🌺நவகிரக_தலங்கள் 🌺

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:58 | Best Blogger Tips

Image result for நவகிரக தலங்கள்Image result for நவகிரக தலங்கள்
https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png🌹சூரியனார்_கோவில்
கிமு 1100-ல் ஆண்டு முதலாம் குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் சுவாமி மலையிலிருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது.
இக்கோவிலில் குடிகொண்டுள்ள சூரியனார்ஆரோக்கியம்,வெற்றி,வாழ்வில் செழுமை ஆகியவற்றை அளிக்க வல்லவர். பயிர், பச்சைகள் செழித்துவளர ஓளி வழங்கும் சூரியனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் அறுவடைதிருவிழா கொண்டாடப்படுகிறது.
Image result for நவகிரக தலங்கள்
https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png
🌹திங்களூர்_கோவில்
இக்கோவில் கட்டப்பட்ட காலம் கி.மு 7-ஆம் நூற்றாண்டாக இருக்ககூடுமென கருதப்படுகிறது. சந்திர கடவுளுக்காக அமைக்கப்பட்ட இக்கோவிலுக்கு சென்று வருவதால் நீண்ட ஆயுளும், சுகமான வாழ்வும் கிடைக்கப் பெறும்.ஜோதிட சாஸ்திரப்படி,சந்திரனார் துன்பங்களையும், துயர்களையும் துடைக்கவல்லவர்.

https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png
🌹வைத்தீஸ்வரன்_கோவில்
இக்கோவில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் கடவுளுக்கு தனி சந்நிதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கடவுளை வணங்குபவருக்கு தைரியம்,வெற்றி பலம் ஆகியவை கிட்டும் என நம்ப படுகிறது.
இக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் பக்தர்கள் ' சித்தமிருத்தா' குளத்திற்குச் சென்று தங்களை தூய்மைப் படுத்திக் கொள்வது வழக்கம். இத்தண்ணீருக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளை
சுகப்படுத்தும் தன்மை உண்டு என்றும் நம்பப்படுகிறது.

https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png
🌹திருவெங்காடு
வால்மீகி ராமாயணத்தில் இத் திருத்தலம்பற்றிய குறிப்பு உள்ளது. எனவே 3000 வருடங்களுக்கு
மேலான பழமை வாய்ந்த இக்கோவில் புதனாருக்காக ஏற்படுத்தப்பட்டதாகும். நவக்கிரக கோயில்களில் திருவெங்காடு கடைசிக் கோவிலாகும்.புதனின் அருள்பார்வையால் அறிவும்,புத்தி
சாதூர்யமும் கிட்டும்.

https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png
🌹ஆலங்குடி
குருவிற்கான தலமாகும். இங்கு குருவின் அதிபதியான தட்சணாமூர்த்தி கடவுள் ஆராதிக்கப் படுகிறார். மற்ற கோள்களுக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகும்போது இத்தலத்தில் சிறப்புபூஜைகள் செய்யப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் சிவபெருமானிடமிருந்து பிரிந்த பார்வதி தேவி மீண்டும் சிவனுடன் இணைவதற்கு முன் இங்குள்ள அமிர்தபுஷ்கர்னி கரையில்
பிறப்பெடுத்ததாக புராணம் கூறுகிறது.

https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png
🌹கஞ்சனூர்
சிவ தலமான கஞ்சன்னூர் சுக்கிரனின் தலமாக கருதப்பட்டு மதுரை ஆதினத்தால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.திருவாவடுதுறை என்ற இடத்தில் இவ்வூர் உள்ளது இத்திருத்தலம் பாலசவனம்,
பிரம்மபுரி அக்னிஸ்தலம் என்றும் அறியப்படுகிறது. சிவ பார்வதி திருமண காட்சியை பிரம்மா இத்தலத்திலிருந்து கண்டதாக கூறப்படுகிறது. கணவன்மார்கள் தங்களின் மனைவியரின் நல்வாழ்விற்காக இங்கு வந்து வணங்கி செல்வதுண்டு.

https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png
🌹திருநள்ளாறு
இத் தலம் சனிபகவானுக்கென உள்ள ஒரே தலமாகும்.மற்ற கோள்களுக்கு சனி பகவான்இடபெயர்ச்சி செய்யும் தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை புரிவார்கள். நளமகராஜன் சனியின் பார்வையால் ஏற்பட்ட இடர்களை இங்கு
எழுந்தருளியுள்ள சனிபகவானை வணங்கியபின் நீங்கப் பெற்றார்.
பல்வேறு தீர்த்தக் குளங்களில் நளதீர்த்தம் மிகவும் முக்கியமானதாகவும். இக்குளத்தில் குளிப்பதனால்ஒருவரது தீமைகள்விலகி விடும் என நம்ப படுகிறது.

https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png
🌹திருநாகேஸ்வரம்
நவக் கிரங்களில் ஒன்றான ராகுவிற்கான திருத்தலமாகும்.
புராணங்களில் கூறப்பட்டுள்ள
ஆதிசேஷன்,தக்ஷன், கார்கோடகன் எனும் சர்ப்பங்கள் சிவபெருமானை இங்கு வழிப்பட்டதாக கூறப்படுகிறது. திருநள்ளாறு போன்றே இத்திருத்
தலத்திலேயும் நளன் சிவனை வழிப்பட்டது குறிப்பிடதக்கது.

https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png
🌹கீழ்பெரும்பள்ளம்
இத்தலம் மிகவும் பழமை வாய்ந்த சிவ தலமாகும்.நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவான்சிவனை இங்கு வழிப்பட்டார்.கேது பகவானிற்காக வரு தனி மூலஸ்தானம் இக் கோவிலில் உள்ளது.தேவர்கள் பாற்கடலை கடைய உதவியாக இருந்த வாசுகி நாகத்திற்கு ராகுவும்,கேதுவும் உதவியதாக புராணங்கள் கூறுகின்றன.
ஓம் நமசிவாய ஓம்

 நன்றி இணையம்