ஆடிவெள்ளியில் விரதம் இருந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:13 | Best Blogger Tips
ஆடிமாதத்தில் தான் தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்குநோக்கி தனது பயணத்தை துவக்குகிறது. இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும். ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் இந்த ஆடிமாதம் வெள்ளிக்கிழமையிலேயே துவங்குகிறது. ஆடிசெவ்வாய் தேடிக்குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, ஆடிவெள்ளியில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடிமாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீமிதித்தலும் என்று களைகட்டும்.

ஆடிமாதம் ன்பது ம்மனுக்கு உகந்தது ன்றாலும், குறிப்பாக மாரியம்மன் ழிபாடு ன்னும்சிறப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மா‌‌ரியம்மனுக்கு கூழ் ற்றிவீடுகளில்சிறப்பு பூஜைகள் செய்வார்கள். ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதிகொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும். ஆடிமாதம் 18ம்தேதி ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்தநாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத்தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.