பக்கங்கள்

பான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்க ளும் பற்றி பார்போம்.
1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதிலீடு செய்வ தற்கும் அடிப்படைத் தேவை ஆகி விட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம் பளம் கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பி க்க முடியும்.
4. அதற்கு என்ன செலவாகும்?
இதற்காக ரூபாய் 94/- NRIகளுக்கு ரூபாய் 744/-மட்டுமே செலவாகும். புரோ க்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செல வாகு ம்.
5. PAN CARD – ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)
3) ரூ.50,000/-க்குமேல் வங்கியில் Fixed Deposit செய்யும்போது அவசிய ம்.
4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கி ல் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000 தாண்டும் போது அவசிய ம்.
5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணை யங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6) வங்கி கணக்கு துவங்கும் போது.
7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது. தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி க்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.
9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிக மாக செலுத்தும் போது அவசி யம்.
10) வருமான வரி ரிட்டன தாக் கல் செய்ய அவசியம்.
11)சேவை வரி மற்றும் வணிக வரி துறையில் பதிவு சான்று பெற Pan Card கட்டயமாகும்.
12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடுசெய்யும் போதுதான் பான்கார்டு அவசிய மிருந்தது. ஆனால், தற்போ து எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண் டும்.
மேலும், மைனர்பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டு ம். இதற்காக, தற்போது மைனர்களு க்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.
இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினை க்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிக மான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வரு கின்றனர்.
“மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக் கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண் ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக் கியுள்ளது.
மேலும், இந்தக் கார்டை வாங்கி னால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரிசெலுத்த வேண்டி யிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந் துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமானவரம்புக்குள் கொண்டு வருவதற் காகவே இந்த பான்கார்டு கட்டா யமாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெறுவதற்கான நடை முறைகள் தற்போது மிகவும் எளி தாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெற விரும்புவோர்:
வருமான வரித்துறையின் Form 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான் றிதழை இணைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தை
http://www.utitsl.co.in/pan
(or)
www.tin-nsdl.com
(or)
www.incometaxindia.gov.in,
ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்தி லும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.
அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Status அறியஇதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம். விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. பள்ளி டிசி 1. மின் கட்டண ரசீது
2. பிளஸ் டூ சான்றிதழ் 2. தொலைபேசி கட்டண ரசீது
3. கல்லூரி் சான்றிதழ் 3. வங்கிக் கணக்கு விவரம்
4. வங்கிக் கணக்கு விவரம் 4. வீட்டு வாடகை ரசீது
5. வாட்டர் பில் 5. பாஸ்போர்ட்
6. ரேசன் கார்டு 6. ரேசன் கார்டு
7. வீட்டு வரி ரசீது 7. வாக்காளர் அடையாள அட்டை
8. பாஸ்போர்ட் 8. வீட்டு வரி ரசீது
9. வாக்காளர் அட்டை 9. ஓட்டுனர் உரிமம்
10. ஓட்டுனர் உரிமம் 10.பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்

விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தா ல், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போ துமா னவை.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்ற இணை யத்தளத்தை நாடலாம்.
சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவர ங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்- எழுத் துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறி யீடாகும். அதைத் தெரிந்து கொள் வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக் கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப் பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டாஎன்பதை குறிக்கிறது.
C – Company
P – Person
H – HUF(Hindu Undivided Family)
F – Firm
A – Association of Persons (AOP)
T – AOP (Trust)
B – Body of Individuals (BOI)
L – Local Authority
J - Artificial Juridical Person
G – Government
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்துவரும் எண்கள் வரிசை எண்களாகு ம். இது 0001ல் ஆரம்பித்து 9999வரை செல்லும். கடைசி எழுத்து ம் வரிசை எண் தொடர்புடையதுதான்
மத்திய வருமான வரித்துறை அலுவ லகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்க ப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமி னேட்கார்டை பெறவேண்டும் என விரும் பினால் மட்டும் புதிதாக விண்ண ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும்போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதே போல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றா லோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்
 via சுபா ஆனந்தி 

யோகா செய்பவர் கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள் !

யோகா செய்பவர் கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள்:-

அ. யோகா பயில ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் ஒரு நிமிடம் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.

ஆ. யோகா பயில காலை 5 – 7 மணி வரையிலும், மாலை 5 – 7 மணி வரையிலும் ஏற்ற நேரமாகும்.

