பக்கங்கள்

சளியை விரட்டும் கருந்துளசி...!



‘சனி பிரச்னையிலிருந்து கூட தப்பிச்சுடலாம்... இந்த சளி பிரச்னை வந்தால்தான் தாங்க முடியாது...’ என்று சிலர் கூறக் கேட்டிருப்பீர்கள். கேட்க இது வேடிக்கையாக இருந்தாலும், அன்றாட வாழ்வில் ‘டர்...புர்’னு மூக்கை சிந்தியவாறு வாடிக்கையாக நாம் பார்க்கும் மனிதர்கள் ஏராளம். இந்த சளித்தொல்லையை நீக்கும் அரிய மருந்துச்செடியாக கருந்துளசியை குறிப்பிடலாம்.

நம் உடலில் ஏற்படக்கூடிய எந்த நோயையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ‘சிறுதுளி பெருவெள்ளம் போல’ சிறுசளி பெரிய பிரச்னையை உருவாக்கி விடும். நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் சீராக இருந்தால், எந்த நோயையும் ஈசியாக விரட்டி விடலாம். குறைவாக இருக்கும் பட்சத்தில் சளி போன்ற உபாதைகள் அடிக்கடி ஏற்படுகிறது. இது மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து நமது மூச்சுப்பாதையை பாதித்து நச்சாகி விடுகிறது.

நுரையீரல் பகுதியில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக நம் உடலில் இயற்கையாகவே உருவாக்கப்பட்டதுதான் சளி. இது பல்கி பெருகும்போது, அதிகளவு சளியை வெளியேற்றி, மீண்டும் இதனால் ஒவ்வாமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக மருந்துகளை நாம் உட்கொண்டு வருகிறோம். அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் சில மாறுதல்களை செய்தால், இந்த பிரச்னையை ஓரளவு சரி செய்யலாம். மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சின்ன வெங்காயம் போன்றவைகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.

கருந்துளசியை சளித் தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்துச் செடியாக குறிப்பிடலாம். ‘ஆசிமம் டெனியபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகளின், இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன. சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும். இது பாலின் ஒவ்வாமையால் ஏற்படுகின்ற சளியை நீக்குகிறது. நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும்.

அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அந்த காலத்தில் வீட்டில் துளசி செடிக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி வளர்ப்பார்கள். இப்போ, ‘அந்த இடத்திலேயும் ஒரு பிளாட் கட்ட முடியுமா... பாருப்பா’ என்று கேட்கும் காலம் வந்து விட்டது. பின்னே ஏன் நோய் அதிகரிக்காது?

வேலிப்பருத்தியின் மருத்துவ குணம்

 

தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள்காணப்படும். இதனை உந்தாமணி என்றும்குறிப்பிடுவதுண்டு.காய்கள் காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்த்துப் பறந்து சென்று வேறு இடங்களில் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

இலையிலிருந்து வேர் வரை உடல் நலத்திற்காக பயன்படக்கூடியது வேலிப்பருத்தி. இது வேளிகளில் படர்ந்திருப்பதை பார்த்திருப்போம். இது நெஞ்சில் சேர்ந்து இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது. இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவும் பாம்புக் கடியும் எளிதில் குணமடையும்.

நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும். பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலியைப் போக்க வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர வயிற்று வலி தீரும்.

கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து வீக்கம் ஏற்பட்ட இடத்தில் பூசி வர எளிதில் குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும். இதன் இலையை நன்கு அரைத்து அதன் விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டு வர நல்ல குணம் தரும்.

காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறை தடவலாம். இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும். இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம், பொடித்துக் காயச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.

இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும். இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.

5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும். உந்தாமணி, பொடுதலை, நுணா, நொச்சி ஆகியவற்றின் இலைகளை வகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறை 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும். தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.

வேப்பம் பூவின் மருத்துவ பயன்



வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல்,பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள்.
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.

கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.
காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.

வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.

வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி குணமாகும்.

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க



சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.


1. XP -->கிளிக் programs--> Run

 windows 7 க்கு programs---> search box---> Type "Run"

2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் -
gpedit.msc

3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
  • Computer Configuration
  • Administrative Templates
  • Network
  • QoS Packet Scheduler
  • Limit Reservable Bandwidth

4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும். 

இப்போ OK or APPLY செய்யவும்.
கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும். 
 
(Thanks to Grafix Hero )