றை செட் செய்வதற்கும் இந்த டூல் பயன்படுகிறது. நாம் வரையறை செய்திடும் பணிகளோடும், சிஸ்டம் செட் செய்து அமைத்திடும் பணிகளையும் காலத்தே செயல்படுத்தும்.

2. Event Viewer: சிஸ்டத்தில் ஏற்படும் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் காட்டும். சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படும் நிகழ்வுகளிலிருந்து, அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிராஷ் ஆவதிலிருந்து, புளு ஸ்கிரீன் ஆப் டெத் நிகழ்வு வரை அனைத்தையும் பட்டியலிட்டு தரும்.

3. Shared Folders: உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில், பங்கிடப்பட்ட போல்டர்களைக் காட்டும் ஒரு இன்டர்பேஸ். எந்த எந்த போல்டர்கள், உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் பங்கிடப்படுகின்றன என்பதனைக் காட்டும் ஒரு டூல்.

4. Device Manager: உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை நாம் தெரிந்து கொள்ளப் பயன்படும் டூல். இதன் மூலம் அவற்றைச் செயலிழக்கவும் செய்திடலாம். புரோகிராம்களின் ட்ரைவர்களை செயல்படும்படி அமைக்கலாம்.

5. Disk Management: டிஸ்க்கினைப் பிரித்துக் கையாளும் பார்ட்டிஷன் மேனேஜர் டூல். டிஸ்க் இடத்தைப் பிரிக்க, வேறு ஒரு தர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை இல்லை. இதனையே பயன்படுத்தலாம்.

6. Services: விண்டோஸ் இயக்கத்தில், பின்புலத்தில் மேற்கொள்ளப்படும் வேலைகளைக் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்த நமக்கு உதவிடும் டூல். Administrative Tools போல்டரில், மற்ற பயன்பாட்டு புரோகிராம்களும் கிடைக்கின்றன. விண்டோஸ் பயர்வால் போன்ற பாதுகாப்பு தரும் புரோகிராம்கள் உட்பட பல புரோகிராம்கள் உள்ளன.

4. User Accounts: விண்டோஸ் சிஸ்டத்தில், வழக்கமான இன்டர்பேஸ் மூலம் கிடைக்காத, யூசர் அக்கவுண்ட்ஸ் குறித்த விபரங்களை, இந்த மறைத்து வைக்கப்பட்டுள்ள User Accounts டூல் தருகிறது. இதனைத் திறக்க, WinKey+R கீகளை அழுத்தி ரன் டயலாக் கட்டம் பெறவும். netplwiz அல்லது control user passwords2 என டைப் செய்து, என்டர் தட்டவும். இந்த டூல் கிடைக்கும் விண்டோவிலேயே, Local Users and Groups டூலை இயக்கத்திற்குக் கொண்டு வர ஷார்ட் கட் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்டோஸ் நிர்வகித்திட பல டூல்கள் கிடைக்கும்.

5. Disk Cleanup: மற்ற டூல்களைப் போல, இது மறைத்து வைக்கப்பட்ட டூல் அல்ல. ஆனால், விண்டோஸ் பயன்படுத்துவோர் பலரும் இதனை அறிந்திருப்பது இல்லை. உங்கள் கம்ப்யூட்டரில் அழிக்கப்பட வேண்டிய பைல்களை இது கண்டறியும். தற்காலிக பைல்கள், பழைய சிஸ்டம் ரெஸ்டோர் நிலைகள், விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்கள் மேம்படுத்தப்படுகையில், விடப்பட்ட தேவையற்ற பைல்களை இது கண்டறிந்து காட்டும். PC Cleaning Utility புரோகிராம் செய்திடும் அனைத்து பணிகளையும் இது செய்திடும். இது இலவசமாக விண்டோஸ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. டிஸ்க்கினை கிளீன் செய்யத் தொடங்கி, நம்மிடம் பணம் பறிக்கும் வேலையினை இது மேற்கொள்ளாது. நம்மில் பலரும் சிகிளீனர் புரோகிராமினைப் பயன்படுத்துகிறோம். அதே வேலையினை விண்டோஸ் சிஸ்டத்தில் இலவசமாக இணைந்தே வழங்கப் படும் டிஸ்க் கிளீன் அப் புரோகிராம் செய்கிறது. ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் Disk Cleanup என டைப் செய்து இதனைப் பெறலாம்.