இ. மலம், சிறுநீர் கழித்துவிட்டு முகம், கைகால்களை கழுவிவிட்டு ஆசனங்களை பழகலாம். முடிந்தால் குளித்துவிட்டு பழகலாம். ஆசனங்கள் செய்துவிட்டு குளிப்பதானால் 20 நிமிடம் கழித்து குளிக்கலாம்.

ஈ. விரிப்பின் மீது அமர்ந்து இயற்கையான காற்றோட்ட வசதி உடைய இட்த்தில் பழக வேண்டும். மொட்டை மாடியில் திறந்த வெளியில் செய்வது மிகவும் நல்லது.

உ. உணவு சாப்பிட்டு குறைந்த்து 4 – மணி நேரம் சென்ற பிறகும் காப்பி, டீ போன்ற பானங்கள் சாப்பிட்டிருந்தால் 1 – மணி நேரம் சென்ற பிறகும் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். பயிற்சியை முடித்து 20 நிமிடம் சென்ற பிறகே உணவு அருந்த வேண்டும்.

via பெண்கள் Women

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் பிரச்சனை !

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் பிரச்சனை

ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ஈறு அழற்சி பிரச்னை மிகவும் சகஜம். இது 2வது, 3வது மாதத்தில் தொடங்கி, 8வது மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி (pregnancy gingivitis)   என்று பெயர். ஈறுகளில் வீக்கம், சிவந்து, ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி மாதிரிதான்  இதுவும்.

கவனிக்கப்படா விட்டால், பற்களைச் சுற்றியுள்ள எலும்புகளை பாதித்து, திசு இழப்புக்கு வித்திடும். அரிதாக சில நேரங்களில் வீங்கிய ஈறு திசுக்களானது, அந்த இடத்தில் கட்டிகளைப் போன்று உருவாக்கலாம். அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதால் பயப்படத் தேவையில்லை. அந்தக் கட்டிகள் வலியின்றி இருக்கும். சில வேளைகளில் உணவுத்துகள்கள் அதன் அடியில் புகுந்து கொண்டு, வலியை ஏற்படுத்தலாம்.

பிரசவத்துக்குப் பிறகு இது மெல்லக் குறையத் தொடங்குமே தவிர, முற்றிலும் சரியாகாது. எனவே, பிரசவத்துக்குப் பிறகு, முழுமையான பல் பரிசோதனை அவசியம். முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் பல் சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை இல்லை என்கிற பட்சத்தில், பிரசவமாகும் வரை அதைத் தள்ளிப் போடலாம்.

நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள், அவற்றின் அளவுகள் பற்றி பல் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். டெட்ராசைக்ளின் போன்ற சில மருந்துகள், கருவிலுள்ள குழந்தையின் பற்களைப் பாதிக்கும் என்பதால், அவை கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.  எக்ஸ் ரே எடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

மசக்கை அதிகமுள்ள பெண்கள், அடிக்கடி வாயைக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வாந்தி எடுப்பதால் உருவாகும் ஒருவித அமிலச்சுரப்பின் காரணமாக, பற்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். பற்பசைகூட உபயோகிக்க முடியாத அளவு மசக்கை தீவிரமாக இருந்தால், மருத்துவரிடம் கேட்டு,சுவையற்ற பற்பசை வாங்கி உபயோகிக்கலாம்.

via தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி

ஆதார் அட்டை !

கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது. கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 
இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது. ஆதார் அட்டை பெறுவது எப்படி? 

1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். 

2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும். 

3. ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 

4. புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

5. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும். 

6. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

7. பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும். 

8. ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும். 

9. நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

10. ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். 

11. ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை. 

12. ஆதார் கடிதங்களை உரியவிரடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.
கோடைக் காலத்தில் கிடைக்மாக பகிருங்கள் எங்கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது. கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது. ஆதார் அட்டை பெறுவது எப்படி?

1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும். 

3.
ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 

4.
புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

5.
ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும். 

6.
எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

7.
பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும். 

8.
ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும். 

9.
நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

10.
ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். 

11.
ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை. 

12.
ஆதார் கடிதங்களை உரியவிரடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.

via சுபா ஆனந்தி

தலைமுடி பேண சித்தவைத்திய முறை...!

தலைமுடி பேண சித்தவைத்திய முறை...!

வழுக்கை தலையில் முடிவளர:

வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

வழுக்கை தலையில் முடிவளர:

வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:

1)
வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2)
வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3)
சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4)
சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5)
கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

via பசுமைப் புரட்சி Green Revolution

செம்பருத்தியின் கூந்தல் பராமரிப்பு

செம்பருத்தியின் கூந்தல் பராமரிப்பு

செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.

