பக்கங்கள்

கின்னஸ் புத்தகம் உருவான விதம்! ! ! !

கின்னஸ் புத்தகம் உருவான விதம்! ! ! !

உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன.மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது.

1955 August அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப்பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த
கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?

1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்துசென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.

எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை.

அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும்விடை தேடினார். பலன்தான் இல்லை.

இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார்.

தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான்கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ்புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால்
வெளியிடப்பட்டது.

ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம்.

சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாகஇருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.

இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்.

கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களேதவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது.

அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன.மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது.

1955 August அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப்பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த
கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?

1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்துசென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.

எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை.

அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும்விடை தேடினார். பலன்தான் இல்லை.

இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார்.

தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான்கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ்புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால்
வெளியிடப்பட்டது.

ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம்.

சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாகஇருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.

இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்.

கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களேதவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது.

அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

மின் உபயோகத்தைக் குறைக்க

மின் உபயோகத்தைக் குறைக்க

• மோட்டாரிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் குழாய்களை அதிக வளைவில்லாமல் பொருத்தினால் தண்ணீர் விரைவாக மேலேறும்; மின்சாரமும் மிச்சமாகும்.

• காய்ந்த துணியில் தண்ணீர் தெளித்து அதன்மீது இஸ்திரி போட்டால் மின்சாரம் அதிகமாக செலவாகும்.

• தானாக "டீஃப்ராஸ்ட்' ஆகாத ஃபிரிட்ஜாக இருந்தால் ஐஸ்கட்டி அதிகமாக பிடித்துப் போகாமல் அடிக்கடி "டீஃப்ராஸ்ட்' செய்யுங்கள். இல்லாவிட்டால் அதிக மின்சாரம் செலவாகும்.

• கோடை காலங்களில் வாஷிங் மெஷினில் துவைக்கும் பகுதியை மட்டும் பயன்படுத்தவும். டிரையரை குளிர், மழை காலங்களில் மட்டும் பயன்படுத்தினால் மின்சாரம் மிச்சமாகும்.

• கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்ய, ஷட்டௌவ்ன் செய்ய சோம்பற்பட்டு ஸ்க்ரீன் சேவரில் போட்டு வைப்பதால் மின்சாரம் பெரிய அளவில் விரயமாகும்.

• ஏசி-யை வருடத்திற்கு இருமுறை சுத்தம் செய்யுங்கள். ஏசி ஃபில்டரை மாதாமாதம் சுத்தம் செய்யுங்கள். இதனால் மின்சாரம் விரயமாவதைத் தவிர்க்கலாம்.

• ஃப்ரிட்ஜின் கதவு சரியாக மூடாமலிருந்தாலும், அடிக்கடி ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்து மூடினாலும் மின்சாரம் பாழாகும்.

• நீண்ட நாள்களுக்கு வெளியூருக்குச் சென்றால் ஃபிரிட்ஜை அணைத்துவிடுவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

• பல்புகளின் மீதுள்ள தூசியை துடைத்து வைத்தால் அதிக வெளிச்சம் கிடைப்பதோடு, மின்சாரமும் மிச்சமாகும்.

• பயன்படுத்திய விளக்குகள், மின்விசிறி, டிவி, கம்ப்யூட்டர் என அனைத்தையும் அணைத்தபிறகே அறையைவிட்டு வெளியேறுங்கள்.

• கூடியவரை வீட்டில் பலர் ஒரே அறையில் இருந்து படிப்பது, டிவி பார்ப்பது என திட்டமிட்டால் மின்சார செலவு குறையும்.

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்] • மோட்டாரிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் குழாய்களை அதிக வளைவில்லாமல் பொருத்தினால் தண்ணீர் விரைவாக மேலேறும்; மின்சாரமும் மிச்சமாகும்.

• காய்ந்த துணியில் தண்ணீர் தெளித்து அதன்மீது இஸ்திரி போட்டால் மின்சாரம் அதிகமாக செலவாகும்.

• தானாக "டீஃப்ராஸ்ட்' ஆகாத ஃபிரிட்ஜாக இருந்தால் ஐஸ்கட்டி அதிகமாக பிடித்துப் போகாமல் அடிக்கடி "டீஃப்ராஸ்ட்' செய்யுங்கள். இல்லாவிட்டால் அதிக மின்சாரம் செலவாகும்.

• கோடை காலங்களில் வாஷிங் மெஷினில் துவைக்கும் பகுதியை மட்டும் பயன்படுத்தவும். டிரையரை குளிர், மழை காலங்களில் மட்டும் பயன்படுத்தினால் மின்சாரம் மிச்சமாகும்.

• கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்ய, ஷட்டௌவ்ன் செய்ய சோம்பற்பட்டு ஸ்க்ரீன் சேவரில் போட்டு வைப்பதால் மின்சாரம் பெரிய அளவில் விரயமாகும்.

• ஏசி-யை வருடத்திற்கு இருமுறை சுத்தம் செய்யுங்கள். ஏசி ஃபில்டரை மாதாமாதம் சுத்தம் செய்யுங்கள். இதனால் மின்சாரம் விரயமாவதைத் தவிர்க்கலாம்.

• ஃப்ரிட்ஜின் கதவு சரியாக மூடாமலிருந்தாலும், அடிக்கடி ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்து மூடினாலும் மின்சாரம் பாழாகும்.

• நீண்ட நாள்களுக்கு வெளியூருக்குச் சென்றால் ஃபிரிட்ஜை அணைத்துவிடுவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

• பல்புகளின் மீதுள்ள தூசியை துடைத்து வைத்தால் அதிக வெளிச்சம் கிடைப்பதோடு, மின்சாரமும் மிச்சமாகும்.