6. ரிஜிஸ்ட்ரி எடிட்டர்: நம்மில் பலரும் அறிந்த ஒரு டூல். மைக்ரோசாப்ட் இதனை மறைத்தே வைத்துள்ளது. regedit என டைப் செய்து இதனைப் பெறலாம். இதனைக் கையாள்வதில் கவனம் தேவை. எதற்கும், இதனைத் திறக்கும் முன், இதன் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

7. எம்.எஸ். கான்பிக்: மிக அருமையான ஒரு புரோகிராம் டூல். விண்டோஸ் இயக்கத்தின் போது, என்ன என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், எந்த எந்த புரோகிராம்களை இயக்க வேண்டும், இயங்கி வரும் எந்த புரோகிராம்களை நீக்க வேண்டும் என நாம் முடிவு செய்வதனை இதன் மூலம் நிறைவேற்றலாம். ஸ்டார்ட் மெனுவில் msconfig என டைப் செய்து இதனைப் பெறலாம்.

8. System Information: இதனை இயக்கும் கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த டூலைப் பயன்படுத்திப் பெறலாம். கம்ப்யூட்டர் மாடல் எண் என்ன என்பதிலிருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள டிவிடி ராம் சாதனம் எந்த மாடலைச் சேர்ந்தது என்பது வரை அறிந்து கொள்ளலாம். இப்படியே அனைத்து இயக்கங்கள் குறித்தும் தகவல்களை இதன் மூலம் பெறலாம்.

மேலே சொல்லப்பட்ட பல பயன்பாட்டு டூல் சாதனங்கள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம், நாம் எப்போதாவது, நம் தேவைகளுக்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி :
தினமலர் - கம்ப்யூட்டர் மலர்

இதயம் பற்றி ...

Photo: 1.பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரியஉயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை - நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும்           (எலி-நிமிடத்திற்கு500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிடசிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

 2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும். 

 3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். 

 4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன . 

5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் ...நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்) 

 6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

 7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).

 8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

 9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம். 

10.லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது
 நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த
 சத்தம் உருவாகிறது. 

 11. ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயம். 

 12. நாய்களுக்குத்தான் மிக பெரிய இதயம் அதன் உடல் அமைப்புடன் ஒப்பிடும்போது. 

 13.ஒட்டகசிவிங்கியின் இதயத்தின் எடை சுமார் 12.5 கிலோகிராம்கள். ஏனென்றால்அவை தனது கழுத்தின் உயரத்தையும் உடலையும் சமபடுத்திகொள்ளதான்
1.பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரியஉயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை - நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி-நிமிடத்திற்கு500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிடசிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .

5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் ...நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).

8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.

10.லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது
நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த
சத்தம் உருவாகிறது.

11. ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயம்.

12. நாய்களுக்குத்தான் மிக பெரிய இதயம் அதன் உடல் அமைப்புடன் ஒப்பிடும்போது.

13.ஒட்டகசிவிங்கியின் இதயத்தின் எடை சுமார் 12.5 கிலோகிராம்கள். ஏனென்றால்அவை தனது கழுத்தின் உயரத்தையும் உடலையும் சமபடுத்திகொள்ளதான்.
  
Via FB சுபா ஆனந்தி
 
தெரிந்து கொள்ள வேண்டிய அவசர எண்கள்! ! ! !

 ~போலீஸ்: 100

 ~போலீஸ் SMS:
9500099100

 ~போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS:
9840983832

 ~தீயணைப்புத் துறை: 101

 ~போக்குவரத்து விதிமீறல்: 103

 ~விபத்து: 100, 103

 ~போக்குவரத்து விதிமீறல் SMS:
9840000103

 ~ஆம்புலன்ஸ்: 102, 108

 ~பெண்களுக்கான அவசர உதவி: 1091

 ~குழந்தைகளுக்கானஅவசர உதவி: 1098

 ~அவசர காலம் மற்றும் விபத்து: 1099

 ~மூத்த குடிமக்களுக்கானஅவசர உதவி: 1253

 ~தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033

 ~கடலோரப் பகுதி அவசர உதவி: 1093

 ~இரத்த வங்கி அவசர உதவி: 1910

 ~கண் வங்கி அவசர உதவி: 1919

 இதை உங்கள் நண்பர்களுடன்
 பகிர்ந்து கொள்ளுங்கள்...!

