பக்கங்கள்

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன. பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!

Via Nammabook

100% நேர்மையாகவும்

Photo: அறிவாளியை உண்மையால் வெல்ல வேண்டும்.

முட்டாளை நடிப்பினாலும்,....நமக்குச் சமமானவர்களை திறமையாலும் வெல்ல வேண்டும்.

குழந்தைகளை இனிப்புத்தின்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்திட வேண்டும்.

வயதானவர்களை மரியாதையால் மேன்மை செய்ய வேண்டும்.

தற்பெருமை மிக்கவர்களை புகழ்ச்சியால் புகழ்ந்து பேசி அடக்க வேண்டும்.

ஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்ல வேண்டும்.

திமிர் பிடித்தவர்களை வணக்கத்தாலும்,...வீரனை தைரியத்தாலும்,

குருவை பணிவான அன்பினாலும்,...மகான்களை சரணாகதி அடைந்தும் நன்மை பெற வேண்டும்.

ஆக,முழுக்க முழுக்க உண்மை பேசியும்,100% நேர்மையாகவும் இந்த கலிகாலத்தில் வாழ முடியாது; 
நீங்களும் அப்படி நடக்க முயல வேண்டாம்;மற்றவர்களிடமும் இப்படி எதிர்பார்க்க வேண்டாம் .

குட் நைட் உங்க எல்லோருக்கும் சொல்கிறேன் . பதிலுக்கு நீங்க என்ன சொல்லணும்னா ...." நாளை சிந்திப்போம்அறிவாளியை உண்மையால் வெல்ல வேண்டும்.

முட்டாளை நடிப்பினாலும்,....நமக்குச் சமமானவர்களை திறமையாலும் வெல்ல வேண்டும்.

குழந்தைகளை இனிப்புத்தின்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்திட வேண்டும்.

வயதானவர்களை மரியாதையால் மேன்மை செய்ய வேண்டும்.

தற்பெருமை மிக்கவர்களை புகழ்ச்சியால் புகழ்ந்து பேசி அடக்க வேண்டும்.

ஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்ல வேண்டும்.

திமிர் பிடித்தவர்களை வணக்கத்தாலும்,...வீரனை தைரியத்தாலும்,

குருவை பணிவான அன்பினாலும்,...மகான்களை சரணாகதி அடைந்தும் நன்மை பெற வேண்டும்.

ஆக,முழுக்க முழுக்க உண்மை பேசியும்,100% நேர்மையாகவும் இந்த கலிகாலத்தில் வாழ முடியாது;
நீங்களும் அப்படி நடக்க முயல வேண்டாம்;மற்றவர்களிடமும் இப்படி எதிர்பார்க்க வேண்டாம் 
  
VIA  குறை ஒன்றும் இல்லை

சின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்! பெற்றோர்களுக்கு பெஸ்ட் டிப்ஸ்!

சின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்!
 பெற்றோர்களுக்கு பெஸ்ட் டிப்ஸ்!

 பிள்ளைகளுக்கு சேமிப்புப் பழக்கம் வருவதற்கு பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, அவர்களே விரும்பிச் செய்கிற மாதிரி சேமிக்கும் பழக்கத்தை அவர்களிடம் எப்படி கொண்டுவருவது? எனக்குத் தெரிந்த வழிகளைச் சொல்கிறேன். பின்பற்றிப் பாருங்கள், நிச்சயம் மாற்றம் தெரியும்.

 உண்டியலை வாங்கித் தாங்க!

 குழந்தைக்கு ஆறு வயதானவுடன் ஓர் உண்டியலை வாங்கிக் கொடுங்கள். சேமிக்கவேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி, உண்டியலில் காசு போட பழக்குங்கள். தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று எப்போது யார் காசு தந்தாலும் முதலில் ஒரு பகுதியை உண்டியலில் போடப் பழக்குங்கள்.

