பறக்கும் மீன்கள் பற்றிய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 9:17 | Best Blogger Tips

Photo: பறக்கும் மீன்கள் பற்றிய தகவல்கள்:-

பறக்கும் மீன்கள் உலகம் முழுவதும் குறிப்பாக சூடான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதியில் வசிக்கிறது. ஏழு ஒன்பது இனங்களில் குழுவாக சுமார் 64 இனங்கள் உள்ளன. அவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் வடிவத்தில் இருக்கும். மேற்பரப்பை உடைக்கவும் நீருக்கடியில் வேகத்தை அதிகரிக்கவும், மேலும் அவற்றின் பெரிய, விங் போன்ற pectoral துடுப்புகள் அவர்களுக்கு காற்றில் பறக்க உதவுகிறது.

   பறக்கும் மீன் பல உண்டு அவைகள் தங்களை இரையாக்கி கொள்ள வரும் மற்ற காடல் உயிரினங்களில் இருந்து தப்பிக்க, பறக்கும் திறன் பெற்றிருக்காலாம் என்று கருதப்படுகிறது. பிளாங்டன் உள்ளிட்ட மீன்கள் உணவுக்காக  பறக்கும்.

     பறக்கும் மீன் துடுப்புகள் எல்லாம் மேல் மடல்களைக் காட்டிலும் நீண்ட கீழ் மடல் கிளைவிட்ட வால்களில் இருக்கிறது. பல இனங்கள் இடுப்பு துடுப்புகள் பெரியதாக   இருக்கும் இவை நான்கு இறகு பறக்கும் மீன் எனப்படும்.

    ஒரு மணி நேரத்திற்கு 37 மைல் (60 கிலோமீட்டர்) பறக்கிறது. பறக்கும் மீன் நீரினுள் இருக்கையில் தன் இறக்கை போன்ற துடுப்பை, உடலோடு ஒட்டியவாறு வைத்திருக்கும். வேகமாகச் செல்ல நினைக்கையில், நீரினுள் இருக்கும் போதே பறப்பதற்கு முன் ஓடுதளத்தில், ஓடும் விமானம் போல் வேகமெடுத்து, நீரின் மேற்பறப்பை நோக்கி நீந்தி வந்து, நீர்பரப்பை அடைந்ததும் தன் பக்கத்துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித் தாவும். பெரிய விசை நீருக்கடியில் பெறுவதன் மூலம் மேல்நோக்கி  நான்கு இறகு பறக்கும் மீன் மேற்பரப்பை உடைக்கிறது சில நேரங்களில் 4 அடி (1.2 மீட்டர்) அதிகமான உயரங்களை அடைந்து 655 அடி (200 மீட்டர்) வரை, நீண்ட தூரம்  காற்றில் பறக்கிறது.

  பறக்கும் மீன்கள் பல கடல் உயிரினங்கள்  போல, ஒளியை கவர்கிறது. இரவில் மீன் பிடிக்கும் மீனவர்கள் ஒளியை பாய்ச்சி இந்த மீன்களை அதிகமாக பியிக்கிறார்கள்
பறக்கும் மீன்கள் உலகம் முழுவதும் குறிப்பாக சூடான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதியில் வசிக்கிறது. ஏழு ஒன்பது இனங்களில் குழுவாக சுமார் 64 இனங்கள் உள்ளன. அவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் வடிவத்தில் இருக்கும். மேற்பரப்பை உடைக்கவும் நீருக்கடியில் வேகத்தை அதிகரிக்கவும், மேலும் அவற்றின் பெரிய, விங் போன்ற pectoral துடுப்புகள் அவர்களுக்கு காற்றில் பறக்க உதவுகிறது.

பறக்கும் மீன் பல உண்டு அவைகள் தங்களை இரையாக்கி கொள்ள வரும் மற்ற காடல் உயிரினங்களில் இருந்து தப்பிக்க, பறக்கும் திறன் பெற்றிருக்காலாம் என்று கருதப்படுகிறது. பிளாங்டன் உள்ளிட்ட மீன்கள் உணவுக்காக பறக்கும்.

பறக்கும் மீன் துடுப்புகள் எல்லாம் மேல் மடல்களைக் காட்டிலும் நீண்ட கீழ் மடல் கிளைவிட்ட வால்களில் இருக்கிறது. பல இனங்கள் இடுப்பு துடுப்புகள் பெரியதாக இருக்கும் இவை நான்கு இறகு பறக்கும் மீன் எனப்படும்.

ஒரு மணி நேரத்திற்கு 37 மைல் (60 கிலோமீட்டர்) பறக்கிறது. பறக்கும் மீன் நீரினுள் இருக்கையில் தன் இறக்கை போன்ற துடுப்பை, உடலோடு ஒட்டியவாறு வைத்திருக்கும். வேகமாகச் செல்ல நினைக்கையில், நீரினுள் இருக்கும் போதே பறப்பதற்கு முன் ஓடுதளத்தில், ஓடும் விமானம் போல் வேகமெடுத்து, நீரின் மேற்பறப்பை நோக்கி நீந்தி வந்து, நீர்பரப்பை அடைந்ததும் தன் பக்கத்துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித் தாவும். பெரிய விசை நீருக்கடியில் பெறுவதன் மூலம் மேல்நோக்கி நான்கு இறகு பறக்கும் மீன் மேற்பரப்பை உடைக்கிறது சில நேரங்களில் 4 அடி (1.2 மீட்டர்) அதிகமான உயரங்களை அடைந்து 655 அடி (200 மீட்டர்) வரை, நீண்ட தூரம் காற்றில் பறக்கிறது.

பறக்கும் மீன்கள் பல கடல் உயிரினங்கள் போல, ஒளியை கவர்கிறது. இரவில் மீன் பிடிக்கும் மீனவர்கள் ஒளியை பாய்ச்சி இந்த மீன்களை அதிகமாக பியிக்கிறார்கள்.
 
Via FB Karthikeyan Mathan

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:39 | Best Blogger Tips
பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும். எளிதில் பிடித்து அடித்து விடலாம்.

via : தமிழ் சித்தர்கள் 

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும். எளிதில் பிடித்து அடித்து விடலாம்.

Via : தமிழ் சித்தர்கள்

மன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:34 | Best Blogger Tips
மன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்!

பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள்.

அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை உணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

டென்ஷன், மறதி, படபடப்பு, கோபம் உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்க வழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும்.

அடுத்து உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தக் குறைபாடு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம்.

தடுக்காமல் விட்டால் மன அழுத்தமாக மாறிவிடும். அப்படி ஆகும் போது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும்.

வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும்.

டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம்.

குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.

இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்டவைகளை தடுக்கலாம்.

இந்த வயதில் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.

நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும்.

தேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கிடைக்கும். 30 வயதுக்கு மேல் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தவும். வாக்கிங் நல்ல பலன் அளிக்கும்.

மது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்களால் டென்ஷன் குறையும் என்று நினைப்பது மூட நம்பிக்கை. இது போன்ற பழக்கங்களை கைவிடுவது அவசியம். சரியான நேரத்துக்கு தூங்கும் பழக்கம் மன அமைதிக்கு நல்லது.

ஆரம்பத்தில் டென்ஷன், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள் விரைவில் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

ஆஸ்துமா, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள், நாள்பட்ட வலி ஆகியவை மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை அதிகரிக்கும். உடலில் நோய்கள் குடியேறுவதற்கான சாவியே டென்ஷன் தான். டென்ஷன் என்ற சாவியை தொலைத்தால் நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ முடியும்.    

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்