~போலீஸ்: 100

~போலீஸ் SMS:
9500099100

~போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS:
9840983832

~தீயணைப்புத் துறை: 101

~போக்குவரத்து விதிமீறல்: 103

~விபத்து: 100, 103

~போக்குவரத்து விதிமீறல் SMS:
9840000103

~ஆம்புலன்ஸ்: 102, 108

~பெண்களுக்கான அவசர உதவி: 1091

~குழந்தைகளுக்கானஅவசர உதவி: 1098

~அவசர காலம் மற்றும் விபத்து: 1099

~மூத்த குடிமக்களுக்கானஅவசர உதவி: 1253

~தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033

~கடலோரப் பகுதி அவசர உதவி: 1093

~இரத்த வங்கி அவசர உதவி: 1910

~கண் வங்கி அவசர உதவி: 1919

இதை உங்கள் நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்...!
Via FB சுபா ஆனந்தி

திருவண்ணாமலை ஒரு அறிமுகம்

திருவண்ணாமலை ஒரு அறிமுகம்:

திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. *சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. *கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. *பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக விளங்கியது.

திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது. *1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு, 1971 இல் முதல் நிலை நகரட்சியாக உருவானது. 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக, 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"யாகவும் தரம் உயர்த்தப்பட்டது. திருவண்ணாமலை மலை ஒரு இறந்த எரிமலையாகும்.

சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். பிற தலங்களில், சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.

திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இது தவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகையில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் (November) அல்லது டிசம்பர் (December) மாதம் வரும்.

இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும். இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.

இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.

இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி இறக்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.

Via FB சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?
 
வெயிட் குறைப்பது எப்படி?

Photo: இரண்டே மாதத்தில் 20 கிலோ வெயிட் குறைப்பது எப்படி? கடல் துளசியின் மருத்துவக்குறிப்புகள் !!!

”சில மாசங்களுக்கு முன்னாடி வரைக்கும் நான் அவ்ளோ குண்டா இருப்பேன். 86 கிலோ. சிரிச்சேன்னா, என் ரெண்டு கன்னங்களும் அப்படியே ரெண்டு கண்ணையும் மறைச்சிடும். ஆனால், ரெண்டே மாசத்துல 20 கிலோ வரைக்கும் வெயிட்டைக் குறைச்சேன்.” – ‘எப்பூடி?’ எனக் கேட்டுச் சிரிக்கிறார் ‘கடலில்’ முளைத்திருக்கும் துளசி. ராதாவின் இரண்டாவது மகள்.

”எப்படி உங்க எடையைக் குறைச்சீங்க?”

”அட, அதை ஏன் கேக்குறீங்க? அதுக்கு நான் ரொம்பவே சிரமப்பட்டுட்டேன். மணி சார் என்னைப் பார்க்க வரும் வரை என் உடல்நலம் பத்திக் கொஞ்சம்கூட அக்கறை இல்லாமல்தான் இருந்தேன். நிறையச் சாப்பிடுவேன். மும்பையில் இருக்கும் ஃபாஸ்ட் புட் கடைகள் ஒண்ணுவிடாமல் தேடித்தேடிப் போய்ச் சாப்பிடுவேன். ஜங்க் ஃபுட்ஸ் வெளுத்துக்கட்டுவேன்.

அம்மாவும், ‘சின்னப் பொண்ணுதானே சாப்பிட்டுட்டுப் போறா’னு கண்டுக்காம விட்டுட்டாங்க. அதனால பயங்கர வெயிட் போட்டுட்டேன். அப்பதான் மணி சார் ‘கடல்’ படத்துக்கு ஹீரோயின் தேடிட்டு இருந்தார். என்னைப் பார்த்ததுமே, ‘நீதான் பியா கேரக்டர் பண்ற… அதுக்காக நீ வெயிட் குறைச்சே ஆகணும்’னு ஸ்ட்ரிக்ட்டா சொன்னார். மணி சார் படம்னா, மலையில இருந்துகூடக் குதிக்கலாம். கடகடனு மெனக்கெட்டு வெயிட்டைக் குறைச்சேன்.