 எப்போதும் Savings first, Spending next தான்! கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் ஒரு பகுதியைச் சேமிக்கவேண்டும்; மீதியை செலவு செய்ய வேண்டும். இது சின்ன வயதிலேயே மனதில் பதிந்துவிட்டால் ஈஸி! எப்படி சின்ன வயதிலேயே பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், அபாகஸ் க்ளாஸ் அனுப்புகிறோமோ அப்படியே சேமிக்கும் பழக்கத்தையும் ஆரம்பித்துவிடவேண்டும். சின்ன வயதில் ஆரம்பித்துவிட்டால் அது தன்னிச்சை செயல்போல ஆகிவிடும். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். தொட்டில் பழக்கம்... பழமொழி தெரியும்தானே!

 வங்கிக் கணக்கை ஆரம்பியுங்க!

 எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கு ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்துவிடுங்கள். இப்போது குழந்தைகளுக்கான சேவிங்க்ஸ் அக்கவுன்ட் எல்லா வங்கிகளிலும் கிடைக்கிறது. பெற்றோரை கார்டியனாகக்கொண்டு மைனர் குழந்தைகளுக்கு அக்கவுன்ட் ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு செக்புக் வசதி, பாஸ்புக், 10 வயதுக்கு மேல் என்றால் ஏ.டி.எம். கார்டு வசதி என்று பெரியவர்களைப்போல் அவர்களுக்கும் ஒரு 'செட்’ கிடைக்கும். விளையாட்டாக உண்டியலில் சேர்த்தது போக, பேங்கிலேயே அக்கவுன்ட் இருப்பது குழந்தைகளை சேமிப்பு விஷயத்தில் சீரியஸ் ஆக்கும். தங்கள் பெயரில் பேங்கில் இருந்து அடிக்கடி லெட்டர் வீட்டுக்கு வருவது, பேங்குக்குப் போய் பணம் கட்டுவது இதெல்லாம் அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும். மேலும், சேமிக்கத் தூண்டும்.

 வங்கிக்கு அழைச்சுகிட்டுப் போங்க!

 ஆறாம் வகுப்பு தாண்டிய குழந்தைகள் எனில், நீங்கள் வங்கிக்குப் போகும்போது அவர்களையும் முடிந்தவரை கூடவே அழைத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை குலதெய்வம் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுபோய் சாமி கும்பிடப் போகிற மாதிரி, மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுகிற மாதிரி, வங்கிக்கும் அழைத்துச் செல்லுங்கள். நம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா? நம் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா? வங்கியில் எங்கே பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, செக் போடுவது... இப்படி எல்லா விஷயத்தையும் சொல்லித் தந்து, அவர்களைவிட்டே செய்யச் சொல்லுங்கள். தவறு செய்வார்கள், பரவாயில்லை. அடித்தல் திருத்தல் இருக்கும், தப்பே இல்லை. தவறு செய்யாமல் யாரும் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அதனால், பொறுமையாகச் சொல்லிக் கொடுங்கள். டெபாசிட், வித்டிராவல், செக், அக்கவுன்ட், ஃபிக்ஸட் டெபாசிட், வட்டி போன்ற வார்த்தைகள் எல்லாம் பழகட்டும். எப்படி புகார் செய்வது என்று உங்களை கவனித்து தெரிந்து கொள்வார்கள்.

 இதெல்லாம் தெரிந்துகொண்டால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். அனாவசிய பயம் குறையும். நம் பணத்தை வங்கியிடம் தருகிறோம். அவர்கள் சேவை திருப்தியாக இருந்தால்தான் தொடருவோம். இதில் பயப்படவேண்டிய அவசியம் என்ன என்று தைரியம் வரும். குழந்தையாக வெகுளியாக இருந்தவர்கள் உலக நடப்புகள் எல்லாம் தெரிந்தவர்கள் ஆகிவிடுவார்கள்.