ஷாம்பை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய செம்பருத்தி பயன்படுகிறது. இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம்.

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, கூந்தல் படிப்படியாக நன்கு வளர ஆரம்பிக்கும்.

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும் உணவுகள்!!!

சால்மன் 

இந்த வகையான ஆரோக்கியமான மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளது. இவை இதயத்திற்கு மட்டுமின்றி, பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களின் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரித்து, பிரச்சனையை போக்குகிறது.

பார்லி

பார்லியில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் கொழுப்புக்கள் உள்ளது. ஆகவே பெண்கள் இதை சாப்பிட்டால், இதில் உள்ள குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ், அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தடுத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.பட்டை 

இந்த நறுமணமிக்க உணவுப் பொருள், இன்சுலின் அளவை குறைத்து, உடலில் தங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும்.லெட்யூஸ் 

இந்த பச்சை நிற ஊட்டச்சத்துமிக்க காய்கறியில், இன்சுலின் எதிர்ப்பொருள் உள்ளது. பொதுவாக பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்கள் அதிகமான இன்சுலின் சுரப்பினால் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் இந்த காய்கறியை சாப்பிடுவது நல்லது.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பைக் கட்டிகள். இந்த பிரச்சனை பொதுவாக 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குத் தான் ஏற்படும். ஆனால் தற்போது 20 வயதுள்ள பெண்களுக்கே, இந்த பிரச்சனை வருகிறது. இதற்கு பெரும் காரணம் ஹார்மோன் மாற்றங்களே. அதுமட்டுமல்லாமல், ஆரோக்கியமற்ற டயட், போதிய உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கெட்ட பழக்கங்களாக புகைப்பிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்றவை ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை விளைவிக்கின்றன.

இத்தகைய சினைப்பைக் கட்டிகள் பெண்களுக்கு வந்தால், அதனை உடனே தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருசில அறிகுறிகளை வைத்து உறுதி செய்து கொண்டு, மருத்துவரை அணுகலாம். அதில் சில அறிகுறிகளான முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல் எடை அதிகரித்தல், கருத்தரிப்பதில் பிரச்சனை போன்றவை. மேலும் சில பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளைப் பற்றி ஏற்கனவே தெளிவாக பார்த்திருக்கிறோம். ஆனால் அதனை குணப்படுத்துவதற்கான உணவுகளை பார்த்ததில்லை.

பி.சி.ஓ.எஸ் என்னும் சினைப்பைக் கட்டிகள் குணப்படுத்தக்கூடியவையே. அதற்கு ஹார்மோனின் அளவை சீராக வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் சரியான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான சில உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக வைட்டமின் டி, ஒமேகா-3 ஃபோட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

via ஆரோக்கியமான வாழ்வு

ஆபிரஹாம் லிங்கன் சொல்லிய கதை...

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?''எனக் கேட்டான்.'

'வராது''என்றான் அமைச்சன்.

வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.

அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்த போதுகடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.

திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக் கேட்டான்.

அவனோ,''மன்னா,எனக்குத் தெரியாது.ஆனால் என் கழுதைக்குத் தெரியும்.மழை வரும் முன் அது தன காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.

உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.

இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,''அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான்

.என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி 
 
via  ரிலாக்ஸ் ப்ளீஸ் 

திருட்டு போன அல்லது காணாமல் மொபைலை திரும்பப் பெற..

திருட்டு போன அல்லது காணாமல் மொபைலை திரும்பப் பெற..

 உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா....?

 அல்லது

 கவனக் குறைவாகத் தொலைத்து விட்டீர்களா...?

 இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி
 அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

 எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல்
 இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான
 ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து
 டயல் செய்திடவும்.

 இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல்
 போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile
 Equipment Identity) என அழைப்பார்கள்.

 இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல்
 கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net.

 இதில் கீழ்க்காணும் தகவல்களை தர வேண்டும்:-

 பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல்
 செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும்
 மொபைல் போனின் அடையாள எண்.

 காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான
 கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

 அந்த மொபைல் போன் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது
 பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும்
 தெரியப்படுத்துவார்கள்.உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா....?

தெரியப்படுத்துவார்கள்.
via சுபா ஆனந்தி

சிறப்பான சிந்தனைகள் பத்து......

சிறப்பான சிந்தனைகள் பத்து......

படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

நன்றி Karthikeyan Mathan

பாரம்பரிய சடங்குகள்

பாரம்பரிய சடங்குகளை பின்பற்றும் விஸ்வரூப உபாசனையை தவிர ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு சடங்கை தேர்ந்தேடுத்து அதற்கு மேலதிக முக்கியத்துவம் கொடுத்து முக்தியடையும் வரை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். இவ்வகையில் சந்தியாவந்தனம் என்பது ஒரு முக்கியமான சடங்கு. சந்தியாவந்தனம் செய்யும் முறை எந்த வேதத்தை பின்பற்றுபவர்கள் என்பதை பொறுத்தும் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதை பொறுத்தும் மாறுபடும். எனவே எப்படி செய்ய வேண்டும் என்பதை தவிர்த்து எதற்காக சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்பது இந்த பாடத்தில் விவரிக்கப்படுகிறது.

சந்தியாவந்தனத்தின் முக்கியத்துவம்
------------------------------------------------------

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப்போல மன மயக்கத்தை தரும் இந்த உலக அனுபவங்களிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறையாவது விடுபட்டு ‘பரமனை அறிந்து கொள்ள முயலவேண்டும்’ என்று நமக்கு நாமே நினைவு படுத்திக்கொள்ளவே சந்தியாவந்தனம் என்ற சடங்கை அனைவரும் செய்யவேண்டும் என்று வேதம் வற்புறுத்துகிறது. காலை விழித்ததுமுதல் இரவு வரை தொடர்ந்து இவ்வுலகவிவகாரங்களில் ஈடுபட்டுகொண்டிருப்பதால்தான் இவ்வுலகத்திற்கு மேற்பட்ட சத்தியமான பரமன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற உண்மையை தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் பெரும்பாலோருக்கு வாய்ப்பதில்லை.

முக்தியடையவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தினமும் மூன்று முறை மூன்று நிமிடம் கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்தித்தால் கூட சம்பிரதாயப்படி முறையாக சந்தியாவந்தனம் செய்வதன் பலன் கிடைக்கும். கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை உறுதிபடுத்த உதவுவதே இந்த சடங்கின் நோக்கம்.

இவ்வுலகம் யாரால் படைக்கப்பட்டது, மனித வாழ்வின் நோக்கம் என்ன என்பது போன்ற கேள்விகளை யாரேனும் கேட்டால் ஏதோ தமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பதுபோல் பலர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வார்கள். இந்த கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ளும்வரை இவர்கள் வாழ்வில் துயரத்தை தவிர்க்க முடியாது. தாங்கமுடியாத துக்கம் ஏற்படும்பொழுது இவர்கள் கோவிலுக்கு வந்து ‘என் அழுகுரல் உன் காதில் விழவில்லையா’ என்று பிரார்த்திக்கும்பொழுது ‘சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என்று நான் சொல்வதை நீ ஏன் கேட்கவில்லை’ என்று இறைவனிடமிருந்து மௌனமான பதில் கிடைக்கும்.

ஆரோக்கியமாக இருக்க என்ன வகை உணவு உண்ணவேண்டும் எவ்வளவு உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று  ஆரோக்கிய நிபுணர்கள் கொடுத்த பரிந்துரைகளை பொருட்படுத்தாது மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு உடல்நிலை சீரழிந்த பின் மருத்துவரிடம் மன்றாடி பயனில்லை.  

சந்தியா வந்தனம் என்பது விடிகாலை, உச்சிப்பொழுது, அந்திமாலை என்ற மூன்று வேளைகளில் காயத்திரி மந்திரத்தை ஜெபித்து இறைவனை பிரார்த்திப்பது ஆகும். இதை அனைவரும் தினமும் செய்ய வேண்டும் என்ற வேதத்தின் பரிந்துரையை பொருட்படுத்தாதவர்கள் அடிக்கடி துன்பத்திற்கு ஆளாகி கோவிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர்க்க முடியாது.  

எல்லாம் நலமே அமையும் பொழுது கடவுளை மறந்து விடக்கூடாது. அன்றாட அலுவல்கள் எவ்வளவு அதிகமிருந்தாலும் குறிப்பிட்ட நேரங்களை கடவுளுக்கு என்று தனியாக ஒதுக்கி எனக்கு இது வேண்டும் அல்லது அது வேண்டும் என்று அடிக்கடி உன்னிடம் கேட்காமல் இருக்கும் வரம் வேண்டும் என்று மட்டும் கேட்கும் சந்தியாவந்தனம் செய்து கடவுளை பிரார்த்திப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

சந்தியா வந்தன மகிமை – 1: சோம்பல் நீக்கம்
--------------------------------------------------------------------
கடவுள் நமக்கு உதவவேண்டுமென்றால் அந்த உதவியை பெற நம்மை நாம் தயார் செய்து கொள்ளவேண்டும். சந்தியாவந்தனத்தை அதிகாலையில்  செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் விடிவதற்கு முன் எழுவது பழக்கமாகி சோம்பல் நீங்குவதுடன் நாளடைவில் நம் செயல் திறன் அதிகரித்து வாழ்வில் ஏற்படும் இடர்களை சந்திக்கும் திறமை நமக்கு ஏற்படும்.