சாப்பாடு விஷயத்தில் ரொம்ப கன்ட்ரோலா இருந்தேன். ஆனால், அந்த டைம் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணலை, அதே சமயம் வீட்டுல என்னைத் தவிர மத்தவங்க எல்லாரும் நல்லாச் சாப்பிட்டு சந்தோஷமா இருந்தாங்க. அதைப் பார்த்துப் பொறாமையாகி நானும் பழையபடி கன்னாபின்னானு சாப்பிட ஆரம்பிச்சுப் பழைய கண்டிஷனுக்கே வந்துட்டேன். அந்த நேரம் பார்த்து மணி சார் திரும்ப வந்து என்னைப் பார்த்து டென்ஷன் ஆகிட்டார். நான் அழுதுட்டேன். அதுக்கு அப்புறம்தான் எனக்குள்ளே ஒரு வெறி வந்து, முன்னைவிட அதிகமா முயற்சிகள் செய்து வெயிட்டைக் குறைச்சேன்.”

”அப்படி என்ன முயற்சிகள் செஞ்சீங்க?”

”டயட் விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தேன். கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் பொருட்களைச் சாப்பிடவே மாட்டேன். அதற்குப் பதிலாக புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட ஆரம்பிச்சேன். காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறையச் சாப்பிடுவேன். முன்னாடி எல்லாம் காலையில் லேட்டாத்தான் எழுந்திருப்பேன். அதுவே நம்ம உடம்புக்கு நிறையக் கெடுதல் பண்ணும்னு எனக்கு லேட்டாத்தான் புரிஞ்சது. அதனால சீக்கிரமாவே எழுந்திரிக்கப் பழகினேன். நாள் தவறாமல் ஜிம் போனேன். ஜிம்முக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ். ஜிம்ல ஒரு மணி நேரம் சின்ஸியரா கார்டியோ ஒர்க் அவுட்ஸ் பண்ணுவேன்.

ரன்னிங் போவேன். இதை எல்லாம் ரொம்ப விரும்பிப் பண்ணுவேன். கொஞ்சம் போர் அடிச்சாலும் அப்படியே நிறுத்திட்டு பாட்டுக் கேட்டு என்னை ரிலாக்ஸ் பண்ணிட்டுத் திரும்பவும் பயிற்சி களை ஆரம்பிப்பேன். காலையில் ஏதாவது பழரசம் ஒரு கப். மதியம், ரெண்டு ரொட்டியும் முட்டையோட வெள்ளைக்கரு ஆறு துண்டுகளும், கோழிக் கறி கொஞ்சமும் சாப்பிடுவேன். சாயந்திரம் எதுவும் சாப்பிட மாட்டேன். ராத்திரி ஒரு கப் பழரசம் மட்டும் குடிப்பேன். இப்படி எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செஞ்சேன். அதுக்கு அப்புறம்தான் 86 கிலோ இருந்த என் வெயிட், 20 கிலோ குறைஞ்சது. அப்புறம்தான் க்யூட் பேபி ஆனேன்.”

”அழகை மேம்படுத்த என்ன பண்ணுனீங்க?”

”ஜூஸ். இதுதான் என் அழகு ரகசியம். எவ்வளவுக்கு எவ்வளவு பழங்களோட ஜூஸ் நம்ம உடம்பில் சேருதோ, அந்த அளவு நம்ம தோல் பளபளப்பாகும். குறிப்பா முகப் பளபளப்பிற்கு ஜூஸ் வகைகள் ரொம்பவே நல்லது. அழகை அதிகரிக்கும் சக்தி சந்தனத்துக்கு இருக்கு. அதனால், அடிக்கடி சந்தன ஃபேஷியல் செஞ்சுக்குவேன். சந்தனம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி. தரமான காஸ்மெட்டிக் பொருட்களை மட்டும்தான் பயன்படுத்துவேன். தலைமுடியில் அயர்னிங், கர்லிங் போன்ற வேலைகளைச் செய்ய மாட்டேன். அடிக்கடி முட்டையின் வெள்ளைக்கருவை தலைமுடியில் வைத்து அலசுவேன். வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துப்பேன். இது தலைமுடி கருப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.”

”ரிலாக்ஸேஷன்ஸ்?”

”தூக்கம்தான். கூடவே, ஐ லவ் மியூசிக். நிறைய சூப்பர் பவர் ஹீரோ புக்ஸ் படிப்பேன். அதில் வரும் சாகசங்களைப் படிக்கும்போது, தானாகவே நம்ம மனசு கற்பனை பண்ணிக்க ஆரம்பிச்சுடும். அதைத் தொடர்ந்து மனசு பரவசமாகிடும். மனசை ரிலாக்ஸ் பண்ண இதுவும் ஒரு நல்ல வழி!”

”துறுதுறுன்னு எப்போதும் செம ஜாலியா இருக்கீங்களே… எப்படி?”