 நிதி நிலைமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

 வீட்டு நிதி நிலைமையைப் பத்தி அவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். 'நீ சின்னப் பையன், உனக்கு ஒண்ணும் தெரியாது, பெரியவங்க பேசும்போது குறுக்கே வராதே' என்று சொல்லாதீர்கள். வருமானம் எப்படி எல்லாம் வருகிறது, மாதச் செலவுகள் என்ன? எதிர்காலச் செலவுகள் என்னென்ன என்று அவர்களுடன் விவாதியுங்கள். எதிர்பாராத திடீர் செலவுகளும் நிறையவரும்; சமாளித்தாக வேண்டும் என்பதைப் புரியவையுங்கள்.

 அவர்களை சமமாக மதித்துப் பேசுகிறீர்கள் என்றாலே ரொம்ப பெருமையாக உணர்வார்கள். பொறுப்பு உணர்வு அதிகரித்துவிடும். தங்களையும் குடும்பத்தில் முக்கியமான டீம் மெம்பராக நினைத்து தன்னால் முடிந்த பங்குக்கு உதவி செய்வார்கள். அப்படி என்றால்? ஃபேன், லைட்டை நிறுத்தாமல் அறையைவிட்டு வெளியே போவது குறையும். வீண்செலவு செய்வது குறையும். நம்மையும் வீண்செலவு செய்யவிடமாட்டார்கள். சில சமயம் நம் மனம் அலைபாய்ந்து சில பொருட்களை வாங்க முயலும்போது தடுப்பார்கள். நமக்கே 'தகப்பன் சாமியாக’ மாறி நம் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். நல்ல 'டீம் வொர்க்’ குடும்பத்தில் அமையும். சந்தோஷம் பெருகும்.

 முடிவாக, நான் சொல்ல விரும்புவதெல்லாம், இந்தக் காலத்து குழந்தைகளை கம்மியாக எடைபோடாதீர்கள்! அவர்கள் படுஸ்மார்ட். நாம் கோடு போட்டால் ரோடே போடுவார் கள். அவர்களிடம் பொறுப்பு தந்து பாருங்கள்; தாங்களும் கற்றுக்கொண்டு புதுப்புது விஷயங் களைத் தேடிப் படித்து நமக்கும் சொல்லித் தருவார்கள்.

 நீங்கள் சிறுகச் சிறுக சேமித்து 20 லட்சம் ரூபாயைச் சேர்த்து உங்கள் குழந்தை கையில் கொடுப்பதைவிட நல்லது, அவர்களை சின்ன வயதில் இருந்தே காசு விஷயத்தில் உஷாராக இருக்க பழக்குவது. சேர்த்து வைத்த சொத்து அழிந்துபோகும். ஆனால், கல்வி அழியாது. சேமிக்க பழக்குங்கள். பணம் பற்றிய அறிவை அவர்களிடம் ஏற்படுத்தினால், அவர்களைப் பற்றி ஆயுசு முழுக்க கவலைப்பட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது!

Via Suba Anthi

ஹோமங்களும்,பலன்களும்..,

ஹோமங்களும்,பலன்களும்..,
--------------------------------------------
நம் இந்து சாஸ்திரப்படி , இறைவனுக்கு எதையேனும் நீங்கள் அளிக்க விரும்பினால், அதை அக்னி மூலம் தான் அளிக்க முடியும். 
அர்ப்பணிப்பு  உணர்வுடன் மிக சிரத்தையுடன் நீங்கள் மேற்கொள்ளும் ஹோமத்திற்க்கு அளவில்லா பெரும் பலன் கிட்டுவது நிச்சயம்.

மகா கணபதி ஹோமம்  : தடையின்றி செயல்கள் நடைபெவும், லெட்சுமி கடாட்சம்  பெறவும்.