சந்தியா வந்தன மகிமை – 2: ஆரோக்கியம்
--------------------------------------------------------------
பிராணாயாமம் செய்வது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்க பெரிதும் உதவும். தொடர்ந்து உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் சிறிது நேரம் ஓய்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். 

சந்தியா வந்தன மகிமை – 3: தவறான செயல்களுக்கு தடை
-------------------------------------------------------------------------------------
அவ்வப்பொழுது சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் கடவுள் ஞாபகம் ஏற்படுவதால் தவறான செயல்கள் செய்யும் வாய்ப்பு வெகுவாக குறையும். மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்காமல் ஒரு சிலநிமிடம் ஓய்வெடுப்பதால் புத்தியின் வார்த்தைகளை செவிகொடுத்து கேட்க அவகாசம் கிடைக்கும். ஆசைகள் அளவுக்கு மீறாமல் ஒரு நிதானம் ஏற்படும்.

பிடித்தது பிடிக்காதது என்ற அடிப்படையில் செயல்படும் மனம் நிலையாத இன்பங்களை தேடுவதிலேயே அனைத்து நேரத்தையும் செலவிடும் தன்மை உடையது. சந்தியாவந்தனம் செய்வதனால் நிலையான இன்பத்தை தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள் என்ற புத்தியின் அறிவுரையை திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் விரைவில் மனம் திருந்தி அதனுடன் ஒத்துழைக்க ஒத்துக்கொள்ளும்.

சந்தியா வந்தன மகிமை – 4: சரியான செயல்களுக்கு ஊக்கம்
--------------------------------------------------------------------------
நல்லது கெட்டது என்ற அடிப்படையில் செயல்படும் புத்திக்கு சந்தியாவந்தனம் ஊக்கம் அளிக்கிறது. நிலையான இன்பத்தை பெற தர்மமான காரியங்களை மட்டும் செய்து வாழ்வில் அதர்மத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை சந்தியாவந்தனம் நினைவுபடுத்தும்.

சந்தியா வந்தன மகிமை – 5: பாதையில் கவனம்
----------------------------------------------------------------------
வேலை செய்து பணம் சம்பாதித்து உலக இன்பங்களை அனுபவிப்பது முக்தியடைய வெகு அவசியமான ஒரு செயல். ஆனால் அதிலேயே முழுகவனத்தையும் செலுத்திவிட்டால் முக்தியடைய முடியாது. சந்தியாவந்தனம் என்பது நாம் வேலை செய்வதன் காரணம் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் வேதாந்தத்தை படிக்க தேவையான மனப்பக்குவத்தை பெறுவதற்காகவே என்றும் நாளில் மூன்று முறை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்யவும், புலன்களை அடக்கி மனதை புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சந்தியாவந்தனம் உதவுகிறது.

முடிவுரை :
------------------
புலன்களின் ஆசைகளையும்  மனதின் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவே மக்கள் பணம், பதவி போன்றவற்றை நாடி தொடர்ந்து உழைக்கிறார்கள். அனுபவிப்பதால் புலன்களின் ஆசைகள் அடங்காது, அதிகம் வளரும். அதே போல் மனதின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் இனி எதுவும் வேண்டாம் என்ற பூரணமான நிலையை அடையவே முடியாது. இந்த உண்மையை புத்தகங்கள் படிப்பதன் மூலமோ மற்றவர்களின் அறிவுரைகள் மூலமோ புரிந்து கொள்ள முடியாது.  கடவுள் யார், அவருக்கும் நமக்கும் என்ன உறவு என்பதை தெளிவாக அறிந்து கொண்டால் மட்டுமே பூரணத்துவத்தை அடையமுடியும்.

உலகைப்படைத்த இறைவனை நமக்கு ஞாபகப்படுத்தி உலகில் எப்படி துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ்வது என்ற பரம ரகசியத்தை அறிந்து கொள்ள சந்தியாவந்தனம் போன்ற சடங்குகள் உதவுகின்றன.  ஆகவேதான் தினமும் அன்றாட அலுவல்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்து சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்று வேதம் விதித்திருக்கிறது.

