பக்கங்கள்

மாத்தூர் தொட்டி பாலம் ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம் !!!

மாத்தூர் தொட்டி பாலம் இது 1966 ல் காமராசர் முதல் அமைச்சராக இருந்த போது, திருவட்டார் பஞ்சாயத்தை சேர்ந்த பகுதியில் கட்டபட்டதாகும். சுற்றலா பயணிகளின் கவனத்தை கவரும் விதம் அழகாக காட்சி தரும் மாத்தூர் தொட்டி பாலம் விளவம்கோடு, கல்குளம் என்ற இரு கிராமங்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதம் ‘பறழியார்’ என்ற நதியின் மேல் கட்டப்பட்டுள்ளதாகும்.

திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது விசேஷ அம்சம். ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும். கட்டணம் கிடையாது. இங்கு தங்கும் வசதி இல்லை. அருகிலுள்ள மார்த்தாண்டத்தில் தங்குவதற்கு லாட்ஜ்கள் உள்ளன
பாலத்தின் ஊடாக நடப்பது என்பது திகில் கொண்ட பயணம் போல் இருக்கின்றது. மேலிருந்து கீழ் பக்கம் நதியை நோக்கும் போது தலைசுற்றுவது போல் தோன்றினாலும் பாலத்தில் இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு. அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் . சில தமிழ் படங்கள் இப்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு நடந்து செல்கின்றனர். மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயண்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு!

இப்பாலத்திற்க்கு செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து 60 கி.மீ அதே போல் கன்னியாகுமாரியில் இருந்து செல்ல 60 கி.மீ தூரமும் உண்டு. இப்பாலம் கட்ட செலவாக்க பட்ட தொகை 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். பயணிகளிடம் கட்டனம் ஏதுவும் வாங்கவில்லை என்பதும் பயணிகளுக்கு என நல்ல வசதி செய்து கொடுக்கப்படுவதும் கவனிக்கப் படவேண்டியதே.

தகவல் உமர்.

Thanks Inruoruthagaval.comமாத்தூர் தொட்டி பாலம் இது 1966 ல் காமராசர் முதல் அமைச்சராக இருந்த போது, திருவட்டார் பஞ்சாயத்தை சேர்ந்த பகுதியில் கட்டபட்டதாகும். சுற்றலா பயணிகளின் கவனத்தை கவரும் விதம் அழகாக காட்சி தரும் மாத்தூர் தொட்டி பாலம் விளவம்கோடு, கல்குளம் என்ற இரு கிராமங்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதம் ‘பறழியார்’ என்ற நதியின் மேல் கட்டப்பட்டுள்ளதாகும்.

திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது விசேஷ அம்சம். ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும். கட்டணம் கிடையாது. இங்கு தங்கும் வசதி இல்லை. அருகிலுள்ள மார்த்தாண்டத்தில் தங்குவதற்கு லாட்ஜ்கள் உள்ளன
பாலத்தின் ஊடாக நடப்பது என்பது திகில் கொண்ட பயணம் போல் இருக்கின்றது. மேலிருந்து கீழ் பக்கம் நதியை நோக்கும் போது தலைசுற்றுவது போல் தோன்றினாலும் பாலத்தில் இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு. அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் . சில தமிழ் படங்கள் இப்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு நடந்து செல்கின்றனர். மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயண்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு!

இப்பாலத்திற்க்கு செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து 60 கி.மீ அதே போல் கன்னியாகுமாரியில் இருந்து செல்ல 60 கி.மீ தூரமும் உண்டு. இப்பாலம் கட்ட செலவாக்க பட்ட தொகை 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். பயணிகளிடம் கட்டனம் ஏதுவும் வாங்கவில்லை என்பதும் பயணிகளுக்கு என நல்ல வசதி செய்து கொடுக்கப்படுவதும் கவனிக்கப் படவேண்டியதே.

தகவல் உமர்.

Thanks Inruoruthagaval.com