சந்தான கணபதி ஹோமம்  : நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

வித்யா கணபதி ஹோமம்  : கல்விக்காக

மோகன கணபதி ஹோமம்  : திருமணத்திற்காக

ஸ்வர்ண கணபதி ஹோமம்  : வியாபார லாபத்திற்காக 

நவகிரக ஹோமம்  : நவகிரகங்களினால் நன்மை ஏற்பட

லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம். : ஏழையும் செல்வந்தனாவான் 

துர்க்கா ஹோமம்  : எதிரிகளின் தொல்லை அகல,

சுதர்சன ஹோமம் : கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் ஏவல்கள்  அகல

ஆயுஷ் ஹோமம் : ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

மிருத்யுன்ஜெய  ஹோமம்  : ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

தன்வந்திரி ஹோமம் : நோய் நிவாரணம்

ஸ்வயம்வரா ஹோமம்   : திருமணதடை அகல, விரைவில் கைகூட

சந்தான கோபால கிருஷ்ணஹோமம். : குழந்தைப் பேறு கிடைக்க
மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம் : மேற்கல்வி. தெளிந்த  சிந்தனை, 

பார்வதி கலா ஹோமம்  

ஜாதகரீதியாக நாகதோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். அப்படி அமைந்த ஜாதகர்களுக்கு ஆண்கள் என்றால் 30 வயதுக்கு மேலும், பெண்கள் என்றால் 27 வயதிற்கு மேலும் திருமணம் செய்ய வேண்டும். முன்னதாகத் திருமணம் நடந்தால் மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டுவிடும். அப்படிப் பட்ட ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வர கலா ஹோமமும் செய்து, கலச அபிஷேகம் செய்து கொண்டால் மேற்கண்ட தோஷங்கள் யாவும் விலகிவிடும். 

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள்

இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று.

ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும்.

தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. மன நோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.

உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும்.

சீராக உடற்பயிற்சி செய்தால், பல விதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். பரம்பரையாக இதய நோய் இருந்தால், உடற்பயிற்சி செய்வதால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். அதனால் உடற்பயிற்சி செய்து, இதய நோய்களை விட்டு விலகி இருக்கவும்.

ஆரோக்கியமான உடல் எடையை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்கும்.

உடற்பயிற்சி உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, அதிக எடை உள்ளவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கும். அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் இரத்தக் குழாய்கள் ஓய்வெடுக்க உதவுவதால் இரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும்.

தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் உள்ள தமனிகளில் இரத்தம் உறைதல் உருவாகுவதை தடுக்கும்.

Via நிலைவைத்தேடி

அவமானம் ஒரு மூலதனம்

********************
செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. ""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங். ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

""இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது. இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்... இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

("வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் "அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்)

To get Kavingar's books, visit:

www.nammabooks.com/Kavingar-Kannadasanசெட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. ""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.
அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங். ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

""இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது. இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்... இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

("வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் "அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்)

To get Kavingar's books

உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன்

உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன்

உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போனை சீனாவின் ஹூஹாவி அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை ஹூவாவி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வெறும் 6.18 மில்லிமீற்றர் தடிப்பானது என ஹூஹாவி தெரிவிக்கின்றது. இதுவே உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன் எனவும் ஹூஹாவி குறிப்பிடுகின்றது.

Huawei's Ascend P6 என அழைக்கப்படும் இம்மாதிரி 4.7 அங்குல எல்.சி.டி. திரை. , 1.5GHz quad-core CPU மற்றும் 2GB RAM ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அண்ட்ரோய்ட் ஜெலி பீன் மூலம் இயங்குகின்றது.

இதுமட்டுமன்றி 8 மெகா பிக்ஸல் ரியர் கெமராவைக் கொண்டுள்ளதுடன் 5 மெகா பிக்ஸல் முன் கெமராவையும் கொண்டுள்ளது.

தொலைத்தொடர்பாடல் சாதனங்களைத் தயாரிப்பிலும் ஈடுபடும் ஹூஹாவி நிறுவனமானது ஸ்மார்ட் போன் சந்தையிலும் பிரபல்யம் பெற முயன்று வருகின்றது.