நன்றி வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை !

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை !
நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், “சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது” என்றார்.

தஞ்சை “பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்” – இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து…
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?
வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.
வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.
வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.
இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்” என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.
வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.
வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.
நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.
ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.
வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?
தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.
எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.
கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.
ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.
ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.
வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்

நன்றி இன்று ஒரு தகவல்

கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம் பற்றிய தகவல் !!!

இந்த பழம் பெரும் அளவு நமது அண்டை நாடான ஸ்ரீ லங்காவில் கிடைகிறது !!! (Sour sop fruit )நோய்களில் ‘உயிர்க்கொல்லி நோய்’ என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது.
மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.
பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது பெரும்பாலான உறுப்புகளை தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.
புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் இயற்கையான உணவுப் பொருட்களிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் கொடுத்துள்ளான். அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.
சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் கேரளாவிலும் “ஆத்தச்சக்கா” (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை.
இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்ப‌தற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை: “காட்டு ஆத்தா” (சில வட்டாரங்களில் “அன்னமுன்னா பழம்” அல்லது “அண்ணவண்ணா பழம்” என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: “Soursop”, “Prickly Custard Apple”, “Soursapi”
மலையாளம்: “Aatha Chakka”
பிரெஞ்ச்: “Corossol”, “Cachiman Epineux”
அரபி: “سورسوب”
ஸ்பானிஷ்: “Guanábana “, “Anona”
ஜெர்மன்: “Sauersack”, “Stachelannone”, “Flashendaum”
இந்தோனேஷியா: “Sirsak” & “nangka landak”
பிரேசில்: “Graviola”
மலேஷியா: “Durian Belanda”
கிழக்கு மலேஷியா: “Lampun”
தென் வியட்நாம்: “Mãng cầu Xiêm”
வட வியட்நாம்: “Quả Na”
கம்போடியா: “Tearb Barung” (“Western Custard-apple fruit”)
போர்த்துகல்: “Curassol”, “Graviola

நன்றி இன்று ஒரு தகவல்!

அனைவரையும் கொள்ளைகொண்ட பேஸ்புக் உருவான சுாவரஸ்யமான கதை!

அனைவரையும் கொள்ளைகொண்ட பேஸ்புக் உருவான சுாவரஸ்யமான கதை!

 இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

 இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.

 ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK).

 தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது.

 ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது.

 அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணையதளம் ஒன்றை அவர் உருவாக்கினார்.

 முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

 பின்னர் மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

 தற்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.

 2005ம் ஆண்டு காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது.

 அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது.

 இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.

 இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே இவ்வளவு போட்டி.

 தற்போது ஃபேஸ்புக் கைபேசி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.

 மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?

 ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

 பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக தற்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள்.

 உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணையதளங்கள்.

 இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு !

சளியோ இருமலோ வீட்டில் மிளகு இருந்தால் போதும் நோயை போக்கிவிடலாம் என்பார்கள். பாட்டி வைத்தியத்தில் மிளகுக்குமிகப்பெரிய பங்குண்டு. நறுமணப்பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொண்ட ால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைக்கு நாம் உண்
ணும் உணவில் அதிக அளவில் ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின ்றன. நாகரீகம் என்ற பெயரில் நஞ்சை உண்கிறோம் என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிவார். அதைப்போல எவ்வளவுக்கு எவ்வளவு செயற்கை உணவுகளை உட்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நோய்களும் நம்மை எளிதில் தாக்குகின்றன. இந்த நோய்களை நீக்கும் மருந்துகள் நம்வீட்டு அஞ்சறைப்பெட்டிய ிலேயே வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் வீட்டில் உள்ள மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம்,வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக்கோளாறுகள ுக்கு நிவாரணத்தை தருகிறது.

இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது.

தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது. வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு , மலச்சிக்கல் போன்றவைகளை நீக்குகிறது.

மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன ் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மேலும் இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகள ை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும ் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.

மிளகு சருமநோயை குணப்படுத்துவதற ்கும் பயன்படுகிறது. லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது. நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறத ு... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆரம்பகட்டவெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்தலாம்.

உடலின் ஒட்டு மொத்த நலனிற்கும் மிளகு நல்லது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.ஆ க்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். கடைகளில்கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியு டன் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Via மருத்துவ-தகவல்கள்