”முன்னாடி எல்லாம் நான் ரொம்ப அமைதியா இருப்பேன். வீட்டுல உள்ளவங்ககிட்டகூட அதிகம் பேச மாட்டேன். எப்போதும் தனியாத்தான் இருப்பேன். ஆனால், இப்போ அப்படி இல்லை. நான் இப்படி சந்தோஷமா மாறினதுக்கு ‘கடல்’ படத்தில் நான் பண்ணின கேரக்டரான பியாதான் காரணம். ஏன்னா அவ அப்படிப்பட்டவ. அவளோட ஆக்டிவிட்டீஸ் அவ்வளவு அழகா இருக்கும். அவளாலதான் நான் இப்படி மாறினேன். அவளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். அந்த கேரக்டர்ல நான் நடிச்சதுக்கு அப்புறம் என் லைஃப் இப்போ இன்னும் சந்தோஷமா மாறி இருக்கு. தேங்க்ஸ் பியா!”
இரண்டே மாதத்தில் 20 கிலோ வெயிட் குறைப்பது எப்படி? கடல் துளசியின் மருத்துவக்குறிப்புகள் !!!

Via FB ஆரோக்கியமான வாழ்வு

முருங்கைக் கீரை

Photo: முருங்கைக் கீரை: அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி வேறு எந்தக் கீரைக்கும் இல்லை 

ஒவ்வொரு செயலிலும் பூரணத்துவம் வேண்டும். பக்தியிலும் பூரணத்துவம் இருந்தால்தான் இறைநிலை இன்பம் சாத்தியமாகும். "மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை' என்பர் ஞானிகள். மனம் செம்மையானால்தான் பூரணத்துவம் சாத்தியமாகும்.

ஒருவன் பூரணத்துவம் பெற்றுவிட்டால் அவனுக்கு அகந்தை, ஆணவம் எதுவும் இருப்பதில்லை. அவன் செயல்பாடுகள் தெளிந்த நீரோடையாய் சமூக மேன்மைக்குப் பயன்படும். தியானம் ஒன்றே முழுமைக்கான வழியும் வாசலுமாகும். 

முருங்கையின் நற்பலனால் நல்தேகம் பெற்று நலமுடன் வாழ முனைவோம்... 

முருங்கையைப்போல் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி வேறு எந்தக் கீரைக்கும் இல்லை எனலாம். இதை சர்வரோக நிவாரணி என்று சொன்னால் மிகையல்ல. இந்தக் கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய சத்துகளும் வைட்டமின்களும் அபரிமிதமாக உள்ளன. உடல் பலவீனம், கருப்பைக் கோளாறுகள், எலும்பு மற்றும் நரம்பு தொடர்பான நோய்களை முழுமையாகக் குணப்படுத்தக்கூடியது முருங்கை.

மூட்டுவலிகள் குணமாக...

முருங்கைக் கீரையோடு சிறிது மிளகுத் தூள், உப்பு, மஞ்சள் மட்டும் சேர்த்து வேகவைத்து தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலிகள் அதிசயமாய் குணமாகும்.

முருங்கைக் கீரை, முடக்கத்தான் கீரை ஆகியவற்றை உலர்த்தி வகைக்கு 50 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் மிளகு, சித்தரத்தை, சுக்கு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து ஒன்றாக அரைத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் அரைத் தேக்கரண்டி அளவு காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலிகள் முழுமையாய் குணமாகும்.

ரத்த அழுத்தம் சீராக...

முருங்கைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, பின் அதை உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை- மாலை இருவேளையும் அரைத் தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

இதய நோய்கள் விலக...

சீரகம், சோம்பு, ஓமம், தனியா ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து, கால் லிட்டர் முருங்கைக் கீரை சாற்றில் அனைத்தையும் ஊறவைத்து உலர்த்தவும். பின்னர் தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் இதயம் சார்ந்த அனைத்து நோய்களும் விலகும்.

கபநோய்கள் விலக...

முருங்கைக் கீரை சாற்றில் மிளகு, அதிமதுரம் இரண்டையும் தேவையான அளவில் ஊறவைத்து, பின் உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் கபநோய்கள், இருமல், காச நோய்கள் அனைத்தும் தீரும்.

சிறுநீர் நோய்கள் விலக...