• பயன்படுத்திய விளக்குகள், மின்விசிறி, டிவி, கம்ப்யூட்டர் என அனைத்தையும் அணைத்தபிறகே அறையைவிட்டு வெளியேறுங்கள்.

• கூடியவரை வீட்டில் பலர் ஒரே அறையில் இருந்து படிப்பது, டிவி பார்ப்பது என திட்டமிட்டால் மின்சார செலவு குறையும்.

Via தமிழால் இணைவோம்

நம்ம ஊரிலும் பேரிச்சம்பழம் விளையும்...!!!!!

பேரிச்சைமரம் வளர்த்து வெற்றி கண்ட சாதனை மனிதர் திரு. S. நிஜாமுதீன்..! 

பன்னாட்டு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் வறட்சியை தாங்கி வளரும் பயிருக்கு மரபணு மாற்றம் (வறட்சியை தாங்க), மாற்றுப்பயிர் (உ.த. காட்டாமணக்கு ) என கோடிகளில் செலவு செய்து விவசாயிகளை மேலும்
குழப்பத்திலும், நஷ்டத்திலும் வாழ வைத்து, அவர்கள் தற்கொலையை நோக்கி போய்கொண்டிருக்கும் வேளையில் வறட்சியை தாங்கி, செலவும் பராமரிப்பும் குறைந்த...

அதிக லாபம் தரும் ஒரு நீண்ட கால மாற்றுப் பயிரை அறிமுகப்படுத்தி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ஒரு விவசாய அமைதி புரட்சியை செய்து கொண்டிருப்பவர் தருமபுரி விவசாயி திரு.S.நிஜாமுதீன்.

திரை கடலோடி திரவியம் தேடி கூடவே ஒரு மாற்றுப்பயிரையும் கண்டு அதனை தன் நிலத்திலேயே நட்டு சோதனை செய்து வெற்றியடைந்த பின் அறிமுகம் செய்து இன்று சுமார் 2000 ஏக்கர் தமிழகத்திலும் சுமார் 700
ஏக்கர் அண்டை மாநிலங்களிலும் விரும்பி பயிரிடப்படுகின்றது என்பது திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

கீழ்கண்ட நன்மைகள் இதைப் பயிரிடுவதால் கிடைக்கின்றது.

1. குறைந்த நீர்.
2. பராமரிப்பு செலவு குறைவு.
3. ஆடு,மாடுகள் சேதப்படுத்துவதில்லை.
4. களர் நிலத்திலும் வளர்கிறது.
5. நீண்ட நாட்கள் பழங்களைப் பதப்படுத்தி பாதுகாக்கலாம்.
6. நீண்ட காலப்பயிர் 5-100 ஆண்டுகள் வரை.
7. நல்ல மகசூல் சுமார் 100 - 300 கிலோ/ஆண்டு.
8. விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கின்றது.
9. சிறந்த சத்துள்ள (இரும்புச்சத்து) பழம்.
10. தரிசு நிலம் மேம்படுவதோடு வேலை வாய்ப்பும் பெருகுகின்றது.
11. முக்கியமாக அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது.

உலகிலேயே பேரீட்சையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான் !!!???

இறக்குமதியை குறைத்தாலே அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது. எனவே தமிழக அரசும், மத்திய அரசும் தங்கள் திட்டங்களில் இதனை அறிமுகம் செய்தால் அடுத்த 10-20 ஆண்டுகளில் நிறைய அந்நிய செலவாணியை மிச்சபடுத்த முடிவதோடு நிலத்தின் பயன்பாட்டையும் அதிகரிக்கமுடியும்.

மிகச் சிறந்த ஒரு மாற்றுப்பயிரை நமக்கு அறிமுகம் செய்த திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தொடர்புக்கும் விளக்கங்களுக்கும்
கீழ் கண்ட வலைதளத்தைக் காணுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://www.datesindia.com/

தண்ணீர் பற்றாகுறை, அதிக உர விலை, என கவலையில் இருக்கும் விவசாயிகளிடம் இந்த மரம் குறித்த தகவல்களை கொண்டு செல்ல வேண்டும். வேளாண்மை துறை முயற்சி எடுத்து இதனை கவனிக்கவேண்டும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து அவர்களை மேலும் மேலும் பணக்காரர்களாக்குவதை விட, தற்கொலை செய்து தன் இன்னுயிரை மாய்த்து கொண்டிருக்கும் நம் விவசாய மக்களின் அவல நிலை மாற்றப்படவேண்டும், அதற்கு இந்த மரப்பயிர் துணை புரியும். கவனிக்குமா அரசு ?!!பேரிச்சைமரம் வளர்த்து வெற்றி கண்ட சாதனை மனிதர் திரு. S. நிஜாமுதீன்..!

பன்னாட்டு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் வறட்சியை தாங்கி வளரும் பயிருக்கு மரபணு மாற்றம் (வறட்சியை தாங்க), மாற்றுப்பயிர் (உ.த. காட்டாமணக்கு ) என கோடிகளில் செலவு செய்து விவசாயிகளை மேலும்
குழப்பத்திலும், நஷ்டத்திலும் வாழ வைத்து, அவர்கள் தற்கொலையை நோக்கி போய்கொண்டிருக்கும் வேளையில் வறட்சியை தாங்கி, செலவும் பராமரிப்பும் குறைந்த...

அதிக லாபம் தரும் ஒரு நீண்ட கால மாற்றுப் பயிரை அறிமுகப்படுத்தி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ஒரு விவசாய அமைதி புரட்சியை செய்து கொண்டிருப்பவர் தருமபுரி விவசாயி திரு.S.நிஜாமுதீன்.