னாவில் நுகர்வோரிடையே நன் மதிப்பை பெற்றுள்ள ஹூஹாவி நிறுவனமானது உலக சந்தையில் ஏற்கனவே பல ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ள போதிலும் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

இந்நிலையில் ஹூஹாவி நிறுவனம் நொக்கியாவை கொள்வனவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஸ்மார்ட் போன் சந்தையில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் நொக்கியாவை கொள்வனவு செய்ய ஆர்வமாக உள்ளதாக ஹூவாவி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இச் செய்தியானது காட்டுத் தீ போல பரவியதுடன் நொக்கியாவில் பங்குகளின் விலையும் சற்று உயர்வைக் காட்டியிருந்தது.

எனினும் ஹூவாவி நிறுவன அதிகாரியின் கருத்துக்கு நொக்கியா பதிலளிக்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போனை சீனாவின் ஹூஹாவி அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை ஹூவாவி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வெறும் 6.18 மில்லிமீற்றர் தடிப்பானது என ஹூஹாவி தெரிவிக்கின்றது. இதுவே உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன் எனவும் ஹூஹாவி குறிப்பிடுகின்றது.

Huawei's Ascend P6 என அழைக்கப்படும் இம்மாதிரி 4.7 அங்குல எல்.சி.டி. திரை. , 1.5GHz quad-core CPU மற்றும் 2GB RAM ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அண்ட்ரோய்ட் ஜெலி பீன் மூலம் இயங்குகின்றது.

இதுமட்டுமன்றி 8 மெகா பிக்ஸல் ரியர் கெமராவைக் கொண்டுள்ளதுடன் 5 மெகா பிக்ஸல் முன் கெமராவையும் கொண்டுள்ளது.

தொலைத்தொடர்பாடல் சாதனங்களைத் தயாரிப்பிலும் ஈடுபடும் ஹூஹாவி நிறுவனமானது ஸ்மார்ட் போன் சந்தையிலும் பிரபல்யம் பெற முயன்று வருகின்றது.

னாவில் நுகர்வோரிடையே நன் மதிப்பை பெற்றுள்ள ஹூஹாவி நிறுவனமானது உலக சந்தையில் ஏற்கனவே பல ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ள போதிலும் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

இந்நிலையில் ஹூஹாவி நிறுவனம் நொக்கியாவை கொள்வனவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஸ்மார்ட் போன் சந்தையில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் நொக்கியாவை கொள்வனவு செய்ய ஆர்வமாக உள்ளதாக ஹூவாவி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இச் செய்தியானது காட்டுத் தீ போல பரவியதுடன் நொக்கியாவில் பங்குகளின் விலையும் சற்று உயர்வைக் காட்டியிருந்தது.

எனினும் ஹூவாவி நிறுவன அதிகாரியின் கருத்துக்கு நொக்கியா பதிலளிக்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
Via மைலாஞ்சி ( Mylanchi )

கருவுற்றிருப்பதை வீட்டிலிருந்தபடியே அறியலாம்!

