பக்கங்கள்

Success Fundamentals 1!

தன்னம்பிக்கை:

வாழ்க்கையின் பெரும்பாலான தோல்விகளுக்கு முக்கியக்காரணம் எதுவென்று என்னைக் கேட்டால், மனிதர்கள் எண்ணத்திற்குச் சாதனையோடு உள்ள பிணைப்பைப் புரிந்துகொள்ளத் தவறியது தான்.

ஒருவரது கனவுகள் மெல்லமெல்லத் தேய்ந்து, மறைந்து போகுதல், ஒருவரது மனத்தோற்றத்தை இழத்தல் இவை எப்போதும் இதற்குக் காரணமாக குறிப்பிடலாம்.

தனது மனதை உயரிய, ஊக்குவிக்கக்கூடிய, முற்போக்குச் சிந்தனை, நம்பிக்கை, உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய எண்ணங்களால் நிரப்பக்கூடிய சக்தியைப் பெற்ற மனிதன் வாழ்க்கையின் மிகப்பெரிய விடுகதைகளில் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்திருக்கிறான்.

தன்னம்பிக்கை தான் உண்மையில் நம் மனதின் படையின் தளபதியாகும். இது மற்ற அனைத்துத் திறமைகளின் சக்திகளையும், இரண்டு மற்றும் மூன்று மடங்காக மாற்றிவிடுகிறது. தன்னம்பிக்கை வழிகாட்டித் தலைமை ஏற்கும்வரை, முழுமையான மனப்படையும காத்துக் கொண்டிருக்கும்.

மலைகளை அகற்றக்கூடிய அளவு நம்பிக்கை இருக்குமானால், அது ஒருவருக்குத் தன் சக்தி மீதான தன்னம்பிக்கை தான்.

தன்னம்பிக்கை நம் மனதில் நாம் செய்ய வேண்டும் என்று எண்ணித் தயாராக வைத்திருக்கும் செயல்களை நம்மைச் செய்ய வைத்துவிடும்.

நமது தன்னம்பிக்கை நமது குறிக்கோளின் மீது நம்மை ஆழ்ந்த கவனம் செலுத்துமாறு செய்து, அதைச் சாதிக்கும் சக்தியை விருத்தி செய்கிறது.

நமது மனதின் திறமைகள் முன்னேறும் வழியில் எந்தவிதமான ஊக்கத்தையும் பெறாவிட்டாலும் தன்னம்பிக்கை நாம் பாதுகாப்பாக முன்னேறலாம் என்று நமக்குச் சொல்கிறது.

 


Thanks to FB  Thannambikkai