திரை கடலோடி திரவியம் தேடி கூடவே ஒரு மாற்றுப்பயிரையும் கண்டு அதனை தன் நிலத்திலேயே நட்டு சோதனை செய்து வெற்றியடைந்த பின் அறிமுகம் செய்து இன்று சுமார் 2000 ஏக்கர் தமிழகத்திலும் சுமார் 700
ஏக்கர் அண்டை மாநிலங்களிலும் விரும்பி பயிரிடப்படுகின்றது என்பது திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

கீழ்கண்ட நன்மைகள் இதைப் பயிரிடுவதால் கிடைக்கின்றது.

1. குறைந்த நீர்.
2. பராமரிப்பு செலவு குறைவு.
3. ஆடு,மாடுகள் சேதப்படுத்துவதில்லை.
4. களர் நிலத்திலும் வளர்கிறது.
5. நீண்ட நாட்கள் பழங்களைப் பதப்படுத்தி பாதுகாக்கலாம்.
6. நீண்ட காலப்பயிர் 5-100 ஆண்டுகள் வரை.
7. நல்ல மகசூல் சுமார் 100 - 300 கிலோ/ஆண்டு.
8. விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கின்றது.
9. சிறந்த சத்துள்ள (இரும்புச்சத்து) பழம்.
10. தரிசு நிலம் மேம்படுவதோடு வேலை வாய்ப்பும் பெருகுகின்றது.
11. முக்கியமாக அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது.

உலகிலேயே பேரீட்சையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான் !!!???

இறக்குமதியை குறைத்தாலே அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது. எனவே தமிழக அரசும், மத்திய அரசும் தங்கள் திட்டங்களில் இதனை அறிமுகம் செய்தால் அடுத்த 10-20 ஆண்டுகளில் நிறைய அந்நிய செலவாணியை மிச்சபடுத்த முடிவதோடு நிலத்தின் பயன்பாட்டையும் அதிகரிக்கமுடியும்.

மிகச் சிறந்த ஒரு மாற்றுப்பயிரை நமக்கு அறிமுகம் செய்த திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தொடர்புக்கும் விளக்கங்களுக்கும்
கீழ் கண்ட வலைதளத்தைக் காணுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://www.datesindia.com/

தண்ணீர் பற்றாகுறை, அதிக உர விலை, என கவலையில் இருக்கும் விவசாயிகளிடம் இந்த மரம் குறித்த தகவல்களை கொண்டு செல்ல வேண்டும். வேளாண்மை துறை முயற்சி எடுத்து இதனை கவனிக்கவேண்டும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து அவர்களை மேலும் மேலும் பணக்காரர்களாக்குவதை விட, தற்கொலை செய்து தன் இன்னுயிரை மாய்த்து கொண்டிருக்கும் நம் விவசாய மக்களின் அவல நிலை மாற்றப்படவேண்டும், அதற்கு இந்த மரப்பயிர் துணை புரியும். கவனிக்குமா அரசு ?!!
 
via ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 
வல்லவனுக்கு வல்லவன்

மன்னர் மகிபாலனின் அரசவையில் பாலா என்ற விகடகவி இருந்தார். விகடகவியின் புத்திக்கூர்மை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவரை தனது அரசாங்க ஆலோசகராகவும் நியமித்துக் கொண்டார்.

விகடகவி பாலா அரசாங்க ஆலோசகராக இருப்பது அரண்மனை அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பொறாமையை உண்டு பண்ணியது. விகடகவியை
எப்படியாவது அரண்மனையை விட்டே ஒழித்துவிட வேண்டும் என அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்களுக்குள் முடிவெடுத்தனர்.

அன்று மன்னர் சபையில் அறிஞர் பெருமக்கள் பலரும் வீற்றிருந்தனர். அப்போது அரசபை மன்றத்திற்கு அயல்நாட்டு அறிஞர் ஒருவர் வந்தார்.

அவரைக் கண்டதும் அமைச்சர்களும், அதிகாரிகளும் சந்தோஷத்தால் துள்ளி எழுந்தனர். ஏனென்றால் அவர்கள் தான் தங்கள் திட்டத்தின்படி அந்த அறிஞரை வரவழைத்திருந்தனர்.

""அரசே! நான் சாஸ்திரங்களையும், பல கலைகளையும் கற்று சேர்ந்தவன். மேலும் நான் ஒரு சிறந்த விகடகவி. என்னோடு யாருமே போட்டியிட முடியாது. எனது திறமையை நிரூபிக்கவே உங்களைத் தேடி வந்துள்ளேன்,'' என்று கூறினார்.

இவர்களின் கபட நாடகத்தை அறியாத மன்னரும், ""வாருங்கள் விகடகவியே! எங்கள் அரசபையிலும் உங்களைப் போன்று ஒரு விகடகவி இருக்கிறார். இருந்தாலும் உங்கள் திறமையை இந்த சபையினில் காட்டுங்கள்,'' என்று கூறினார்.

""அரசே! உங்கள் நாட்டு விகடகவியோடு நான் போட்டியிட வேண்டும். அதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும்,'' என்று பணிவுடன் வேண்டி நின்றார்.

அதைக் கேட்ட மன்னரும் ஹ... ஹா... ஹா... என்று பலமாக சிரித்தார்.

""அரசபை விகடகவியே நீங்கள் மிகச் சிறந்த அறிவாளி என்று கேள்விப்பட்டேன். கணிதத்திலும் தேர்ச்சி பெற்றவர் என்று அறிந்தேன். அதனால் உங்கள் தலைமுடியை ஒவ்வொன்றாக எண்ணி அதன் மொத்த எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா?'' என்றார்.

