பக்கங்கள்

கேழ்வரகு - கோதுமை ரவை இட்லி

கேழ்வரகு - கோதுமை ரவை இட்லி

டயட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல், நீரிழிவு நோய் கண்டவர்களுக்கும் கேழ்வரகும், கோதுமையும் அதிகளவு சக்தி தருபவை. எல்லாருக்கும் இந்த வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

கேழ்வரகு--கோதுமை இட்லி

தேவையானவை

கேழ்வரகு மாவு--1கப்
கோதுமை ரவை---1கப்
கெட்டியான தயிர் 3கப்
துருவிய காரட் 1கப் 
உப்பு தேவையானது

தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, வேர்கடலை ,கறிவேப்பிலை

கேழ்வரகு மாவு, கோதுமை ரவை ,துருவிய காரட், உப்பு போட்டு கலந்து அதோடு தயிர், சிட்டிகை சோடா உப்பு,  தேவையிருந்தால் சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.   தாளித பொருட்களை தாளித்து மாவில் கொட்டி கலக்கவும்.

மாவை ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

இட்லி செய்வது போல் செய்து சூடாக வடகறி அல்லது சட்னி--சாம்பாருடன் பரிமாறவும்.

விருப்பமிருந்தால் ஓட்ஸை ரவை போல் உடைத்து இதோடு கலந்தும் செய்யலாம்.டயட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல், நீரிழிவு நோய் கண்டவர்களுக்கும் கேழ்வரகும், கோதுமையும் அதிகளவு சக்தி தருபவை. எல்லாருக்கும் இந்த வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

கேழ்வரகு--கோதுமை இட்லி

தேவையானவை

கேழ்வரகு மாவு--1கப்
கோதுமை ரவை---1கப்
கெட்டியான தயிர் 3கப்
துருவிய காரட் 1கப்
உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, வேர்கடலை ,கறிவேப்பிலை

கேழ்வரகு மாவு, கோதுமை ரவை ,துருவிய காரட், உப்பு போட்டு கலந்து அதோடு தயிர், சிட்டிகை சோடா உப்பு, தேவையிருந்தால் சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். தாளித பொருட்களை தாளித்து மாவில் கொட்டி கலக்கவும்.

மாவை ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

இட்லி செய்வது போல் செய்து சூடாக வடகறி அல்லது சட்னி--சாம்பாருடன் பரிமாறவும்.

விருப்பமிருந்தால் ஓட்ஸை ரவை போல் உடைத்து இதோடு கலந்தும் செய்யலாம்.

Via ஆரோக்கியமான வாழ்வு