பக்கங்கள்

இளமையும் அழகும் வேண்டுமா? கலர் கலரான மரக்கறி பழவகைகளை உண்ணுங்கள்

இளமையும் அழகும் வேண்டுமா? கலர் கலரான மரக்கறி பழவகைகளை உண்ணுங்கள்

உணவுகளின் வர்ணங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை. ஓரஞ்ஸ், சிவப்பு, பச்சை, வயலட் என பல்வேறு நிறங்கள் உணவுப்பொருட்களில் நிறைந்திருக்கின்றன. இந்த நிறங்கள் நம் ஆரோக்கியத்தோடும் அழகோடும் தொடர்புடையவை. எனவே எந்த கலர் காய்கறிகளை சாப்பிட்டால் என்ன மாதிரியான சத்து கிடைக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர் தெரிந்து கொள்ளுங்களேன்.

சிவப்பு காய்கறிகள்

காலையில் சாப்பிடப்படும் ஒரஞ்ஸ், மஞ்சள் நிறமுள்ள பழங்கள், முன்தினம் இரவில் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை நீக்கும். மலச்சிக்கல் இருந்தால் சிவப்பு நிறமுள்ள தக்காளிச் சாறு அருந்தவும். ஏனெனில் இது குடலை அபாரமாகச் சுத்தப்படுத்திவிடும். காலையில் ஒரு கோப்பை தோடம்பழசாறு அல்லது தக்காளிச்சாறு. இத்துடன் மூன்று ரொட்டித் துண்டுகள் ஒரு கப் தயிர். (அல்லது) வாழைப்பழம், தோடம்பழம், அப்பிள், பீச், பிளம்ஸ், அன்னாசித் துண்டுகள் இவற்றில் ஏதேனும் ஒன்று, ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிடலாம். அன்னாசிப் பழம் என்றால் ஒரு கிளாஸ் சாறு, இத்துடன் வறுத்த ரொட்டித் துண்டு ஒன்று சாப்பிடலாம்.

பச்சை நிற உணவுகள்

மதியம் பச்சை உணவுகளை சாப்பிடலாம் ஏனெனில் பச்சை நிறமுள்ள கீரைகள், காய்கறிகள், பச்சை நிறத் திராட்சை முதலியவைகளில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

இதயத்தையும் எலும்புகளையும் இந்த தாது உப்புக்கள் பலப்படுத்துகின்றன. இவை இதயம் சிறப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. எனவே மதிய உணவில் ஒரு றொட்டி அல்லது ஒரு பாண்துண்டுடன் வெங்காயம், மிளகாய், சீஸ், வெள்ளரிக்காய், முதலியவற்றை காய்கறி சாலட்டாக ஒரு கிண்ணம் சாப்பிடவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி ஒலிவ் ஒயில் ( ஒலிவ் எண்ணெய்) சாப்பிடவும். 50 கிராம் ஏதாவது ஒரு கீரையை அவியலாகச் சாப்பிடவும் அல்லது காய்கறி சூப்புடன் ஒரு துண்டு ரொட்டி அல்லது பாண் துண்டு மற்றும் பச்சை நிற திராட்சை சாப்பிடலாம்.

அமைதியான நீல நிறம்

இரவு உணவில் நீலம், ஊதா, தங்க நிறம், வெள்ளை ஆகியவற்றில் உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேருங்கள். நீலம், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள பழங்கள் காய்கறிகளில் உள்ள தாவரச் சத்துக்கள் உணர்ச்சிகளை மெல்ல அமைதிப்படுத்தி தூங்க வைக்கும். இரவில் ஒரு கிண்ணம் சாதம், ஒரு கிண்ணம் தயிர், பீட்ரூட், கத்தரிக்காய் லேசாக அவிய வைத்து ஒரு கிண்ணம், ஒரு ரொட்டி என்று சாப்பிடலாம். (அல்லது) பீட்ரூட் சாறு ஒரு கிளாஸ், ஒரு கிண்ணம் தயிர் சாதம், ஒரு ரொட்டி, கத்தரிக்காய் அவியல் அரை கிண்ணம் என்று சாப்பிடலாம்.

மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் எடை குறைந்து அழகாக மாறிவிடுவீர்கள். முதல் ஒரு மாதத்திலேயே இளமையான தோற்றம் கிடைக்கும். உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் சக்தியுடன் வாழவும் உணவுத் திட்டம் அவசியம் இதன் மூலம் 1000 முதல் 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமைத் துடிப்புடன் வாழலாம்.

குண்டான ஆண், பெண்கள் இந்த உணவு முறையை இன்றே தொடங்குங்கள், ஒரே மாதத்தில் கண்டிப்பாக பத்து கிலோ எடை குறைவது உறுதி. இதனால் ஆரோக்கியமும் உறுதிப்படுத்தப்படுகிறது.