அயல்நாட்டு அறிஞரின் கேள்வி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ""தலைமுடியை எப்படி எண்ண முடியும்?'' என்று ஒருவருக்கொருவர் தங்களை கேட்டுக் கொண்டனர்.

""ஐயா! அறிஞரே! நான் மொத்த முடியை எண்ணி முடிப்பதற்கு ஒரு நாள் கால அவகாசம் வேண்டும். நாளை என் தலைமுடியின் எண்ணிக்கையை இந்த அரசபையில் தெரிவிக்கிறேன்'' என்று கூறினார் பாலா.

அதைக் கேட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும், ""ஒரு நாள் என்ன பத்து நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டாலும் பாலா தன் தலைமுடியை எண்ண முடியாது,'' என்று தங்களுக்குள் கூறிக் கொண்டனர்.

அடுத்த நாள் சபை கூடியது—

அனைவரும் விகடகவி பாலாஎன்ன செய்யப் போகிறார் என்ற ஆவலோடு இருந்தனர்.

""அறிஞர் பெருமானே! நீங்கள் விதித்தப்படி நான் எனது தலைமுடியை எண்ணி முடித்துவிட்டேன். ஆனால் அதற்குள் ஒரு நிபந்தனை. அந்த நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டாக வேண்டும்.

""எனது எண்ணிக்கை தவறாக இருந்தால் நான் எனது தலையை இழக்க தயாராக இருக்கிறேன். ஆனால், சரியாக இருந்தால் நீங்கள் உங்கள் தலையை இழக்க வேண்டும். சம்மதமா?'' என்றார்.

""பாலா! உமது நிபந்தனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீர் உமது தலைமுடியின் எண்ணிக்கையை கூறும்,'' என்று கம்பீரமாக குரல் கொடுத்தார்.

பாலாவின் பதிலைக் கேட்க எல்லாரும் ஆவலாக இருக்க, அவர் மவுனமாக நின்றபடி தன் தலையின் மேலிருந்த தலைப்பாகையை கழற்றி எடுக்க, அவர் தலையை கண்ட அனைவரும் "கொல்' என்று சிரித்து விட்டனர்.

பாலா மொட்டை தலையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் தலையின் முன்னே இரண்டு முடிகள் மட்டும் நீண்டு கொண்டிருந்தன.

""அறிஞர் பெருமானே! என் தலையில் இரண்டு முடிகள் தான் இருக்கின்றன. நீங்களும் நன்றாக எண்ணிப் பாருங்கள்,'' என்று கூறினார்.

பாலாவை ஒழிப்பதற்கு திட்டம் போட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் வெட்கத்தால் தலை குனிந்தனர். தன் தலைக்கு ஆபத்து வந்துவிட்டதை நினைத்த அயல்நாட்டு அறிஞரின் உடலெல்லாம் நடுங்கியது.

""அறிஞரே! நீங்கள் அச்சத்தால் நடுங்குவது நீங்கள் கற்ற கல்விக்கு அழகல்ல! உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. இனிமேலாவது என்னை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அலைபவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த மாதிரி செயல்களில் ஈடுபடாதீர்கள்,'' என்று கூறினார்.

மன்னர் விகடகவி பாலாவுக்கு பல பரிசுகள் கொடுத்து தனது பாராட்டையும் தெரிவித்தார்.
Via உலக தமிழ் மக்கள் இயக்கம்

பேஸ்புக்கில் டேக் செய்வதை தடுக்க

***** பேஸ்புக்கில் டேக் செய்வதை தடுக்க *****

பேஸ்புக்கில் பிறர் நம்மை டேக் செய்வதை தடுப்பது எப்படி? என்று கேட்டால் அதற்கு உண்மையான பதில், "தடுக்க முடியாது" என்பது தான். ஆனால் நாம் டேக் செய்யப்பட போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ் நம் அனுமதி இல்லாமல் நம் டைம்லைனிலோ, நண்பர்களுக்கோ தெரியாமல் செய்ய வைக்கலாம்.

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account Settings என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கே இடதுபுறம் Timeline and Tagging என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அங்கே Who can add things to my timeline? என்ற இடத்தில், இரண்டாவதாக உள்ள Review posts friends tag you in before they appear on your timeline? என்பதை க்ளிக்செய்து, அதில் Enabled என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்!

இனி யாராவது உங்களை டேக் செய்தால் அது பற்றி உங்களுக்கு அறிவிப்பு வரும். அதை க்ளிக் செய்தால் Timeline Review பகுதிக்கு செல்லும்.

அங்கே இரண்டு பட்டன்கள் இருக்கும். Add to Timeline என்பதை க்ளிக் செய்தால் உங்கள் டைம்லைனில் தெரியும். Hide என்பதை க்ளிக் செய்தால் தெரியாது.

இந்த வசதி இருந்தாலும், அந்த போட்டோ அல்லது ஸ்டேட்டஸில் உள்ள உங்கள் டேக் அப்படியே தான் இருக்கும். அதனை நீக்க விரும்பினால்,

மேலே சொன்னது போல Hide செய்தபிறகு, Report/Remove Tag என்று காட்டும். அதனை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு I want to untag myself என்பதை க்ளிக் செய்து Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் Tag நீக்கப்பட்டுவிடும்.