ஒரு கைப்பிடியளவு முருங்கைக் கீரையை எடுத்துக்கொண்டு, அத்துடன் 20 கிராம் பார்லி, கால் தேக்கரண்டி சீரகம், சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி சாப்பிட்டால், நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் தாராளமாய் பிரியும். மேலும் சிறுநீர் நோய்கள் அனைத்தும் விலகும்.

மாதவிலக்கு கோளாறுகள் மறைய...

இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை எடுத்து, அத்துடன் அரை தேக்கரண்டி கறுப்பு எள், கால் தேக்கரண்டி கருஞ்சீரகம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயமாக்கி, காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிடாய் முறைப்படும். மேலும் ரத்த உற்பத்தி உண்டாகி, மாதவிடாய்க் கோளாறுகள் அனைத்தும் முறையாயத் தீரும்.

ரத்த சோகை மறைய...

கைப்பிடியளவு முருங்கைக் கீரையுடன் ஒரு பல் பூண்டு, பத்து மிளகு, சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை முழுமையாகக் குணமாகும். இதனை காலை உணவுக்குப் பின்னரே சாப்பிட வேண்டும். ஒருசிலருக்கு வயிற்றுக் கழிச்சல் உண்டாகலாம். அவர்கள் தங்களது செரிமான திறனுக்கு ஏற்ப உட்கொள்ள வேண்டும்.

கண்நோய்கள் விலக...ஒரு கைப்பிடியளவு முருங்கைக் கீரை, ஒரு கைப்பிடியளவு பொன்னாங்கண்ணிக் கீரை- இரண்டையும் நீர்விடாமல் அவித்து, சூடு ஆறியபின் கண்களில் வைத்துக் கட்டி வரவேண்டும். தொடர்ந்து 30 நாட்கள் செய்தால் கண் ரோகங்கள் அனைத்தும் விலகும். இதேபோல் முருங்கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல்சூடு தணியும். பொடுகுப் பிரச்சினையும் தீரும்.

பாலுணர்வு மேம்பட...100 கிராம் ஜாதிக்காய் வாங்கி ஒன்றிரண்டாய் உடைத்துக்கொள்ளவும். பின்னர் அதை 250 மி.லி. முருங்கைக் கீரை சாற்றில் ஊற வைத்து உலர்த்தி தூள் செய்துகொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் பாலுணர்வு மேம்பட்டு, கலவிச்சுகம் கிடைக்கும்.

முருங்கைக் கீரை கஞ்சி மாவு

இரண்டு கிலோ அளவு முருங்கைக் கீரையில் நீர் சேர்த்து விழுதாய் துவையல்போல் அரைத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்த விழுதுடன் இரண்டு கிலோ பச்சரிசி கொட்டிக் கிளறவும். இதனை இரண்டு நாட்கள் நிழலில் காயவைத்து உலர்த்திக் கொள்ளவும். பின்னர் அரை கிலோ சிறுபருப்பை லேசாக வறுத்து சேர்க்கவும். மிளகு, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றையும் மேற்கண்டவற்றுடன் சேர்த்து மாவாய் அரைத்துக் கொள்ளவும்.

இதில் தேவையான அளவுப் பொடியை எடுத்து நீரில் கலந்து கஞ்சியாகச் செய்து சாப்பிடலாம். அல்லது வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அடையாகச் செய்தும் சாப்பிடலாம். பிரசவித்த பெண்களுக்கு உண்டாகும் இடுப்பு வலிக்கு இது அற்புத உணவாகும். அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு இயல்பாக உண்டாகும் இடுப்பு வலி முழுமையாக குணமடைய, இந்த கஞ்சி மாவை தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டால் போதும்; பலன் நிச்சயம் உண்டாகும்.

முருங்கை பல்வேறு புலவர்களாலும் பாடப் பெற்ற பெருமைக்கு உரியது. முருங்கையின் பூக்கள் கடுங்காற்றில் அடிபட்டு உதிர்வதை, கடல் அலைகளின் நீர்த்துளிகள் சிதறுவதைப்போல இருப்பதாக அகநானூற்றுப் பாடலில் மாமூலனார் என்னும் புலவர் பெருந்தகை குறிப்பிடுகின்றார்.
மருத்துவ குணங்களைத் தன்னுள் ஏராளமாய் பெற்றுள்ள முருங்கை பாம்பணி சிக்குருபுரம் சிவன் கோவிலில் தலவிருட்சமாய் வணங்கப்பட்டு வருகிறது.
முருங்கைக் கீரை: அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி வேறு எந்தக் கீரைக்கும் இல்லை