இந்து மதம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:40 | Best Blogger Tips
இந்து மதம் என்பது வெறுமனே நம்பிக்கை சார்ந்த மார்க்கம் அல்ல...அது வாழ்க்கையின் ஆணிவேரில் இருந்து உச்சிக்கிளை வரை வழிகாட்டும் இனிய மதம்...காமம்,காதல்,விஞ்ஞானம்,ஆன்மீக அமைதி,தியான வழிமுறைகள் என ஒவ்வொரு வகையிலும் இந்துமதம் தன் பங்களிப்பை வழங்கி உள்ளது 

விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்ச அவதாரம். உலகின் முதல் உயிர் வாழ்க்கை நீரிலேயே உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது 

இரண்டாவது கூர்ம அவதாரம், கூர்மம் என்றால் ஆமை. ஆமையானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இது உயிர் வாழ்க்கையானது நீரில் இருந்து நிலத்திற்கு பரவியமையைக் காட்டுகிறது .

மூன்றாவது வராகம். இது நிலத்தை குடைந்து சென்றதாக கூறுகிறது இந்து மதம்...அதாவது பன்றி அவதாரம். இது உயிரினங்கள் நீரிலிருந்து முற்றும் முழுதாக நிலத்தில் வாழ இயைபாக்கம் அடைந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது.

நான்காவது நரசிம்மம். இது அரை மனித அரை மிருக உருவமாகும். இது உடல் ரீதியாக விலங்கு நிலையில் இருந்து மனித உருவமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை எடுத்துக்காட்டுகிறது.

ஐந்தாவது வாமன அவதாரம். இது குள்ள மனித அவதாரம். இது மிருக சுபாவம் கொண்ட மனித உருவத்தில் இருந்து புத்தி கூர்மை உள்ள மனித இனமாக மாறிய நிலையை உணர்த்துகிறது

ஆறாவது பரசுராம அவதாரம். அவர் கையில் கோடரி கானப்படுகிறது
இது காடுகளில் மிருகங்களை வேட்டை ஆடித்திரிந்த மனித நாகரீகத்தின் படி நிலையை பிரதிபலிகிறது.

ஏழாவது ராம அவதாரம். மனித மேம்பாட்டின் அடுத்த படி நிலையாக மனிதன் ஆயுதங்களை உருவாக்கப் பழகிக் கொண்ட நிலையையும், கிராமங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்புகள் உருவாகத் தொடங்கிய நிலையையும் உணர்த்துகிறது.

எட்டாவது பலசுராம அவதாரம். அதில் பரசுராமர் கலைப்பையுடன் காணப்படுகிறார். இது மனித நாகரீகத்தில் விவசாய அபிவிருத்தி ஏற்பட்டதைக் காட்டுகிறது.

ஒன்பதாவது கிருஷ்ண அவதாரம். அதில் கிருஷ்ண பகவான் பசுக்களுடன் காணப்படுகிறார். அது மனிதன் மிருகங்களை வீட்டுத்தேவைகளுக்காக பயன்படுத்தத் தொடங்கியமையையும், கால் நடை வளர்ப்பை மேற்கொண்டமையையும் , அன்று நிலவிய பொருளாதார மேம்பாட்டையும் காட்டுகின்றது.

இறுதியாக அதாவது பத்தாவது அவதாரமாக நாம் எதிர்பார்த்திருப்பது கல்கி அவதாரம். இதில் கல்கி பகவான் தேவதாதி என்னும் வேகமான குதிரையில் வந்து உலகை அழிப்பார் என நம்பப்படுகிறது. இன்று இடம்பெரும் இயற்கை அழிவுகளும் மனிதனால் மேற்கொள்ளப்டும் அழிவை நோக்கிய செயற்பாடுகளும் இதற்கான அறிகுறிகளாக இருக்கின்றன

இதைவிட குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என கூறப்பட்ட கருத்தை கூட இந்து மதம் வானரம் என்று கூறப்படும் அனுமன்,வாலி,சுக்கிரீவன் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் உலகிற்கு சொன்னது....

தர்மத்தின் பாதையில்
கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?

அனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால், கடவுளின் முன், நேர்எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும், மயிலும் முருகனிடமும், பாம்பும், கருடனும் விஷ்ணுவிடமும், சிங்கமும், காளையும் சிவபார்வதி முன்னிலையிலும் சாந்தத்துடன் கூடி இருப்பதைக் காணலாம். எதிரெதிர் குணமுள்ள விலங்குகளே, கடவுளின் முன் கூடி வாழும் போது, ஒரே இனத்தில் பிறந்த மனிதன் அன்புடன் கூடி வாழ்ந்தால் என்ன என்பதை இது வலியுறுத்துகிறது
 
Via FB தர்மத்தின் பாதை