தகவல்: www.bloggernanban.com

தகவல்: bloggernanban

வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்

1. எனக்கு "வயதாகிவிட்டது" என்று எப்போதும் சொல்லாதீர்கள். மூன்று வகைகளில் வயதைக் கணக்கிடலாம். முதல் வழி உங்கள் பிறந்த தேதியை வைத்து. இரண்டாவது வழி உங்கள் உடல் ஆரோக்கியத்தை வைத்து. மூன்றாவது வழி உங்கள் வயது எவ்வளவு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது. உங்கள் பிறந்த தேதியை மாற்ற முடியாது. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு பராமரிக்க முடியும். உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப்பற்றிய நல்ல கனவுகளுடன் வாழுங்கள்.

2. நல்ல ஆரோக்கியமே மனிதனின் சொத்து. நீங்கள் உங்கள் மனைவி மக்களை உண்மையாக விரும்புவீர்களானால் உங்கள் உடல் நலத்தை முக்கிமாகப் பேணவேண்டும். அவர்களுக்கு நீங்கள் ஒருபோதும் பாரமாகி விடக்கூடாது. வருடத்திற்கு ஒரு முறை ஹெல்த் செக்அப் செய்து கொள்ளுங்கள். ஹெல்த் இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள்.

3. பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய, குடும்ப அங்கத்தினர்களின் மரியாதையைப் பெற, உடல் ஆரோக்கியத்தைப் பேண, இத்தியாதி காரியங்களுக்குப் பணம் தேவை. உங்கள் குழந்தைகளானாலும் சரி, உங்கள் சக்திக்கு மீறி செலவு செய்யாதீர்கள். வயதான காலத்தில் அவர்கள் உங்களைக் காப்பாற்றினால் சந்தோஷப்படுங்கள். இல்லாவிட்டால் உங்கள் காலில் நிற்க பணம் தேவை.

4. அமைதியான வாழ்வு வாழுங்கள். நல்ல பொழுது போக்குகளும் நல்ல தூக்கமும் வாழ்க்கைக்கு அவசியம். ஆன்மீக விஷயங்களில் நாட்டமும், நல்ல சங்கீதமும் அமைதிக்கு வழி.

5. நேரம் விலை மதிப்பு மிக்கது. அதுவும் வயதான பின்பு மிகமிக மதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிதாகப் பிறக்கிறீர்கள். அந்த நாளை கவலைகளில் வீணாக்காமல் இன்பமாக கழியுங்கள்.

6. மாறுதல் ஒன்றே மாறாதது. காலம், மனிதர்கள், வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைக்குறித்து வருத்தப்படாமல் நீங்களும் அந்த மாறுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்.

7. கொஞ்சம் சுயநலத்துடன் வாழுங்கள். உங்களுக்கு என்று சில விருப்பங்கள் இருக்கலாம். இது நாள் வரை மற்றவர்களுக்காக உழைத்ததில் அந்த விருப்பங்களை தள்ளிப்போட்டிருப்பீர்கள். இப்போது அவைகளை அனுபவியுங்கள். அது சுயநலம் போல் தோன்றினாலும் அந்த சுய நலம் உங்களுக்குத் தேவை.

8. மன்னிப்போம்-மறப்போம். மற்றவர்களின் குறைகளை பெரிது பண்ணாதீர்கள். உங்களுடைய நலனுக்காக, உங்களுடைய இரத்த அழுத்தம் அதிகமாகாமலிருக்க மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து மறந்து விடுங்கள்.

9. ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். வாழ்க்கையை அதன் போக்கிலேயே அனுபவியுங்கள். மற்றவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் பாணியில் வாழ சுதந்திரம் உண்டு.

10. மரண பயத்தை வெல்லுங்கள். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதி மாற்ற முடியாதது. அதை உணர்ந்து மரண பயத்தை வெல்லுங்கள். நீங்கள் இறந்து விட்டால் உங்கள் மனைவி மக்கள் எப்படி வாழ்வார்கள் என்ற கவலை வேண்டாம். யாரும் இறந்தவர்களுடன் இறப்பதில்லை. வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
Via பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.

வேப்பம் பொடி

வேப்பம் பொடி

வேப்பம் பூ summer-ரில் அதிகமாகக் கிடைக்கும். இல்லை என்றாலும் சென்னையில் அம்பிகா அப்பளம், சாரதா ஸ்டோர், நாட்டு மருந்து கடை போன்ற இடங்களில் விலை அதிகம் என்றாலும் வாங்கி, கொஞ்சம் சுத்தம் செய்து கொண்டு இந்தப் பொடியை இடித்துக் கொள்ளுங்கள். உடம்புக்கு ரொம்ப நல்லது. வேப்பிலை கட்டியே கூட பாக்கெட்டில் கிடைக்கிறது. இருந்தாலும் நாமே வீட்டில் செய்தால் ஒரு சந்தோஷம்தான்.

நிறையா தண்ணீர் விட்ட மோரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியை போட்டு கலக்கி குடித்தால் தேவாமிருதம் கூட வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்கள். அநியாயத்துக்கு வெளியே எங்கேயாவது சாப்பிட்டு விட்டு வந்துட்டீங்கன்னா, நெஞ்செரிச்சல், வாயுத் தொல்லை, வயிறு உப்பி இருக்கிறது, மந்தமாய் உணருதல், food poisoning ஆகிடுமோ என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. இஞ்சி எலுமிச்சை சாறில் இதை ஒரு டீஸ்பூன் போட்டு கலக்கி குடித்தால் வயிறு சாதாரணமாகிவிடும்.