பெண்கள் கருவுற்றிருப்பதை வீட்டிலேயே சோதித்துக் கொள்ள வந்துள்ள கருவிதான் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் என்பதாகும்.இதனை பயன்படுத்தும் முறை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
கடையில் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் கருவியை வாங்கும் போது அதன் எக்ஸ்பையரி டேட் எனப்படும் காலாவதி தேதியை பார்த்து வாங்கவும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக படித்துக் கொள்ளவும்.
கருவுற்றிருப்பதற்கான பரிசோதனை செய்ய வேண்டியவரின் சிறுநீரை ஒரு சிறிய கப்பில் பிடித்துக் கொண்டு, அதில், ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள பரிசோதனை ஸ்டிக்கை வைக்கவும்.
சில நிமிடங்கள் காத்திருக்கவும். ஒரு சில ஸ்டிக்குகளில் துல்லியமாக முடிவு வர 10 நிமிடங்கள் கூட காத்திருக்க வேண்டியதிருக்கும். பிறகு, 10 நிமிடம் கழித்து, சிறுநீரில் வைக்கப்பட்ட ஸ்டிக்கில் உள்ள கோடோ அல்லது பிளஸ் என்ற குறியீடோ நிறம் மங்கும் அல்லது பளிச்சென்று மாறும். நிறம் மங்கினாலோ அல்லது பளிச்சென்று மாறினாலோ கருவுற்றிருப்பதாக அர்த்தமாகும்.
தற்போது டிஜிட்டல் டெஸ்ட் கருவிகளும் வந்துவிட்டன. அவற்றை சிறுநீரில் வைத்து 10 நிமிடங்களுக்குள், பிரக்னென்ட் அல்லது நாட் பிரக்னன்ட் என்று வார்த்தையாகவே பரிசோதனை முடிவு வந்து விடுகிறது.பொதுவாகவே இந்த டெஸ்ட்டை மாதவிலக்கு தள்ளிப் போய் ஒரு வாரம் கழித்து செய்யலாம். எந்த நேரத்திலும் செய்யலாம். ஆனால், காலையில் எழுந்ததும் செய்யும் சோதனை முற்றிலும் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=IjtQUNH0RJE பெண்கள் கருவுற்றிருப்பதை வீட்டிலேயே சோதித்துக் கொள்ள வந்துள்ள கருவிதான் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் என்பதாகும்.இதனை பயன்படுத்தும் முறை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
கடையில் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் கருவியை வாங்கும் போது அதன் எக்ஸ்பையரி டேட் எனப்படும் காலாவதி தேதியை பார்த்து வாங்கவும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக படித்துக் கொள்ளவும்.
கருவுற்றிருப்பதற்கான பரிசோதனை செய்ய வேண்டியவரின் சிறுநீரை ஒரு சிறிய கப்பில் பிடித்துக் கொண்டு, அதில், ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள பரிசோதனை ஸ்டிக்கை வைக்கவும்.
சில நிமிடங்கள் காத்திருக்கவும். ஒரு சில ஸ்டிக்குகளில் துல்லியமாக முடிவு வர 10 நிமிடங்கள் கூட காத்திருக்க வேண்டியதிருக்கும். பிறகு, 10 நிமிடம் கழித்து, சிறுநீரில் வைக்கப்பட்ட ஸ்டிக்கில் உள்ள கோடோ அல்லது பிளஸ் என்ற குறியீடோ நிறம் மங்கும் அல்லது பளிச்சென்று மாறும். நிறம் மங்கினாலோ அல்லது பளிச்சென்று மாறினாலோ கருவுற்றிருப்பதாக அர்த்தமாகும்.
தற்போது டிஜிட்டல் டெஸ்ட் கருவிகளும் வந்துவிட்டன. அவற்றை சிறுநீரில் வைத்து 10 நிமிடங்களுக்குள், பிரக்னென்ட் அல்லது நாட் பிரக்னன்ட் என்று வார்த்தையாகவே பரிசோதனை முடிவு வந்து விடுகிறது.பொதுவாகவே இந்த டெஸ்ட்டை மாதவிலக்கு தள்ளிப் போய் ஒரு வாரம் கழித்து செய்யலாம். எந்த நேரத்திலும் செய்யலாம். ஆனால், காலையில் எழுந்ததும் செய்யும் சோதனை முற்றிலும் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=IjtQUNH0RJE
 
Via மைலாஞ்சி ( Mylanchi )

ஆண்மைக் குறைவு, தாது விருந்தி நீங்க - இயற்கை மருத்துவம்

ஆண்மைக் குறைவு, தாது விருந்தி நீங்க - இயற்கை மருத்துவம்:-

ஆண்மைக் குறைவு:

* மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

* அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

* அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

* படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

தாது விருந்தி:

* முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

* நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

* கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

* அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

* வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்ஆண்மைக் குறைவு:

* மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

* அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

* அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

* படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

தாது விருந்தி:

* முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

* நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

* கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

* அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

* வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
 
Via Karthikeyan Mathan