நரேந்திர மோடி எனும் சாமுராய்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:36 | Best Blogger Tips



நரேந்திர மோடிக்கும் ராமாயண வாலிக்கும் ஒரு பெரும் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் அசகாய பலசாலிகள், யாராலும் நேர்மையான யுத்தத்தில் தோற்கடிக்க முடியாத சக்திமான்கள். யாருடன் எதிர்த்து போரிடுகிறார்களோ அவர்களின் பலத்தை இருவரும் பெற்று விடுவார்கள். காவிய நாயகன் வாலியை போலவே காவி நாயகன் மோடியும் அத்தகைய வரம் பெற்றவர். தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தையும் சேர்த்து பெற்றுக்கொண்டு களத்தில் இருப்பவர் . தேசிய அரசியலில் நரேந்திர மோடியின் எழுச்சிக்கு முன்பு வரை அரசியல் என்பது காங்கிரஸ் செய்யும் களவாணித்தனங்களை மட்டுமே மையமாக கொண்டு சுழன்று வந்தது.  ஆனால் மோடியின் தேசிய அரசியல் பிரவேசத்திற்கு பின் அனைத்தும் மோடி மையப்படுத்தப்பட்ட அரசியலாகவும் செய்தியாகவும் மாறி விட்டது. அரசியல், மற்றும் செய்தி உலகின் மைய அச்சு மோடியை வைத்து சுழல துவங்கி விட்டது.

பில்லா என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் “ என்னுடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஏன் ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்கியது “ என்று அதைப்போலத்தான் மோடி, அவரின் அரசியல் வாழ்வு முழுக்க திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு பீகாரில் பாஜக தயவுடன் இவ்வளவு நாளும் வெற்றி பெற்று அரசு அதிகாரத்தில் இருந்த நீதிஷ்குமார், தீடீரென மதச்சார்பின்மை பேய் பிடித்து பாஜகவுடனான 17 ஆண்டு கால கூட்டணியை முறித்து கொண்டார். அனைத்து பத்திரிக்கைகளும், ஆங்கில செய்தி ஊடகங்களும் ஏதோ நிதிஷ்குமார் அடுத்த பிரதமர் என்ற அளவுக்கு பேசத்துவங்கி விட்டன. மூன்றாவது அணி ஏற்பட்டு அது ஆட்சியை கைப்பற்றி விடும் என்பது போன்ற புது உளறல்களை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். மோடிக்கு இது பெரும் பின்னடைவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இவற்றை எல்லாம் பொய்பிக்க இருக்கிறார் மோடி எனும் சாமுராய். களத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது போர் வெற்றியை தீர்மானிப்பதில்லை, எத்தனை பேர் உணர்வோடும், வீரத்தோடும் போராடுகிறார்கள் என்பது தான் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாகும்.
மோடியை தனிமைப்படுத்துவது தான் இந்திய அரசியலுக்கு நல்லது என்கிறார் நிதிஷ் . ஆனால் தன்னந்தனியாக வென்று வாகை சூடும் அயராத சாமுராய் ஆக விஸ்வரூபம் எடுப்பார் மோடி. பலமான எதிரிகளிடம் மோதும் போது தான் அபாரமான பலமுள்ளவனாக மாறுவது வீரர்களுக்கு இயல்பு. சோதனைகளை சாதனைக்கு உரிய களமாக மாற்றுவது சரித்திர நாயகர்களுக்கு உரியது . நாட்டை சீரழிக்கும் காங்கிரஸ் அரசு, அதன் அயல் நாட்டு தலைமையின் ஆபத்தான செல்வ வளம், கிறிஸ்த்தவ எண்ணிக்கை பலம்,. இந்தியாவை துண்டாடத்துடிக்கும் துரோகிகளுடனான உறவு. அந்நிய சதிகள், கம்யூனிஸ விஷ வித்துக்களின் வதந்தி பிரச்சாரம், தீவிரவாதிகளின் பயம் மோடி வந்தால் நம்மால் வாலாட்ட முடியாதே என்பதற்காக பூணும் மதச்சார்பின்மை வேடம். அயல் நாடுகள் சுயமரியாதையுள்ள , சுய அறிவுள்ள, தேசபக்தியுள்ள சிந்திக்க தெரிந்த வலுவான தலைமை அமையக்கூடாது என்பதற்காக தங்களின் முழு பலத்தையும் மோடிக்கு எதிராக பிரயோகிக்கின்றன.  சொந்த சகோதரர்களுக்குள் பிரிவினையை விதைத்து நாட்டை நாசமாக்க விளையும் அந்நிய சக்திகள், அதற்கும் பலியாகும் சில அப்பாவிகளையும் உள்ளடக்கியுள்ள படையை கொண்டு போருக்கு புறப்படும் இந்த வீரனுக்கு துணை நிற்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை .

(Via  http://www.tamilhindu.com/2013/06/modi-the-samurai/)

நரேந்திர மோடி அவர்கள், குஜராத்தை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார். தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதில், அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர், மின்சாரம், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத்துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார். இவருடைய சாதனையைப் பாராட்டி, “இந்தியா டுடே” நாளிதழ், “இந்தியாவின் சிறந்த முதல்வர்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. மேலும், குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு “இ-ரத்னா” விருதை வழங்கி கௌரவித்தது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலும் நிர்வாகமே, எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமானது எனக் கூறியது மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தியும் காட்டிய நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 17, 1950

பிறப்பிடம்: வட்நகர், மேஹ்சானா மாவட்டம், குஜராத் மாநிலம், இந்தியா

பணி: அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு
நரேந்திர மோடி அவர்கள், 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் இந்தியாவின் குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள “வட்நகர்” என்ற இடத்தில் ‘தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி என்பவருக்கும், ஹூராபேன்னுக்கும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு ஆறு சகோதரர்கள் உள்ளனர்.


ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய ஆரம்பக் கல்வியை ‘வட்நகரில்’ உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய நரேந்திர மோடி அவர்கள், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே, ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்திவந்த தன்னுடைய தந்தைக்கு உதவிகள் பல செய்துவந்தார். தன்னுடைய எட்டு வயதிலேயெ, இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட ‘ஆர்.எஸ்.எஸ்’ என அழைக்கப்படும் ‘தேசிய தொண்டர் அணியில்’ உறுப்பினராக இணைந்த மோடி அவர்கள், அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இதனால், குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.


அரசியல் வாழ்க்கை
சிறுவயதிலேயே ‘ஆர்.எஸ்.எஸ்–இல்’ தன்னை இணைத்துக்கொண்ட மோடி அவர்கள், ‘அகில பாரதிய வித்யார்தி பரிஷத்’ என்னும் மாணவர் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார். இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்த பொழுது, போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட மோடி அவர்களுக்கு, பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. மோடியின் அயராத உழைப்பும், தன்னலமற்ற ஈடுபாட்டையும் கண்ட பிற கட்சி தலைவர்கள் அவரை வெகுவாகப் பாராட்டினர். ‘ஆர்.எஸ்.எஸ்-இன்’ தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த அவர், பிறகு பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.
குறுகிய காலத்திற்குள், அத்வானியால் 1998 ஆம் ஆண்டு ‘குஜராத்’ மற்றும் ‘இமாசலப் பிரதேச’ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி அவர்கள், வெகு விரைவில், ‘இமாசலப் பிரதேசம்’, ‘பஞ்சாப்’, ‘ஹரியானா’, ‘சண்டிகர்’, மற்றும் ‘ஜம்மு காஷ்மீர்’ போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு ‘அடல் பிகாரி வாஜ்பாய்’ பிரதமராகப் பதவியேற்றபொழுது, மோடிக்கு ‘தேசிய செயலாளர்’ பதவி வழங்கப்பட்டது.

குஜராத் முதல்வராக மோடி
தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்ட மோடி அவர்கள், 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, குஜராத் முதல்வராக இருந்த ‘கேசுபாய் பட்டேல்’ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். பின்னர், இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அவர், பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு நடந்த “கோத்ரா ரயில் எரிப்புச்” சம்பவத்தைத் தொடர்ந்து, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும், அதே ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக குஜராத் முதல்வர் பதவியை அலங்கரித்தார். இதனால், குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். அதோடு நின்று விடாமல், நரேந்த மோடியின் அரசு மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களினால், குஜராத் மக்கள் அனைவரும் பலன் அடைந்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநிலத் தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்று, இந்திய அரசியலில் மாபெரும் சாதனைப் படைத்தார்.


முதல்வராக மோடியின் சாதனைகள்
பல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி அவர்கள், சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, “குட்கா” என்னும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார். மேலும், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.

விருதுகளும், மரியாதைகளும்
  • 2006 – ‘’இந்தியா டுடே’ நாளிதழ் இந்தியாவின் ‘சிறந்த முதல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது.
  • குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கி கௌரவித்தது.
  • 2009 – ஆசியாவின் சிறந்த ‘எப்.டி.ஐ பெர்சனாலிட்டி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
  • 2012 – ‘டைம்’ பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதிகளில்’ ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.
  • நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.
‘ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவை பொருளாதார சுதந்திரம்தான், இது இல்லாவிட்டால், பூரண சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ஒரு போதும் சொல்ல முடியாது’ என்பது பொருளாதார ஆய்வாளர்களின் கருத்து ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, குஜராத் மாநிலம் பல துறைகளில் வளர்ச்சிக் கண்டு, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்றால், மோடியின் அரசியில் ஆளுமை தான் அதற்கு முக்கிய காரணம். மேலும், அவர், மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தனது நடவடிக்கையாலும், செயல் திட்டங்களாலும் நிரூபித்துக் காட்டி, மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது


( Via http://tamil.culturalindia.net/narendra-modi.html)




இவைகள் அனைத்து இணையத்திலிருந்து எடுத்தது

தர்ப்பணம் . . . . . .

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:21 | Best Blogger Tips

1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.

21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.

24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.
25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.

29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.


33. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்

நன்றி இணையம்

"கர்மவீரர்"

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:16 | Best Blogger Tips

"கர்மவீரர்" என அன்பாகஅழைக்கப்பட்ட காமராஜரின் வாழ்க்கை வரலாறு,அனவருக்கும் ஒரு பாடம்:1903 ஜூலை 15: இன்று விருதுநகராக வளர்ந்திருக்கும் அன்றையதிருநெல்வேலி மாவட்டம்விருதுபட்டியில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிக்குமகனாக பிறந்தார்.

1914 : ஆறாம் வகுப்புடன் பள்ளிசெல்வதை நிறுத்திக் கொண்டார்.

1919 : ரவுலட் சட்டத்தை எதிர்த்துகாந்திஜியின் அழைப்பை ஏற்று, காங்கிரசின் முழு நேர ஊழியரானார்.

1920 : ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கு கொண்டார். திருமண பேச்சை தாயார் தொடங்கிய போது மணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

1922 : சாத்தூர் தாலுகா, காங்கிரஸ் மாநாட்டில் வரவேற்புச் செயலாளராக பணியாற்றினார்.

1923 : நாகபுரி கொடி போராட்டத்தில் பங்கு கொண்டார். மதுரையில்கள்ளுக்கடை மறியலில்ஈடுபட்டார்.

1925 : கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1927 : சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த காந்திஜியிடம் அனுமதி பெற்றார். (போராட்டம் நடப்பதற்குள் நீல் சிலையை அரசே அகற்றியது)

1928 : சைமன் குழுவை எதிர்த்து,மதுரையில் காமராஜர் போராட்டம்.

1930 : வேதாரண்யத்தில் நடந்தஉப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதால், இரண்டு ஆண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1931 : காந்தி-இர்வின் ஒப்பத்தம்காரணமாக காமராஜர் விடுதலை செய்யப்பட்டார். விருதுநகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரத்திலிருந்து சென்னை மாகாண காங்கிரஸ் செயற்குழுவுக்கு

தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1932 : போலீஸ் ஸ்டேஷன் மீதுவெடிகுண்டு வீசியதாக சதி வழக்கு, காமராஜர் மீது சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார்.

1933 : பிரிட்டனில் நடந்த வட்டமேஜை மாநாடு தோல்வியுற்றதால், நாடெங்கும் கிளர்ச்சி ஏற்பட்டது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காமராஜரும் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

1934 : காமராஜர் உழைப்பால், பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் பெற்று வென்றது.

1935 : டிச.28ம் தேதி காங்கிரஸ் பொன்விழா விருதுநகரில் காமராஜர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

1936 : காரைக்குடியில் நடந்தகாங்கிரஸ் கமிட்டித் தேர்தலில்சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1937 : சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். விருதுநகர் நகராட்சி மன்றத்தேர்தலில் 7வது வார்டில் போட்டியிட்டு வென்றார். நகராட்சித் தலைவராகும்படி பலரும் வேண்டியும் மறுத்து விட்டார்.

1940 : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்றார்.

1941 : யுத்த நிதிக்கு பணம் தரவேண்டாம் என மக்களிடையே பிரசாரம் செய்ததால், பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே மே 31ல் விருது

நகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942 : ஆகஸ்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு, வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

1945 : இரண்டாவது உலகப்போரில் பிரிட்டிஷார் வெற்றி பெற்றதால், காமராஜர் விடுதலை செய்யப்பட்டார்..

1946 : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு சென்னை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

1947 ஆக.15: சுதந்திரம் கிடைத்ததும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.

1954 : குலக்கல்வி திட்ட எதிர்ப்புகாரணமாக ராஜாஜி முதல்வர்பதவியை ராஜினாமா செய்யவும், சட்டசபை கட்சி தலைவராக காமராஜர் போட்டியிட்டு வென்றார்.

1954, ஏப்.13: காமராஜர் முதல்வரானார்.

1956 : மொழிவாரி மாநில பிரிவினையின் படி தமிழகம் உருவாவதற்கு ஆதரவு தெரிவித்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார்.

1957 : பொதுத்தேர்தலில் போட்டியிட்டு, வென்று, இரண்டாவது முறையாக முதல்வரானார்.

1960 : ஏழைக் குழந்தைகளுக்கு 11ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிப்பதற்கு ஆணையிட்டார்.

1962 : பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதல்வரானார்.

1963 : எல்லோருக்கும் இலவசகல்வி திட்டத்தை அமல்படுத்தினார். பின் பதவியை ராஜினாமாசெய்தார்.

1964 : அனைத்திந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1966 : இந்திரா பிரதமர் ஆவதற்கு, காமராஜர் பெரும் முயற்சி செய்தார்.

1967 : பொதுத்தேர்தலில் காமராஜர் தோல்வி.

1969 : நாகர்கோவில் பார்லிமென்ட் இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாயார் சிவகாமி அம்மையார் மறைவு.

1971 : பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி. பார்லிமென்ட்உறுப்பினராக காமராஜர் தேர்வு.

1975: அக்.2ம் தேதி எதிர்பாராமல் காமராஜருக்கு உடல் வியர்த்தது. டாக்டர் வருவதற்குள் உயிர் பிரிந்தது.




Via  பச்சை தமிழர் காமராஜர்