ஒரு டவரா அளவுக்கு வேப்பம் பொடி செய்ய தேவையானவை:

வேப்பம்பூ - 1 கப்
வேப்பங்கொழுந்து (கிடைத்தால் அமோகம்) - ஒரு கைப் பிடி
கடலைபருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
நீள வற்றல் மிளகாய் - 4
பொடி பெருங்காயம்- ஒரு டீஸ்பூன் 
கல் உப்பு - தேவைக்கேற்ப (ஒரு டீஸ்பூன் அளவு போடலாம்)

வேப்பம் பூ காய்ந்திருந்தால் பரவாயில்லை. பச்சையாய் இருந்தால் அப்படியே நிழல் உலர்த்தலாய் காய வைத்துக் கொள்ளுங்கள். வேப்பங்கொழுந்தையும் அதே போல நன்றாக அலசி உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். வேப்பங்கொழுந்து தொட்டால் கையில் ஒட்டுமே அந்தமாதிரிக் கொழுந்தாக இருக்க வேண்டும். 

எல்லாவற்றையும் தனித் தனியாக வெறும் வாணலியில் வாசனை (தீய்ந்த வாசனை இல்லீங்க) வரும் வரை வறுத்துக் கொண்டு ஆற வைக்கவும். முதலில் கடலைபருப்பு, வற்றல் மிளகாய், பின் உளுந்து, பின் மிளகு, வரமிளகாய், கல் உப்பு கடைசியில் பெருங்காயம் மற்றும் வேப்பம்பூ, வேப்பங்கொழுந்து என்று ஒவ்வொன்றாக சேர்த்து பொடிக்கவும்.

புழுங்கரிசி சாதத்தில் இந்தப் பொடியை ரெண்டு ஸ்பூன் தூவி, சீரகத்தை நெய்யில் பொரித்து அதன் மேல் ஊற்றி கலந்து சாப்பிடலாம். நெய் வேண்டாம் என்றால் நல்லெண்ணெய் காய்ச்சியும் ஊற்றலாம். 

தணலில் சுட்ட மிளகு அப்பளம் அல்லது அரிசி அப்பளம் அருமையாக இருக்கும். தக்காளி ராய்த்தா கூட நன்றாக இருக்கும். 

ஜுரம், வயிற்றுக்கடுப்புக்கு சாப்பாடு பத்தியம் என்றால் தயிர் தக்காளி எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

மோர் சாதத்துக்கும் இந்தப் பொடியை தொட்டுக் கொள்ளலாம்.

Via  ஆரோக்கியமான வாழ்வு
 
ஆடுகள் வளர்ப்பு !

“ஒரு தலைச்சேரி ஆடு 2 வருஷத்தில் மூணு தடவை குட்டி போடும். ஒரு தடவைக்கு 3 முதல் 5 குட்டி வரை போடும். ஒரு குட்டி பிறக்கும் போதே 4 கிலோவுக்கு குறையாமல் இருக்கும். மூணே மாசத்தில் அது 20 கிலோவாக வளர்ந்திடும். அடர்த்தியான பால் ஒரு நாளைக்கு 2 லிட்டர் வரை கிடைக்கும். முழு வளர்ச்சியடைந்த கிடா வருஷம் முடிஞ்சா 50 முதல் 60 கிலோ வரை கூட எடை வரும். இறைச்சின்னு பார்த்தீங்கன்னா சாதாரண ஆடு ஒரு வருஷம் தாண்டினாலே கறியாக்கினால் வேக்காடு சரியா கிடைக்காது. ஆனா தலைச்சேரியைப் பொறுத்தவரை 4 வருஷம் வளர்ந்த ஆட்டுக்கறி கூட படு ஸ்மூத்தா இருக்கும். சீக்கிரம் வெந்தும் விடும். அதனால இப்பவெல்லாம் தலைச்சேரி ஆடுகளுக்குத்தான் செம கிராக்கி!”
-ஆடுகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் போதும் பெரிய ‘விரிவுரை’யே நடத்துகிறார் அப்பாஸ். கோவை குனியமுத்தூரில், குறிஞ்சி காலனியில், குறிஞ்சி ஆட்டுப் பண்ணை நடத்தும் இளைஞர். பண்ணை என்றதும் ஏதோ ஏழெட்டு ஏக்கரில் ஆயிரக்கணக்கான ஆடுகளை வைத்து பெரிய அளவில் வியாபாரம் நடத்துகிறார் என்று எண்ணி விடாதீர்கள். வெறும் ஏழு சென்ட் வசிப்பிடத்தில் தன் குடும்பத்துக்கும் ஒரு வீடு அமைத்துக் கொண்டு, எஞ்சியுள்ள பகுதியில் சிறிய ஆட்டுப்பட்டியை உருவாக்கிக் கொண்டு சுயமாகத் தொழில் நடத்துகிறார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். இவரது சொற்ப இடத்தில் தலைச்சேரி மட்டுமல்ல; வால்குரும்பை, உஸ்மேனியாபதி, சிரோய் என்று ஆடுகளில் லேட்டஸ்ட் ரகங்கள் எத்தனை உண்டோ, அத்தனையும் இருக்கின்றன. தினம்தோறும் 20, 30 ஆடுகள் புதிதாக வருகிறது என்றால் அதே அளவுக்கான ஆடுகள் வெளியாட்கள் விலை கொடுத்து வாங்கிச் சென்றபடி இருக்கிறார்கள்.
“சின்ன வயசுல ஹாபியாகத்தான் ஆடு வளர்த்தறதுல ஈடுபட்டேன். இப்ப அதுவே தமிழ்நாடு முழுக்க மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கும் சப்ளை செய்யக்கூடிய வியாபாரமா மாறிடுச்சு. சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. ஒரு ஆள் ஒரு தலைச்சேரி ஆடு செனையில வாங்கி வச்சு வளர்த்தார்ன்னா ஆறே மாசத்துல அது ஆறாகி, ஒரு வருஷத்தில் அதுவே முப்பத்தாறாகி இரண்டு வருஷத்தில் நூற்றுக்கணக்கில் பெருக்கம் செய்யக் கூடிய தொழில் இது. இறைச்சி கணக்குல ஒரு கிலோ ரூ. 250 கணக்கிட்டு மொத்த வியாபாரிக்கு கொடுத்தா கூட ஒரு ஆடு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபா வரை கூட விலை போகும். நூறு ஆடு கணக்குப் போட்டு பாருங்க பத்து இலட்சம் ரூபா. இரண்டு வருஷத்துல முதலீடு 5 லட்சம் கழிச்சா கூட மீதி அஞ்சு இலட்சம் சுளையா கிடைக்கும்!” என்று நம்பிக்கை ததும்பப் பேசுகிறார். பொதுவாக ஆடுகள் வளர்ப்பு என்றால் குதிரை மசால் தழை, இளம் புற்கள், செடி கொடிகள்தான் போடணும். அதற்கு நிறைய செலவு பிடிக்கும். பசுந்தழைகள் வறட்சி காலத்தில் கிடைப்பது கடினம் என்று நினைக்கிறார்கள். இதற்கு அவசியமேயில்லை என்கிறார் அப்பாஸ். “ஆடுகளைப் பொறுத்தவரை நாம் எதை சாப்பிடக் கொடுத்துப் பழக்குகிறோமோ அதற்குத் தானாகவே பழகி விடும். பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, அரிசி, பருப்பு, வைக்கோல், வாழை மட்டை கழிவுகள்னு எதைவேண்ணா சாப்பிட்டு வளரும். அதிலும் நாங்கள் பண்ணையில் வைத்திருக்கிற ரகங்கள் எங்கு இருந்தாலும் அந்தச் சூழ்நிலைக்கேற்ப கொடுப்பதைச் சாப்பிட்டு வளரக்கூடிய ரகங்கள்!” என்றும் விளக்கினார் அப்பாஸ்.
ஆடுகளில் வால் குரும்பை 2 வருஷத்தில் 100 கிலோ வரை எடை வரும். தவிர அதன் முடி 12 அங்குலம் வரை வளருமாம். இந்த முடி கம்பளி நெய்தலுக்கு நல்ல விலை போகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த ரகத்திற்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். எங்கு வளர்த்தாலும் நோய், நொடிகள் அண்டாதாம். இதன் குட்டிகள் ஒரு மாதத்திலேயே முப்பது கிலோ வரை வளரக் கூடியவை. ஊர் ஊராக மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று பட்டி போட்டு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதை வளர்த்து கோடீஸ்வரர்கள் ஆன கதைகள் உண்டாம்.
இந்த ஆடுகள் பட்டி போடும் இடத்தில் புழுக்கைகள் பெரிய அளவு இயற்கை உரமாகப் பயன்படுவதால் விவசாயிகள் பட்டி போடுவதற்குத் தனியாகப் பணமும் கொடுப்பதால், இதன் மூலம் உபரி வருமானமும் கிடைக்கிறது.
சிறுவகை என்று ஒரு ரகம். ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்டவை. வருஷத்துக்கு ஒரே குட்டி போடும். அபூர்வமாக 2 குட்டிகள் போடும். 3 மாசத்தில் 30 கிலோ எடை வந்து விடும். ஒரு வருஷத்தில் அறுபது கிலோ எடையை எட்டி விடும். “ஆடு வளர்ப்பில் பிஸினஸுக்கு எது சரியோ அதையே தற்போது விரும்புகிறார்கள். ஆனால் விவசாயப் பெருமக்களுக்கு இது எட்டுவதில்லை. ஆடுகள் மூலம் அவர்களை ஈர்ப்பதும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையுமே எனது இலட்சியமாகக் கொண்டு இயங்கி வருகிறேன்!” என்கிறார் அப்பாஸ்

The contact numbers of Mr.Abbas are 7667643724, 9865711155, 9944623619“ஒரு தலைச்சேரி ஆடு 2 வருஷத்தில் மூணு தடவை குட்டி போடும். ஒரு தடவைக்கு 3 முதல் 5 குட்டி வரை போடும். ஒரு குட்டி பிறக்கும் போதே 4 கிலோவுக்கு குறையாமல் இருக்கும். மூணே மாசத்தில் அது 20 கிலோவாக வளர்ந்திடும். அடர்த்தியான பால் ஒரு நாளைக்கு 2 லிட்டர் வரை கிடைக்கும். முழு வளர்ச்சியடைந்த கிடா வருஷம் முடிஞ்சா 50 முதல் 60 கிலோ வரை கூட எடை வரும். இறைச்சின்னு பார்த்தீங்கன்னா சாதாரண ஆடு ஒரு வருஷம் தாண்டினாலே கறியாக்கினால் வேக்காடு சரியா கிடைக்காது. ஆனா தலைச்சேரியைப் பொறுத்தவரை 4 வருஷம் வளர்ந்த ஆட்டுக்கறி கூட படு ஸ்மூத்தா இருக்கும். சீக்கிரம் வெந்தும் விடும். அதனால இப்பவெல்லாம் தலைச்சேரி ஆடுகளுக்குத்தான் செம கிராக்கி!”
-ஆடுகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் போதும் பெரிய ‘விரிவுரை’யே நடத்துகிறார் அப்பாஸ். கோவை குனியமுத்தூரில், குறிஞ்சி காலனியில், குறிஞ்சி ஆட்டுப் பண்ணை நடத்தும் இளைஞர். பண்ணை என்றதும் ஏதோ ஏழெட்டு ஏக்கரில் ஆயிரக்கணக்கான ஆடுகளை வைத்து பெரிய அளவில் வியாபாரம் நடத்துகிறார் என்று எண்ணி விடாதீர்கள். வெறும் ஏழு சென்ட் வசிப்பிடத்தில் தன் குடும்பத்துக்கும் ஒரு வீடு அமைத்துக் கொண்டு, எஞ்சியுள்ள பகுதியில் சிறிய ஆட்டுப்பட்டியை உருவாக்கிக் கொண்டு சுயமாகத் தொழில் நடத்துகிறார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். இவரது சொற்ப இடத்தில் தலைச்சேரி மட்டுமல்ல; வால்குரும்பை, உஸ்மேனியாபதி, சிரோய் என்று ஆடுகளில் லேட்டஸ்ட் ரகங்கள் எத்தனை உண்டோ, அத்தனையும் இருக்கின்றன. தினம்தோறும் 20, 30 ஆடுகள் புதிதாக வருகிறது என்றால் அதே அளவுக்கான ஆடுகள் வெளியாட்கள் விலை கொடுத்து வாங்கிச் சென்றபடி இருக்கிறார்கள்.
“சின்ன வயசுல ஹாபியாகத்தான் ஆடு வளர்த்தறதுல ஈடுபட்டேன். இப்ப அதுவே தமிழ்நாடு முழுக்க மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கும் சப்ளை செய்யக்கூடிய வியாபாரமா மாறிடுச்சு. சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. ஒரு ஆள் ஒரு தலைச்சேரி ஆடு செனையில வாங்கி வச்சு வளர்த்தார்ன்னா ஆறே மாசத்துல அது ஆறாகி, ஒரு வருஷத்தில் அதுவே முப்பத்தாறாகி இரண்டு வருஷத்தில் நூற்றுக்கணக்கில் பெருக்கம் செய்யக் கூடிய தொழில் இது. இறைச்சி கணக்குல ஒரு கிலோ ரூ. 250 கணக்கிட்டு மொத்த வியாபாரிக்கு கொடுத்தா கூட ஒரு ஆடு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபா வரை கூட விலை போகும். நூறு ஆடு கணக்குப் போட்டு பாருங்க பத்து இலட்சம் ரூபா. இரண்டு வருஷத்துல முதலீடு 5 லட்சம் கழிச்சா கூட மீதி அஞ்சு இலட்சம் சுளையா கிடைக்கும்!” என்று நம்பிக்கை ததும்பப் பேசுகிறார். பொதுவாக ஆடுகள் வளர்ப்பு என்றால் குதிரை மசால் தழை, இளம் புற்கள், செடி கொடிகள்தான் போடணும். அதற்கு நிறைய செலவு பிடிக்கும். பசுந்தழைகள் வறட்சி காலத்தில் கிடைப்பது கடினம் என்று நினைக்கிறார்கள். இதற்கு அவசியமேயில்லை என்கிறார் அப்பாஸ். “ஆடுகளைப் பொறுத்தவரை நாம் எதை சாப்பிடக் கொடுத்துப் பழக்குகிறோமோ அதற்குத் தானாகவே பழகி விடும். பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, அரிசி, பருப்பு, வைக்கோல், வாழை மட்டை கழிவுகள்னு எதைவேண்ணா சாப்பிட்டு வளரும். அதிலும் நாங்கள் பண்ணையில் வைத்திருக்கிற ரகங்கள் எங்கு இருந்தாலும் அந்தச் சூழ்நிலைக்கேற்ப கொடுப்பதைச் சாப்பிட்டு வளரக்கூடிய ரகங்கள்!” என்றும் விளக்கினார் அப்பாஸ்.
ஆடுகளில் வால் குரும்பை 2 வருஷத்தில் 100 கிலோ வரை எடை வரும். தவிர அதன் முடி 12 அங்குலம் வரை வளருமாம். இந்த முடி கம்பளி நெய்தலுக்கு நல்ல விலை போகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த ரகத்திற்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். எங்கு வளர்த்தாலும் நோய், நொடிகள் அண்டாதாம். இதன் குட்டிகள் ஒரு மாதத்திலேயே முப்பது கிலோ வரை வளரக் கூடியவை. ஊர் ஊராக மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று பட்டி போட்டு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதை வளர்த்து கோடீஸ்வரர்கள் ஆன கதைகள் உண்டாம்.
இந்த ஆடுகள் பட்டி போடும் இடத்தில் புழுக்கைகள் பெரிய அளவு இயற்கை உரமாகப் பயன்படுவதால் விவசாயிகள் பட்டி போடுவதற்குத் தனியாகப் பணமும் கொடுப்பதால், இதன் மூலம் உபரி வருமானமும் கிடைக்கிறது.
சிறுவகை என்று ஒரு ரகம். ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்டவை. வருஷத்துக்கு ஒரே குட்டி போடும். அபூர்வமாக 2 குட்டிகள் போடும். 3 மாசத்தில் 30 கிலோ எடை வந்து விடும். ஒரு வருஷத்தில் அறுபது கிலோ எடையை எட்டி விடும். “ஆடு வளர்ப்பில் பிஸினஸுக்கு எது சரியோ அதையே தற்போது விரும்புகிறார்கள். ஆனால் விவசாயப் பெருமக்களுக்கு இது எட்டுவதில்லை. ஆடுகள் மூலம் அவர்களை ஈர்ப்பதும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையுமே எனது இலட்சியமாகக் கொண்டு இயங்கி வருகிறேன்!” என்கிறார் அப்பாஸ்

The contact numbers of Mr.Abbas are 7667643724, 9865711155, 9944623619